வடகிழக்கு மாகாணங்களில் சிங்களஅரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரி நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பை முடக்குவதற்கு சிங்கள காவல்துறையினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கி போராடுவோம் என கூறி தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக் கட்சிகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாக இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் நடைபெறும் உணவித் தவிர்ப்புப் பந்தலை சிங்கள காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றி உள்ள நிலையில் மக்கள் சாலை ஓரத்தில் பாயை விரித்து நடு வெயிலில் இருந்து உணவுத் தவிர்ப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்கள் எந்த சுய இலாபம் இன்றி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக சிங்களஅரச காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்காது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் செயற்பாட்டு அரசியல் தேர்தல் காலங்களில் மாத்திரமே இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
இன் நிலையில் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் நடாத்தப்படும் அகிம்சை முறையிலான உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் சமூகம் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
கூடாரத்தை அகற்றிய சிங்கள அரச காவல்துறைக்கு எதிராக! மட்டக்களப்பு பொலீசில் முறைப்பாடு பதிவு!
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உணவுத்தவுர்ப்புப் பந்தல் மற்றும் பதாகைகளை இன்று அதிகாலை 2.30 மணியளவில் மட்டக்களப்பு சிங்கள அரச காவல்துறையினர் முழுமையாக அகற்றியுள்ளதாக உணவுத்தவிர்ப்பில் பங்கேற்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை உணவுத்தவிர்ப்பில் பங்கேற்ற மக்களின் கொ ட்டகை மற்றும் பதாதைகள் அகற்றப்பட்டதையடுத்து இன்று காலை முதல் சுடும் வெயிலிலும் தமது சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பை தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றனர்.
ஈழமண்ணில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு அனைத்துலக ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு மட்டக்களப்பில் 10வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த உணவுத்தவிர்ப்பு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அன்னை பூபதி உண்ணாநோன்பு இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேசுவரர் கோயில் முன்றலில் கடந்த 03ம் நாள்முதல் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு 12.3.2021 அன்று 10வது நாளாகவும் தொடர்கிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த உணவுத்தவிர்ப்பில்
மட்டக்களப்பு மாவட்ட மதகுருமார், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமிழ் உணர்வாளர் அமைப்பினர் மற்றும்;, அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக எசு.சிவயோகநாதன் மற்றும் வண.பிதா.கந்தையா யெகதாசு ஆகியோர் செயல்படுகிறார்கள்.