26.3 கோடி கனடா மாநகர,மாநில,நடுவண் அரசின் நிதிப்பங்களிப்பில் தமிழ் குமூக மையம்

கனடா ஒன்ராரரியோ மாநிலம் இசுக்காபுரோ நகராட்சியில் ரூச் பாக் தொகுதியில்  அமையவிருக்கும் தமிழ் குமூக மையத்திற்காக ஒன்ராரியோ மாநில அரசும் கனடா நடுவண் அரசும் இணைந்து 26.3 கோடி கனடா வெள்ளிகளை வழங்கியுள்ளன. இம்மையம் குமூக, பண்பாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்நோக்கு செயற்பாடுகளை உள்ளடக்கிய மாநில மற்றும் நடுவண் அரசுகளின் கூட்டு உடன்பாட்டின் அடிப்படையில் அமையவுள்ளது.

இதற்கான நிதி ஒப்புதலுக்காக 1200 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒன்ராறியோ மாநில அரசு தமிழ் குமூக மையத்திற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதுடன், ஒன்ராறியோ மாநிலத்தில் நிறுவப்படவுள்ள முதலாவது தமிழ் குமூக மையம் என்ற வகையில் இதற்காக 11.99 கோடி கனடா வெள்ளிகளை வழங்குவதில் ஒன்ராறியோ மாநில அரசுபெருமை கொள்கிறது.

“இங்கு அமையும் தமிழ் குமூக மையத்தினை கனடா வாழ் தமிழ் மக்களின் கனவாக மட்டுமன்றி அது அவர்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசாகவே நான் பார்க்கிறேன்,” என இசுக்காபுரோறூச்பார்க்கிற்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பிரான விசய் தணிகாசலம் தெரிவித்தார். இசுக்காபுரோவில், தமிழ் குமூகத்தில் ஒரு இளையவனாக வளர்ந்து, இந்த சமூகத்துடனேயே தொடர்ந்து பயணித்த ஒருவன் என்ற முறையில், தமிழ் குமூக மையமானது இப்பகுதியில் வாழும் முது தமிழர்களுக்கும் இளையவர்களுக்கும் எவ்வளவு முதன்மையானது  என்பதை நான் நன்கறிவேன்.”

தமிழ் குமூக மையத்தின் வளர்ச்சியையும், எதிர்வரும் ஆண்டுகளில் இசுக்காபுரோவில் வாழ்பவர்கள் இதனூடாக அடையவுள்ள நன்மைகளையும் நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.


விசய் தணிகாசலம்
மாநில சட்டமன்ற உறுப்பினர்இசுக்காபுரோ றூச் பார்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *