உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு  – மூன்றாம் நாள் (01.03.2021)

 

ஈழத்தில் தமிழின அழிப்பின் பாதிக்கப்பட்ட அனைத்துதமிழர்களுக்கு மாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி.அம்பிகை செல்வகுமார் அவர்கள் ஆரம்பித்திருக்கும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு  இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. 

 

கடந்த இரு நாட்கள் போலவே, மும்மத தலைவர்களின் வாழ்த்துக்களுடன் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அற வழியில் அதிஉயர் ஈகங்களை புரிந்த, ஈகச்சுடர்களான அன்னை பூபதி, திலீபன் அண்ணா அவர்களை வணங்கி திருமதி அம்பிகை செல்வகுமார் இன்றறைய நாளும்  தொடர்ந்துள்ளார். 

 

இன்ற நாளுக்கான நிகழ்வுகள் மாலை மூன்று மணிக்கு தொடர்ந்து நேரலை மூலம் நடைபெற இருக்கின்றன. மத தலைவர்களின் ஆசி உரைகள், திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களின் உரை, அரசியல் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் சிறப்புரைகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

 

தற்போது உள்ள கோவிட் நடைமுறைகள் காரணமாக, உறவுகள் நேரில் சமூகளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்றைய நிகழ்வுகளை அனைவரும் இணையதளத்தின் (Zoom) வழியாக கலந்து கொள்ளலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

நன்றி. 

உண்ணாவிரத ஆதரவு குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *