25 ஆண்டுகளாக இன்பத் தமிழ் வானொலியின் தமிழ்மொழிச்சிதைப்பின் தொடர்-2

1996 ஆம் ஆண்டு முதல் மொழிச்சிதைவை முன்னெடுத்து வரும் இன்பத்தமிழ் வானொலி இதுவரை தமிழ் மொழிக்காக பெருமைப்படக்கூடிய பணிகளைப் பற்றி எண்ணம் கொள்ளாது, தவறுகளை உணர மறுப்பது,அறிவின் வளர்ச்சியில் தம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது பற்றிய எண்ணமும் உணர்வும் இன்றி வானலையில் பணியாற்றுவது. தவறு என்று உணரக்கூடிய பக்குவமில்லாமை,

காவாலி என்பது தமிழ்ச்சொல் அல்ல.பொறுப்பிலி ஊர்சுற்றி என்பது தமிழ்ச்சொற்கள் ஆகும்.

தறுதலை என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல.பொறுப்பற்றது என்பது தமிழ்ச்சொல்.

வாசி என்பது தமிழ்ச்சொல் அல்ல.படி என்ற சொல் தமிழ்ச்சொல்.

தில் என்றசொல்லுக்கு பொருள் இல்லை.

 பரதேசி என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல.அயலான் என்பதே தமிழ்ச்சொல்.

இக்கட்டுரை காழ்ப்பணர்வுக்கானதல்ல. மொழி அறிவை ஏனையோரோடு பகிர்ந்து தமிழின் வளத்தை சீர் செய்தல்.புரிந்தவர்கள் தெளிவுபெற்று வளமாக்குங்கள்..

இன்பத்தமிழ் வானொலி ஒவ்வொரு மணித்துளியும் இறைவன் பேசிய இனியமொழி தமிழை அழித்துக்கொண்டிருக்கிறது.இதை கேட்கின்ற வானொலிநேயர்களும் எம் தாய்மொழியை அழிப்பதற்கு இன்பத்தமிழ் வானொலிக்கு துணையாக நிற்பது அவுத்திரேலிய மண்ணுக்கு இழிவாகும். அவுத்திரேலிய மண்ணில் வாழும் தமிழர்களுக்கும் மிகமிக இழிவாகும்.இந்த இன்பத்தமிழ் வானொலியின் தமிழ்மொழி அழிப்பைத் தடுக்க அவுத்திரேலிய மண்ணில் தமிழ்மொழி அறிவுள்ள தமிழர்கள் இல்லையா?

இன்பத்தமிழ் வானொலியின் தமிழ்மொழி அழிப்பை கனடாவாழ் தமிழர்கள் தட்டிக்கேட்டால்,இன்பத்தமிழ் வானொலி திட்டித் தீர்ப்பதன் உள்நோக்கம் சிங்களத்திற்கு துணைபோவதா?தமிழ்த்தேசிய வளர்ச்சியைத்தடுப்பதா?

இறைவன் பேசியமொழி. 50000 ஆண்டு. தொன்மைநிறைந்த மொழி.உலகமொழிகளின் தாய்மொழி.கலை இலக்கியம் பண்பாடு நாகரீகம் மருத்துவம் என பல்துறைச் செழிப்போடு வாழும் மொழி.

இன்பத்தமிழ் வானொலியை விட பல சிறப்புகளோடு தமிழ்மொழியை தமிழ்மக்களின் இறைமையைப் பாதுகாக்கக்கூடிய வானொலியை அவுத்திரேலிய தமிழர்கள்நிறுவவேண்டும்.

 

தமிழ் வாழ தமிழ் பேசுவோம்.

தமிழைப்பேசி தமிழனாக வாழ்வோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *