இன்பத்தமிழ் வானொலி துயர் தமிழ் வானொலியாக தமிழ்தேசிய அழிப்புப் பரப்புரையில்!

 

இந்த ஐநா செயற்பாட்டாளர்கள் ஐநாவிற்குள் வர முற்படுபவர்களுக்கு தமிழினப்படுகொலையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள்.ஆனால் அப்படியல்ல.பெயரளவில் மட்டுமே இருக்கும்.தமிழின எதிர்ப்பாளர்களையும் உள்ளே கூட்டி வருபவர் இந்த ஐநா செயற்பாட்டாளர்.ஐநா செயற்பாட்டாளர்களின் முதன்மைப்பணி தமிழீழ மக்களின் இனப்படுகொலையை இல்லாமல் ஆக்குவதற்கு துணைபோபவர்களையும் உள்ளே அழைப்பதும் இவர்களின் பணிதான்.இச்செயற்பாட்டாளர் சிங்களஅரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ்த்தான் பணியாற்றுகிறார்என்பதை பலர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆவணங்கள் ஐநாவிற்குள் முடக்கியவர்கள் இந்த ஐநா செயற்பாட்டாடாளர்கள்.1000க்கும் அதிகமான ஆவணங்களை மறைத்தவர்கள் முடக்கியவர்கள் இந்த ஐநா செயற்பாட்டாளர்கள்.இந்தியாவிலிருந்து தமிழினப்படுகொலையை ஏற்காதவர்களுக்கு ஐநா செயற்பாட்டாளர்கள் உள்நுழைவுக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர்கள் இந்த ஐநா செயற்பாட்டாளர்கள்.கனடாவில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமை104 சட்டவரைபை தடுப்பதற்காக சிங்கள அரசால் நியமிக்கப்பட்டவர் செல்வக்குமார்.இவர் பகிரங்கமாகவே இனப்படுகொலையை ஏற்காதவர்.பணத்திற்காக அவரை உள்ளே வர வாய்ப்பு வழங்கியவர் ஐநா செயற்பாட்டாளர்.

300 தமிழர்களை சிங்களப்படையிடம் ஒப்படைக்கப்பட்டபோது கண்கண்ட சாட்சியாக இருந்த பெண் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை ஐநா செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.இந்தியாவில் இருக்கும் சண்ஆசிரியர் ஒருவரின் தேவையை அப்பெண் நிறைவேற்றவில்லை என்பதற்காக சண் அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ஐநா செயற்பாட்டாளர்கள் அப்பெண்ணை பேசமுடியாது என்பதை இன்னெரு செயற்பாட்டாளர் மூலமாக அப்பெண்ணுக்கு தெரியப்படுத்தப்பட்டது.அப்பெண் பேசுவதற்குரிய ஆவணப்பட்டியலில் கையெழுத்திடப்போகும்போது தடுக்கப்பட்டார்.இவர்கள் இப்பெண்ணை பேசவிடாமல் தடுக்கப்போகிறார்கள் என்று தெரிந்தவர்கள் ஐநா வளாகத்திற்கு வெளியேயிருந்து சிலர் ஐநா செயற்பாட்டாளருக்கு தடுக்கவேண்டாம் என அறிவுரை சொன்னார்கள்.ஆனால் ஐநா செயற்பாட்டாளர்கள் தமது தனிப்பட்ட காழ்ப்புணர்வை ஐநாவிற்குள் காட்டியிருந்தார்கள்.இவர்களை எப்படி நாம் ஐநா செயற்பாட்டாளராக தமிழ் மக்கள் ஏற்க முடியும்?இக்காணொளியில் உண்மைப்புக்குப் புறம்பான செய்தியை ஐநா செயற்பாட்டாளர் சொல்லியிருந்தார்.

பறை  ஊடகக் குழுமம் ஐநாவிற்குள்  இந்த நிகழ்வின் போது அமைதிகாத்து நடப்பவற்றை உண்ணிப்பாக பார்த்து ககொண்டிருந்தோம்.20 தமிழர்கள் அங்கே நின்றிருந்தோம்.அனைவரும் ஐநா செயற்பாட்டாளர்களே தவறுவிட்டிருப்பதை தெரியப்படுத்தியிருந்ந்தார்கள்.பறை ஊடக குழுமம் 2019 இல் உள் செல்லும்போது நிறைந்த ஆதரவை வழங்குவதாகச் சொல்லி கனடாவில் உள்ள பலரை இவர்களோடு இணைவதற்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருந்தது.ஆனால் 2020 ஆம் ஆண்டு இவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆப்பு வைக்கும் பணியை நேரடியாகப் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்தக் காணொளியில் பேசும் செயற்பாட்டாளருக்கு பறை ஊடகம் சொன்ன செய்தி என்னவென்றால்:

1.இந்தியாவிலிருந்து சண் அவர்களின் காழ்ப்புணர்வை நீங்கள் ஐநாவிற்குள் சாதிப்பது தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது.இதை பறை ஊடகம் ஏற்கமுடியாது என்பதை ஐநாவிற்குள் வைத்து சொல்லியிருந்தோம்.பறை ஊடகத்தின் முதன்மை ஊடகப்பணி போலித்தமிழ்தேசியவாதிகளை தோலுரித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதே.

