தமிழீழ விடுதலையை விரட்டும் தமிழினத்துரோகிகள்

கடந்த2021 பெப்ரவரி 27 ஆம் நாள் சாகும்வரை உணவுத்தவிர்ப்பை அம்பிகை  சீவரட்ணம் முன்னெடுத்திருந்தார். உலகத்தமிழர் அனைவரும் இதை ஏற்க மறுத்தார்கள்.

காரணம் 1.நாம் பல இலட்சம் உயிர்களை இழந்த பின்பும் உலகம் எம்மைத் திரும்பிப் பார்க்கவில்லை.ஏன் பார்க்கவில்லை தமிழின அழிப்பில் உலகநாடுகள் பங்கும் தமிழினத்துரோகமுமேயாகும்.

 

இப்போது சிங்கள இனவெறியரசின் தமிழின அழிப்பை தமிழர்களை முன்னிலைப்படுத்தியே நீதி கிடைக்கமுடியாதபடி செய்து வருகிறது. இதில் அம்பிகை சீவரட்ணம் உணவுத் தவிர்ப்பும் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலிலுக்கு கிடைத்த வெற்றியாகும்.

 

அம்பிகை சீவரட்ணம் உணவுத் தவிர்ப்பு தொடங்கியபின் புலித்தோல் போட்ட துரோகிகள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதாகக் காட்டிக் கொண்டு சிங்கள இனவெறியரசின் நிகழ்ச்சி நிரலில் அறவழிச்சூட்சியால் பின்னிபிணைக்கப்பட்டு உலகத்தமிழர்களை ஏமாற்றிய உணவுத்தவிர்ப்பாக மாற்றப்பட்டது.இப்படி தமிழினத்துரோகிகளால் மாற்றப்பட்ட உணவுத் தவிர்ப்பு மேலும் தமிழர்கள் வீறுகொண்டு எழுவதை தடுக்கப்பட்டிருக்கிறது.

 

தமிழினத்துரோகிகளால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழின் உணர்வாளர்களையும் இழிவுபடுத்தியே வருகிறது.இந்த சதிவலைப்பின்னலில் சிங்கள இனவெறியரசும் மேற்கத்திய நாடுகளும் வெற்றி கண்டுள்ளன.

 

இதில்  ஈழத்தமிழர்கள் தமிழகத்தமிழர்கள்  புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அம்பிகையின் உணவுத்தவிர்ப்பால் தொடர்ந்தும் இழிவுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

 

அத்தோடு ஈகைச்சுடர் அன்னை பூபதி திலீபனின் ஈகம் கொச்சைப்படுத்தியது மிகமிக இழிவாகும். அவர்கள் கொண்ட கொள்கை நிறைவேறாத நிலையிலே உயிரை இழந்தார்கள்.உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து ஒப்பாரி வைத்தோம்.பல ஆண்டுகள் கடந்தும் நிறைவேறாத கோரிக்கைகள் இப்போதும் அந்த ஈகைச்சுடர்களை நாம் நினைவுகூர்ந்து வருகிறோம்.

 

 அவமானத்தை பெற்றுக் கொடுத்தது அம்பிகையின் உணவுத் தவிர்ப்பு.ஒரு கோரிக்கைகளும் நிறைவேறாத கட்டத்தில் உலகத்தமிழர்களை ஏமாற்றி உணவுத்தவிர்ப்பை அவமதித்த தமிழினத்துரோகிகள் அழியவேண்டும் என்பது தமிழினத்தின் சாபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *