நிதி திரட்ட சதி நடையா?

 

கனடாவில் நடையுலா என்பது பொழுதுபோக்கோடு பணம் திரட்டுவதோடு ஈழமண்ணில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களை முடக்கி வீதியில் போராடி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தமது வீட்டிற்குள் முடக்கும் சதியை புலம்பெயர்மண் கனடாவில் மிகச்சிறப்பாக போலித்தமிழ்தேசியவாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது.2020 ஆம் ஆண்டு எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் நான்குபேர் பிரம்ரன் நகரில் இருந்து ஒட்டோவா வரை நடந்து ஒட்டோவா நாடாளுமன்றத்தில் வைத்து கனடாநாட்டுப் முதன்மை அமைச்சர் யசுட்டின் ரூடோவிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி கேட்டு அறிக்கை கையளிக்கப்போகிறோம் என்று சொல்லித்தான் தொடங்கினார்கள்.

தொடங்கிய அன்று தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட பலர் பல   கேள்விகளை முன்வைத்தார்கள்.

1.என்ன அறிக்கையை கையளிக்கப்போகிறீர்கள்?

2.அறிக்கையின் வரைபு நிறைவுபெற்றுவிட்டதா?

3.நாட்டு முதன்மை அமைச்சர் ரூடோ அறிக்கை பெறுவதற்குரிய நேரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதா?

இதைவிட பல கேள்விகள் கேட்கப்பட்டபோதும் எதற்கும் உறுதியான உண்மையான பதில்கள் ஆதரவு வழங்கிய மக்களுக்கு வழங்கப்படவில்லை.

கேட்டகேள்விகளுக்கு பதில்கிடைக்காதநிலையில் கனடாவாழ் மக்கள் தமது ஆதரவையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.மக்கள் உணர்வை தமக்கு பலமாக்கிக் கொண்டு கனடாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிக்கான கதவை இறுக்கி மூடியவர்கள் நடையுலாவினர்.இவர்களை ஆட்டுவித்தவர்கள் நா.க.த.அரசும் ஐநா செயற்ப்பாட்டாளர்கள் என்றபோர்வையில் ஐநாவிற்க்குள் பல ஆண்டாக தமிழருக்கு நீதி கிடைக்காமல் பார்த்துக்கொண்ட தமிழர் இயக்கம்.

தமிழ்த்தேசியத்திற்கு எதிரானபணிகளை சிலர் தம்மை தமிழ்த்தேசியவாதிகளாகக் காட்டி தமிழினத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள்.மக்கள் மிக எச்சரிக்கையோடு இருங்கள்.

ஒட்டோவா நடையுலா முடிவில்

தமிழினப்படுகொலைத் தீர்மானத்தை கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய வலிமை இருந்தும் இன்னும் செய்யாமல் காலத்தை இழுத்தடிக்கும் கரியிடம்தான் அறிக்கை கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு கனடாவெளியுறவு அமைச்சர் சிங்கள அரசின் முடிவையே இவர்களுக்கு பதில் அறிக்கையாக வழங்கியிருந்தார்.கனடா வெளியுறவு அமைச்சருடைய முடிவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை கனடாவில் நீண்ட நடையுலாவால் முடக்கப்பட்டது.இதற்கு நா.க.த.அரசும் ஐநா செயற்பாட்டாளர்களும் இணைந்தே இச்சதியில் பணியாற்றிவர்கள்.

walk to ottawa forein minister

இந்த நீண்டநடைஉலாவுக்கு பல ஆயிரம் தமிழர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டது.மேலங்கிவிற்பனை,மக்களின் நிதிப்பங்களிப்பு,உணவு பங்களிப்பு,இரவு தங்குமிடத்திற்கான மக்களின் பங்களிப்பு என பல ஆயிரம் கனடாவெள்ளி நிதியாகமக்களால் வழங்கப்பட்டிருக்கிறது.இந்நடையுலாவில் மக்களின் பங்களிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான செயல்பாட்டை கனடா அரசிடம் மழுங்கடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கையை எழுதிய தமிழ்த்தேசியவீரன் 10 ஆண்டாக பிரதமராக அமெரிக்காவிலிருந்து கொண்டு வாயால் போலித்தமிழ்த்தேசிய வடை சுட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கப்போராளி உருத்திரகுமாரன்.இதனால் கனடாவில்  கனடாமக்களிடம்  திரட்டிய 10288 கனடாவெள்ளிகளை அமெரிக்கபோராளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.நா.க.த.அரச முதன்மை அமைச்சருக்கு அமெரிக்காவில் பணம் கொடுக்க ஒருவரும் இல்லை.நீண்ட நடை நடந்த 15 நாட்களும் இரவில் நடந்த இணையவழியில் சண்டையிடும் பணி சிறப்பாக செய்யப்பட்டது.

கனடா நாடாளுமன்றவளாகத்தில் ஒரு குழுவினரும் நாடாளுமன்ற கட்டிடடத்தில் வெளியில் இன்னொரு குழுவாக இரண்டு பிரிவான குழுநிகழ்வு நடந்தேறியது.

நீண்ட நடையுலாவினரை வைத்து சில கோமாளிவேலைகளை ஒட்டோவா நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே நடத்தியபோது தமிழ்த்தேசிய உணர்வோடு வந்த மக்கள் சலிப்புத்தன்மையோடு வெளியேறியதை பலர் உணர்ந்து கொண்டார்கள்.

கனடாவாழ் மக்களின் பணத்தில்தான் போலித்தமிழ்த்தேசியவடை சுட 25எடுபிடிகளை  வேள்விக்கு கனடாவில் நேர்ந்துவிடப்பட்டிருககிறார்கள்.அமெரிக்காவில் நா.க.த.அரசின் பேரில் தமிழ்த்தேசியம் பேசுவோர் சிறியவகை வானூரிதிகளையும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு கனடாவாழ் மக்களின் கனடாவெள்ளியை திரட்டுவது இழிவாகும்.

பேரியிலிருந்து(Barrie) நடையுலாவை தொடங்கியபோது அதற்க்கும் இதே நிலைதான்.

மீண்டும் இந்த ஆண்டு 2021 ஆகட்டு29ஆம் நாள் பிரம்ரன் நகரில் நடையுலா தொடங்குவதாக சொல்லப்பட்டிருக்கிறது.இவர்கள் தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நீதியை மழுங்கடிக்கின்ற பணியைத் தொடர்வதோடு பணம் திரட்டும் பணியை முதன்மையாகக் கொண்டே இந்நடையுலா ஒழுங்கமைக்கப்படுகிறதா?எனற கேள்வி எம்மிடம் தலைவிரித்தாடுகிறது.

மக்கள் போலித்தமிழ்த்தேசியவாளர்களின் போலி நாடகங்ளை நம்பவேண்டாம்.நீங்கள் இவர்களை ஆதரிப்பதால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நீதி கிடைக்ககக்கூடாது என்பதற்கு ஆப்பு அடிக்கப்படுகிறதா?என்பதன் உண்மைத்தன்மையை அறிந்து செயல்படுங்கள்.

பல ஆண்டுகளாக ஐநாவிற்குள் செயற்பாட்டாளர் என மார்பு தட்டும் தமிழர் இயக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆவணங்களை ஐநாவிற்குள் ஒப்படைக்கவில்லை.ஒரு காணொளிப்பதிவு கூட ஐநாவிற்குள் சமர்ப்பிக்கவில்லை.இவர்கள் சிங்களஅரசின் தோழர்கள்.சிங்களஅரசைக் காப்பாற்றவே ஐநாவிற்குள் பணியாற்றிகிறார்கள்.உறவுகளே விழிப்பாக இருங்கள்.தொடர்ந்தும் போலித்தமிழ்த்தேதியவாளர்களுக்கு ஆதரவு வழங்குவதும் தமிழினஅழிப்புக்கு துணைநிற்பதாகும்.அரசியல் அறிவை வளமாக்குங்கள்.இவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு வழங்கும் பணத்தை ஈழமண்ணில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குங்கள்.

போலிகளை தோலுரித்து வெளிப்படுத்துவது எமதுபணி.அரசியல் தெளிவுபெற்று தமிழ்த்தேசியத்தில் பங்கெடுப்பது மக்களின் பணி.

இக்கட்டுரை கனடா மற்றும் உலகம் தழுவி வாழும் மக்களுடைய தகவல்களையும் முறைப்பாடுகளையும் பறை ஊடகக் குழுமம் வெளியிடுகிறது..இதுபறை ஊடக குழுமத்தின் எண்ணப்பாடு அல்ல. இக்கட்டுரைக்கு பறை ஊடகக் குழுமம் பொறுப்பல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *