25 ஆண்டுகளாக இன்பத் தமிழ் வானொலியின் தமிழ்மொழிச்சிதைப்பு

 

இன்பத்தமிழ் என்பதில் இன்பம் என்பது தமிழ்ச்சொல் அல்ல.இதில் இன்பம் என்பது தமிழ் அல்ல. இன்பத்தமிழை தமிழில் சொல்வதானால் மகிழ்தமிழ், இனியதமிழ் என்பதே தமிழாகும்.

 

1996 ஆம் ஆண்டு இந்தப்பெயரை வானொலிக்கு சூட்டியபோது மொழிஅறிவு இல்லாமல் இருந்திருக்கலாம். தவறில்லை.ஆனால் இவர் வானொலிக்குப் பெயர் வைக்கும்போது உண்மைத்தன்மையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் இன்று இனியதமிழ் வானொலியாக தமிழை வளம்படுத்தி மொழிவளம் சீரழிவை தடுத்திருக்கலாம்.25 ஆண்டுகளாக மொழி உணர்வின்றி கலப்புத்தமிழை தாங்குவது இவருடைய 25 ஆண்டு ஊடகப்பணியால் தாய்மொழியை இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறார். இவர் இன்பத்தமிழை இனியதமிழ்வானொலியாக அல்லது மகிழ்தமிழ் வானொலியாக மாற்றுவரா? மாற்றமாட்டார்.அதற்கு ஒரு நொண்டிச்சாட்டைச் சொல்லுவார். 25 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப்பெற்ற வானொலி பெயர் மாற்ற முடியாது என்பது.இங்கே மொழிவளம்படுத்துவது ஊடகப்பணியின் முதல் பணியாகும்.இதற்கு செந்தமிழன் சீமான் ஒற்றைமனிதனாக கடந்த 11ஆண்டுகளாக கலப்பில்லாத தமிழைப்பேசித்தான் தாழ்வுமனநிலையில் இருந்த 12கோடி தமிழர்களையும் விழிப்படையச் செய்து தமிழ்த்தேசியத்திற்கான அறிவாயுதப்போரை சிறப்பாக தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் தடையையும் தாண்டி களமாடுகிறார்.

 

இவர் கடந்த 25 ஆண்டாக கலப்புத்தமிழை தமிழ் மக்கள் மீது திணித்துக்கொண்டிருக்கிறார்.இவருக்கு மொழியைப்பற்றி அக்கறை எள்ளளவும் இல்லை.தன்னுடைய புகழுக்காக மொழியை இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்.

 

தமிழ் 50000 ஆண்டு தொன்மை நிறைந்தது.தமிழ் தனித்து இயங்கும் வல்லமை நிறைந்தது.இறைவன் பேசிய இனியமொழி.உலகமொழிகளின் தாய் தமிழ்மொழி.தமிழ் வீரம் செறிந்தமொழி.வீரியமாக களமாடும் மொழி.செழிப்புகளும் வளங்களும் நிறைந்தமொழி.அந்தமொழியை அழகாக சிறப்பாக வீரக்குரலோடும் கூர்மையான வீச்சோடும் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியப்பரப்பில் தாழ்ந்த தமிழுக்கு உயிர் கொடுத்த பெருமை தமிழ்த்தேசியப்போராளி செந்தமிழன் சீமானுக்குரியது.

 

திரு.பிரபா அவர்கள் செந்தமிழன் சீமானின் பேச்சைக் கேட்டு மொழியறிவை வளர்த்துக் கொள்வது சிறப்பாகும்.சீமானை இழிவுபடுத்துவது திராவிட திருடர்களோடு சேர்ந்து சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் வீழ்த்தவதற்கான பணி.நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.உங்கள் அவதூறுகள் தான் எம்மை செழிமைப்படுத்தி வலிமை பெறுவோம்.

 

இன்பத்தமிழில் பிரபா அவர்கள் தமிழ்மொழியை வளம்படுத்தும் அறிவை அக்கறையற்று இருப்பது மிகமிக இழிவாகும்.

 

பிரபா “வருடம்” என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறார். வருடம் தமிழ்ச்சொல் அல்ல. ஆண்டு என்பதே தமிழ்ச்சொல். பிரபாவுக்கும் மொழிவளத்தைப் பெருக்கவேண்டும் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லை. இதேபோல சில தவறான சொற்களைப் நாம் கீழே வழங்குகிறோம்.

 

வியாக்கியானம் என்பதன் பொருள் தெரியாமல்  25 ஆண்டுகளாக தத்தளிக்கும் இன்பத்தமிழ் பிரபா எம்மிடத்தில் இருந்து கற்றுக்கொண்டு மொழி வளத்தை வளமாக்குங்கள்.

வியாக்கியானம் தமிழ்ச்சொல் அல்ல.வியாக்கியானம் என்பதன் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் விளக்கவுரை.

திராணி தமிழ் அல்ல.திராணி என்ற சொல்லுகுரிய தமிழ்ச்சொல் தகுதி, பலம் என்ற இரண்டு சொற்கள் உண்டு.

பயம் என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல.பயம் என்ற சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் அச்சம்.

 

எம்மொழியை நாம்தான் செழிப்பாக்கவேண்டும்.இது எமக்குரிய பொறுப்பு.இதை 25 ஆண்டு நிறைவில் ஆவது இன்பத்தமிழ் ஒலி வானொலி ஊடகப்பொறுப்புணர்வோடு பணியாற்றவேண்டும்.

இக்கட்டுரை கனடா மற்றும் உலகம் தழுவி வாழும் மக்களுடைய தகவல்களையும் முறைப்பாடுகளையும் பறை ஊடகக் குழுமம் வெளியிடுகிறது..இதுபறை ஊடக குழுமத்தின் எண்ணப்பாடு அல்ல. இக்கட்டுரைக்கு பறை ஊடகக் குழுமம் பொறுப்பல்ல.

“கற்க கசடற கற்றவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக”

 

இக்குறளின் பொருள் புரிந்தால் உங்களுக்கு சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *