உணவுத்தவிர்ப்புக்கு ஆதரவாக திரண்ட தமிழர்

https://youtu.be/ZJ4rnSJsSn0

 

மாபெரும் ஊர்திஏப்பேரணியாக போராட்டக்களத்தை நோக்கி  தமிழரின் நீதி வேண்டி 8ஆவது நாளாக 2052 கும்பம் 24 ஆம் நாள் (6-3-2021) மேலாக உணவு தவிர்ப்பில்  இருக்கும்  திருமதி அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டும் என பிரித்தானியாவில் வாழும் தமிழர்களோடு உலகத்தமிழர்களும்   ஒன்று திரண்டுள்ளனர்.

பிரித்தானியா அரசிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 8 ஆவது நாளாக உணவு தவிர்ப்பில் இருக்கும் அம்பிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பிரித்தானி அரசின் மௌனம் கலைத்து கவனத்தை திருப்பும் நோக்கில்  ஒன்று திரண்டுள்ள பெருந்திரளான  மக்கள் அம்பிகையின் போராட்டம் நடைபெறும் இடத்தினை நோக்கி ஊர்திப்பேரணியாக செல்லவுள்ளனர்.

இனப்படுகொலையை நிகழ்த்தியும் அதை அரங்கேற்றியவர்களை  காப்பாற்றியும் வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் பசித்திருந்து  நீரை மட்டும் அருந்தி நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர் 8 நாட்களைக் கடந்த நிலையிலும் தொடர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *