பறைஇசை முழங்க தாலிக்கட்டிய திருமணம்…
2052 கும்பம் 21 ஆம் நாள் (3-3-2021) கோவை பேரூரில் உலகப்பொது மறையான திருக்குறள் முறையில் மணமக்கள் கனிமொழி & இராமயெயம் அவர்களின் திருமண நிகழ்வில் நிமிர்வு கலையகத்தின் பறை முழக்கம் முதல் நிகழ்வாகவும் , மங்கல்நாண் ( தாலி ) கட்டும் போதும் இசைக்கப்பட்டது.-கூடியிருந்தவர்கள் பெருமகிழ்வுடன் பறை இசையை இரசித்தும் , -சிறு குழந்தை தன்னால் வந்து ஆடியும் பறை குச்சிகளை கேட்டு மகிழ்ந்ததும் , இன்றைய நிகழ்வுகள் மறக்க முடியாதவை.திருமண விழாவில் கலந்து கொண்ட உறவுகள் பறை இசையை தமது நிகழ்வுகளில் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பை பலர் நிமிர்வு கலையகத்திடம் கேட்டிருந்தார்கள்.நிமிர்வு கலையகமும் நிகழ்வு நடத்தும் நாட்களை ஏற்றுக் கொண்டு முன்பதிவு செய்திருப்பது என்பது கூடுதல் மகிழ்ச்சி..
தரணியெங்கும் முழங்கட்டும் பறை இசை..
நிமிர்வுகலையகம்
#பறைஇசைப்பள்ளி
பறை நிகழ்ச்சிகளுக்கு & பயிற்சிகளுக்கு :
+91 6380413279 ,+91 9578443795