2.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆவணங்கள் ஐநாவிற்குள் வைத்து முடக்கியவர்கள்.இதை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த ஐநா செயற்பாட்டாளர்கள் 15-20 தமிழர்கள் புடைசூழ்ந்திருக்கும் போது எங்கள் ஆவணங்கள் உங்களிடம் தந்தோம் ஆனால் நீங்கள் ஐநாவிடம் கையளிக்கவில்லையென கேள்வியெழுப்பியிருந்தார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் ஆவணங்களை முடக்கியவர்கள் இந்த ஐநா செயற்பாட்டாளர்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கையில் 100க்கு மேற்பட்ட அமைப்புகள் நிதி பெறுவதாகவும் அந்த உறவுகள் தெரிவித்திருந்தார்கள்.

  1. இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சியை ஐநாவிலிருந்து விரட்டியமை
  2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆவணங்கள் ஐநாவிற்க்குள் முடக்கியமை.
  3. பறை ஊடகத்தால் வழங்கப்பட்ட இனப்படுகொலைக்கான ஆவணங்களை பயன்படுத்தமுடியாது என உறுதியாகச் சொன்னவை.

பறை ஊடகக்குழுமம் மக்கள் நடுவில் முன்வைக்க வரும்பொழுது அதைத் தடுத்த அரசியல் ஊடக பட்டறிவற்ற நேர்காண்பவர் செய்வது மீண்டும் தமிழ்த்தேசியத்தை அழிப்பதாகும். .

இந்த ஐநா செயற்பாட்டாளர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பவர் போல் நியூமன்.யார் இந்த போல் நியூமன்?2010 ஆம் ஆண்டு டப்ளின் தீர்ப்பாயத்தில் விடுலைப்புலிகள் பற்றியும் பெண்போராளிகள் பற்றிய பொய்யான தகவல்களை வழங்கி தமிழீழ மக்களின் அறப்போரை உலகப்பந்தில் கொச்சைப்படுத்திய ஐநா செயற்பாட்டாளர்.

Peoples_Tribunal_Report DUBLIN

28ஆவது பக்கத்தைப் படிக்கவும்8

pres_newman (1)

18வது கோடிட்ட பக்கத்தைப் படிக்கவும்.

இவரின் தலைமையில் ஈழத்தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைத்துவிடாமல் குழப்பங்களை குளறுபடிகளை ஐநாவிற்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மூன்று வழிகளில் பெருந்தொகைப்பணத்தை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

1.எக்கோசொக் என்ற ஐநாவின் விதிமுறைக்குட்ட அமைப்புகளுக்கான ஐநா நிதி

2.உள்நுழைபவர்களிமிருந்து நிதி(இவர்களின் நிதி உள்நுழைபவரின் வசதியைப் பொறுத்திருக்கும்)

3.ஒவ்வொருநாடுளிலும் வணிகரின் நிதிப்பங்களிப்பு

4.வேறுவழிகள்

ஐநா கூட்டத்தொடர் தொடங்கினால் ஐநா செயற்பாட்டாளர்களுக்கு நல்லூர்த் திருவிழாத் தொடங்கிய மாதிரியான ஒருகும்மாளம் தமிழருக்கு நீதி கிடைக்காமல் பண்ணுவதற்கான செயல்தான் இந்த ஐநா செயற்ப்பாட்டாளர்களின் முதன்மைப்பணி.இக்காணொளியிலோ அல்லது எந்தநேர்காணலிலும் இவர் உண்மை பேசுவதில்லை.

இன்பத்தமிழில் நேர்காணல் செய்பவர் 25ஆண்டுகளாக தமிழையும் தமிழ்த் தேசியப்போராட்டத்தை மழுங்கடிக்கின்ற பணியைச் செய்து வருகிறார்.ஐநா செயற்பாட்டாளர் சொல்லும் பொய்களை உறுகிப்படுத்த துயரத்தமிழ் வானொலி இணையவழியில் வாய்ப்பளிக்க தவறியமை என்பது மிக இழிவான ஊடகப்பணி.இவர்போன்றவர்களை மக்கள் இனங்கண்டு ஒதுக்கப்படவேண்டும்.

 

தடைகளை உடைத்து தமிழ்த்தேசிய அரசியல் ஆளுமை கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *