15 ஆவது நாளாக தொடர் உணவுத்தவிர்ப்பு 14.3.2021

2052 மீனம் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 2 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (14.3.2021 )இன்று 15வது நாளாக தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு யாழ் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதில் பல்வேறுபட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் தமது ஆதரவினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர் அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு17.03.2021 ஆம் நாள்  புதன்கிழமை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்டனப் பேரணி தமது  

ஆதரவினை தெரிவித்துள்ளதுடன் அனைவரையும் அணிதிரள வேண்டும் என அழைப்பு விடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரை முன்னிறுத்தி சிங்கள இனவெறியரசை  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நல்லூரிலும் வடக்கு கிழக்கிலும் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பை முன்னெடுத்துவருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *