வறுமை நோய் போர் இல்லாத உலகநாள்.

கடந்த 2052கடகம் 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (August 1,2021)கனடா ஒன்ராரியோ மாநில அவை முன் குயின்பாக் திடலில் உலக சாதனைவீரன் அவர்களால் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.உலகநாடுகளில் வறுமை நோய் போர்  என்ற நிலையை உருவாக்கும் அரசியல் அதிகாரம்  யார் கையில் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே தீர்மானிக்கமுடியும்.2ஆம் உலகப்பெரும் போருக்குப்பின்னர் தான் உலகவல்லாதிக்க நாடுகள் வறுமை நோய் போர் என்ற மும்மமுனைத் தாக்கத்தை வளர்ச்சி அடையாத நாடுகள் மீது திணித்து அந்தந்த நாடுகளின் வளங்களைச்சுரண்டுவது தொடர்ந்து வலுப்பெற்று வந்திருக்கிறது.

இதற்கு உலகஅரங்கில் மிகப்பெரிய சான்றாக ஈழத்தில் தமிழின அழிப்பு  பதிவாகியிருக்கிறது.ஈழமண் தமிழரின் அரசியல் வலிமைகொண்ட பலத்தோடு 1621 ஆம் ஆண்டுவரை இறைமை கொண்ட மண்ணாக இருந்தது.2000 ஆண்டுக்கு முன் களவாக சிங்கள இனத்தினர் வந்தபோது அவர்களுக்கு வாழ்வளித்தவர்கள் தமிழர்கள்.போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் இவர்கள் எமது வளங்களைச்சுரண்டவே எம்மண்ணில் காலடி வைத்தார்கள்.கோட்டைஅரச எல்லைக்குள் வாழ்ந்த சிங்களவரை இணைத்தே யாழ்ப்பாண அரசை வீழ்த்தினார்கள்.சிங்களரால் 400ஆண்டுக்குமுன் தொடங்கிய தமிழினஅழிப்பு இன்றுவரை தொடர்கிறது.1948 இல் ஆங்கிலேயரிடம் இருந்து விடுபடும்போது சிங்களவர் கையில் அரசியல் அதிகாரம் பலமாக இருந்தது.

1948 இல் தமிழினத்தை சிங்கள இனம் அரசியல் அதிகாரத்தை வைத்தே அழிக்கத் தொடங்கியது.உலகநாடுகள் இந்த அழிவுக்கு துணைபோய்க்கொண்டிருக்கிறார்கள்.

உலகநாடுகள் தமிழின அழிப்பை தமது சுயநல அரசியலுக்கு வறுமை நோய் போர் என்ற கருவியை வைத்தே தமிழினத்தை அழித்தார்கள்.குறிப்பாக இந்தியாவும் தமிழ்நாட்டில் திராவிடதிருவாளர்களும் இணைந்தே அழித்தார்கள். மீண்டும் இந்தியாவும் தமிழ்நாட்டில் திராவிடதிருவாளர்களும் இணைந்து ஈழத்தமிழர்களை தமது சுயநலம் கருதி கருவியாக கையாளத்துடிக்கிறது.ஈழத்தமிழர்களின் இறைமை ஈழத்தமிழர்களால் மட்டுமே உலகஅரங்கில் உலகநாடுகளை இணைத்து எமக்கான அரசியல் இறைமை நிறைந்த தன்னாட்சி கொண்ட தமிழீழக்குடியரசை நிறுவவேண்டும்.உலக சாதனைவீரன் சுரேசு யோக்கிம் அவர்களின்  இந்தப்பணியும் தமிழீழ மக்களின் உரிமைபெறும் வழியாகக் கொண்டு 400ஆண்டு தமிழர்களின் அரசியல் இறைமைக்கான போர்.400 ஆண்டாக இழந்த ஆளுமை நிறைந்த தமிழ்த்தலைவர்கள் பலகோடிப்போராளிகள் பலகோடி தமிழர்கள் பலகோடிசொத்துக்கள் என எண்ணில் அடங்காதவற்றை இழந்தவர்கள் ஈழத்தமிழர்கள்.

இவ்வழியையும் அறவழியில் இன்னொரு கருவியாகப் பயன்படுத்தி உலக அரசியல் தலைமைகளை இணைத்து தன்னாட்சி கொண்ட தமிழீழக் குடியரசை நிறுவ நாம் பணியாற்றுவோம்.பணியாற்றவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *