சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு 28.02.2021

ஈழமண்ணில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை தொடர்பான விசாரணைகளை சரியான முறையில் நடத்தும் வகையில் தமிழினப்படுகொலை குற்றம் புரிந்த சிங்கள அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ். நல்லூரில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் பெப்ரவரி 28 2021 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார் இணைந்து முதலாவது நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

28.2.2021 ஞாயிற்றுக் கிழமை மு.பகல் 10.00 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்பாக குறித்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *