அம்பிகை செல்வக்குமார் உணவுத்தவிர்ப்பு 12 ஆவது நாளைத்தாண்டி

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நீதி கோரி ஈகைச்சுடர்   திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோரின் வழியில் தன்னை உருக்கி அறப்போரிட்டு வரும் திருமதி அம்பிகை செல்வக்குமார் உணவு தவிர்ப்பு   பன்னிரு  நாட்களைத் தாண்டித் தொடர்கிறது.

இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற அனைத்துலக விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள அரசுக்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதற்கு பிரித்தானியா இடமளிக்கக்கூடாது.. நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, அவற்றை பிரித்தானியா நிறைவேற்றும் வரை நீர் மட்டும் அருந்தி அம்பிகை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *