ஒரே மேடையில் 234 சட்டமன்ற வேட்பாளர் அறிவிப்பு

 2052 கும்பம் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வை.எம்.சி திடலில் (7.3.2021) 234 சட்டமன்ற வேட்பாளர் அறிமுகம் எழுச்சியோடும் வீச்சோடும் புரட்சியோடு  செந்தமிழன் சீமான் பேரறிவிப்பு செய்து தமிழ்த்தேசிய அரசியலை உறுதி செய்துள்ளார்.உலகவரலாற்றில் செந்தமிழனின்  பேரறிப்பால்  திராவிடமும் ஆரியமும்  இனிமேல் ஆள முடியாது.  போலித்திராவிடத்தால் தமிழ்த்தேசியத்தை அடக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

234 சட்டமன்ற வேட்பாளராக களமிறங்கிய அரசியல் போராளிகள் அனைவரும் தமிழ்த்தேசியப் அரசியல் போராளிகள்.இவர்கள் அனைவரும் பல்துறை விற்பன்னர்கள்.   2021 தேர்தல் களம் அரசியல் ஆளுமை நிறைந்த போராளிகளைக் கொண்டது.இவர்கள் கடந்துவந்த திராவிட ஆட்சியை அழித்து தமிழ்த்தேசியம் வெல்வதற்கு வாய்ப்பு தமிழக மக்கள் கையில் 2021 இல் செந்தமிழன் சீமான் வழங்கியுள்ளார்.தமிழரின் பண்பு ஆண்பாதி பெண்பாதி சமன்.மதங்கள் தான் பெண்களை அடிமைப்படுத்தியது தான் பெண்ணடிமை.இந்த பெண்ணடிமையை உடைத்த தமிழன் செந்தமிழன் சீமான்.உலகத்தில் முதன்முதலாக நாம் தமிழர் கட்சி ஆணும்பெண்ணும் சமனான அளவு தேர்தல் வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறது.117 ஆண் வேட்பாளர் 117 பெண் வேட்பாளர். இது உலக சாதனை.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரமுன்பே பல மக்கள்நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.அரசியல் அதிகாரம் கைக்கு வந்தபின் சிறந்த ஆட்சிக்கு தேவையானவற்றை நடைமுறைப்படுத்த இலகுவாக இருக்கும்.

1.      நீர்வளப்பெருக்கம் 

 2.     வேளாண்மை அரசுப்பண

  3.    தரமான மருத்துவம் இலவசம்

 4.    தரமான இலவசக்கல்வி 

  5.  ஆடு மாடு கோழி வளர்த்தல் அரசுப்பணி

   6. நிலவளம் சார்ந்த தொழில்வளர்ச்சி

  7  .வேலைவாய்ப்பு பொருளாதார மேம்பாடு

8.சிற்றூரில் பொருளாதார வளர்ச்சி

9.தாய்மொழி மீட்சி வளர்ச்சி

10.தமிழ்த்தேசிய வைப்பகம்-சேமிப்பு குறைந்த வட்டியில் கடன்

11.தடையற்ற சூரிய ஒளி -காற்றாலை மின்வலு 

12.சீரான தரமான சாலைகள்

13.தூய குடிநீர் இலவசம்

14.தற்சார்பு பொருளாதாரம் 

15.சுற்றுச்சூழல் பாதுகாப்பு

16.ஆண்பெண் சமத்துவம்

17.மது போதைப்பொருள் ஒழிப்பு

18.கையூட்டு ஊழல் ஒழிப்பு

19.கலை இலக்கியம் பண்பாடு மீட்பு காப்பு

20.கணிணி கல்வி வேலைவாய்ப்பு கணிணிமய நிர்வாக கட்டமைப்பு

21.விளையாட்டு மேம்பாடு

22.தமிழர் அறம் சார்ந்த ஆட்சி

23.சமத்துவம் குமுகாயம் 

24.பத்தே ஆண்டில் பசுமை

25.புது கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பு

26.கனிமவளப் பாதுகாப்பு

27.குழைமம் நெகிழ ஒழிப்பு

28.குழந்தைகள் நலன் அறிவுச்சோலை

29.முதியோர் பாதுகாப்பு அன்புச்சோலை 

30.உயிர்நேயம் 

2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவை வெளியிட்டு தெளிவான அரசியலை தமிழக மக்கள் முன் செந்தமிழன் சீமான் படைத்திருக்கிறார். 

தமிழக மக்கள் முன் நாம் தமிழர் ஆட்சி வரைபை படைத்திருக்கிறது.. இந்தப்படையலை அள்ளி உண்ணுங்கள்.தமிழக மக்களின் வாழ்வை வளம்படுத்தும் படையல்

தமிழன் வாழ்வு தமிழகத்தில் சிறப்பாக்கும் படையல்

2021ஆம் ஆண்டு தேர்தலை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க உறுதியெடுத்துக் கொள்ளுங்கள். 

70ஆண்டாக பலகோடி பெறுமதிமிக்க வாக்கை திராவிட ஏமாளிகளுக்குப் போட்ட தமிழக மக்களே 2021 இல் நாம் தமிழர்களுக்கு வாக்களித்து ஆட்சி கொடுத்துப் பாருங்கள்.

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். ஆட்சியை 5 ஆண்டுக்கு கொடுத்துப் பாருங்கள்.

இந்த தேர்தலில் தமிழ்த்தேசியம் வெல்லவேண்டும்.

வாழ்க தமிழ் வளம்பெறும் தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *