கரி ஆனந்தசங்கரி மீண்டும் தேர்தலில் தெரிவாகத் தகுதியுடைவரா?

walk to ottawa forein minister

கடந்த 14 ஆண்டுகளாக கனடா நாடாளுமன்றத்திற்கு சென்ற கரி ஆனந்தசங்கரி இதுவரை தமிழினப்படுகொலையைத் தீர்மானத்தை நிறைவேற்றி அனைத்ததுலக நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் பொறுப்பைத்தட்டிக்கழித்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். தமிழினப்படுகொலையை அனைத்ததுலக நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் பொறுப்பில் இருந்தும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிங்கள அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தமிழினநீதிக்கான வாய்ப்பு இருந்தும் அதை ஊதாசீனம் செய்திருப்பதாக கரி ஆனந்த சங்கரிக்கு வாக்களித்த மக்களின் மிகப்பெரிய குற்றச்சாட்டாகும்.  

அதை இதுவரை செய்யாமல் இருப்பதால் றூச்பாக் வாழ் மக்கள் கரியை தெரிவு செய்வது மீண்டும் கனடா அரசியல் செயற்பாட்டில் பின்னடைவுகளை தமிழர்கள் சந்திப்பார்கள் என்ற அச்ச உணர்வில் மக்கள் இருக்கிறார்கள்.

கரி ஆனந்த சங்கரி அவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்ட காலப்பகுதியில்

1.2009 க்குப்பின் விடுதலைப்புலிகளின் தடையை தொடர்ந்து கனடாவிலும் உலகநாடுகளிலும் நீடிப்பபதற்கு துணையாக இருந்தார்.

2.தமிழின அழிப்புக்கான தீர்மானத்தை நிறைவேற்றாமல் தொடர்ந்து காலத்தைக் கடத்தி வந்திருப்பதாக வாக்களித்த மக்களின் குற்றச்சாட்டு.

3.சிங்கள அரசை அனைத்துலக நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் வலிமை இருந்தும் அதைச்செய்யயாமல் காலத்தைக் கடத்தி வந்தார் என தமிழ்மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

4.இனப்படுகொலையில் தொடர்புடைய இராணுவத்தளபதிகள் கனடாவுக்கு  தூதுவராக வரும்பொழுது இராணுவத்தளபதிக்கு எதிராக எந்த நவடிக்கையும் எடுக்காமலிருந்தார்.ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து இராணுவத்தளபதி மங்கள டயசை சிங்கள அரச வர்ததகமானியில் கனடா தூதுவராக அறிவிக்கப்பட்டபின் கனடா அரசும் ஏற்றதை தடுத்து நிறுத்தப்பட்டது.பின் இத்தாலிஅரசும் மங்கள டயசை சிங்கள அரச தூதுவராக ஏற்க மறுத்துவிட்டது.

5.அனந்தி சசிதரன் கயேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் கனடாவுக்கு வரத்தடை.இதுவரை இத்தடைகளை அகற்றாமல் கடந்து செல்கிறார் கரி.

6.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி  கேட்டு நீண்ட நடையுலா மூலமாக வழங்கப்பட்ட அறிக்கைக்கு சிங்கள அரசின் உள்ளக விசாரணைகளை கனடா ஆதரிப்பதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.இம்முடிவை கரி ஏற்றுக்கொண்டிருக்கிறார். வெளியுறவு அமைச்சரின் கருத்தை மறுத்து கரி இதுவரை எதிர்குரலோ எதிர்ப்பணிகளை முன்னெடுக்கவில்லை.

7.இனப்படுகொலைக்கான தனிமனித மனுவை வழங்கி தமிழினப்படுகொலைத்தீர்மானத்தை நிறைவேற்றும் வலிமை கரியிடம் இருந்தும் கடந்த 14 ஆண்டாக கனடாநாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றாததேன்?

8.ஈழண்ணில் தொடரும் பண்பாட்டு இனப்படுகொலைக்கு எதிர்க்குரலாக கனடா நாடாளுமன்றத்தில் ஒலிக்காததேன்?

9.ஐநா மனிதவுரிமைச்சபைக்கு காலநீடிப்பு வழங்கிய முதன்மை நாடு கனடா அப்போது லிபரல் ஆட்சி .கனடாவில் வாழும் தமிழர்களின் மனவலியை காயப்படுத்திக்கொண்டு தமிழர்களை மேலும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தார்.

தமிழீழ மக்களுக்கு சிங்கள அரசுன் உரிமை மறுப்புக்கு ஆதரவாக செயற்படுவதாக றூச்பாக் மக்கள் கரி ஆனந்தசங்கரியை இனம்கண்டுள்ளார்கள்.ஆகவே றூச்பாக் மக்கள்தமிழின அழிப்புக்கான நீதிக்காக பணியாற்றக்கூடிய இளையவர்களை களமிறக்குவதே சிறந்ததாக அமையும்.

புதிய ஒருவரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வது தமிழர்களுக்கு மட்டுமல்ல ஏனைய மக்களுக்கும் சிறப்பாக இருக்கும்.கனடாவாழ் வாக்காளரின் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை உணராத கரி ஆனந்தசங்கரி அவர்களை மீண்டும் தெரிவு செய்வது நாம் சிங்களஅரசுக்கு துணை நிற்பதற்கு நிகராகும்.கரிக்கு வாக்களித்தால் நாமும் இனப்படுகொலையின் பங்காளிகள்.

றூச்பாக் மக்கள் இனப்படுகொலையின் வலியை சுமக்கமறுப்பவரையும் இனப்படுகொலையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாதவரையும் ஆதரிக்க முடியாது என்பதில் மிகத்தெளிவாக இருப்பதாக றூச்பாக் தொகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் உள்ளடங்கியுள்ளது. பறை ஊடக குழுமம் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.பறை ஊடகக் குழுமம் தமதுருத்தையோ எண்ணத்தையோ வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *