துசியந்தி நவநாதன் இறப்புத் திருவோலை

 

யூனியன்  கல்லூரியின் பழைய மாணவி  துசியந்தி நவநாதன் ( 86 O/L  89 A/L)  தனது 50 ஆவது அகவையில் 28.02. 2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

துசியந்தி யாழ். ஏழாலையைச் சேர்ந்த திரு. மகாலிங்கம், கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்ற திருமதி. இந்திராதேவியின் அன்பு மகளும்,

திரு. நவநாதனின் அன்பு மனைவியும், 

யூனியன் கல்லூரிப் பழைய  மாணவர்களான  ஐங்கரன் ( 83 O/L 86 A/L), உமாசங்கர் ( 87 O/L  90 A/L), சக வகுப்புத் தோழி திருநிறைச்செல்வி ( 89 O/L  92 A/L) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிரபல பின்னணிப் பாடகி சரிகா, லக்சன், கன்யா, மற்றும் அஞ்சலியின் பாசமிகு தாயுமாவார். 

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரின் துயரில் மூதறிஞர் ஊடகமும் இணைகிறோம் 

இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறியத்தரப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *