அடிப்படை அரசியல் அறிவு இல்லாத ஐ.நா தமிழ்ச் செயல்பாட்டாளர்கள்

AHRC46L1Rev1

மார்ச் 23,2021 இல் ஐ.நா தீர்மானம் நிறைவேறியது பற்றி பூச்சாண்டி காட்டும் செயலி இணைவு வழி அரசியல் ஆண்டிகள் தமிழ் மக்களை ஏமாற்றி மக்களின் அறிவை இழிவுபடுத்துகிறார்கள்.இவர்கள் எவரும் அரசியல் அறிவோ தமிழின் அழிப்புப் சார்ந்த புரிதலோ தமிழர் அரசியல் அதிகாரம் சார்ந்த அறிவோ இல்லாதவர்கள். இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக கோட்டுச்சூட்டோடு ஐ.நா வளாகத்தில் தேநீர் குடித்துப் பொழுதைப் போக்கிய ஆண்டிகள்.புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல யெனீவாவில் ஐ.நா வளாகத்திற்குள் கடந்த 11 ஆண்டுகளாக தேநீர் குடித்துவிட்டு தமிழினச் சிக்கலை சிங்கள அரசுக்கு சார்பான செயல்பாட்டை முன்னெடுத்த அரசியல் அறிவற்ற ஆண்டிகள் என்பதை 23.3.2021 இல் நிறைவேற்றிய தீர்மானம் கட்டியம் கூறி நிற்கிறது.ஆனால் இதை அனைத்து தமிழ் மக்களும் இன்று அரசியல் அறிவுள்ள ஒவ்வொரு தமிழர்களும் உணர்ந்துள்ளார்கள்.ஆனால் சில அரசியல் அறிவில்லாத ஐ.நா செயல்பாட்டு ஆண்டிகள் ஐ.நாவின் அறிக்கை வெளிவந்ததை செயலிவழி இணைப்பு ஊடாகப் பேசி மக்களை ஏமாற்றும் பணியைச் செய்வது உலகத்தமிழர்கள் உணர்ந்துள்ளார்கள்.

புலம்பெயர் மண்ணிலும் தமிழீழ மண்ணிலும் வாழும் மக்கள் அனைவரும் ஈழஅரசியலில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் மனிதவுரிமைச்செயல்பாட்டாளர்கள் என தம்மை தம்பட்டம் அடிக்கும் புலம்பெயர் அமைப்புகள் தாயக மக்களைச் காட்டி ஐ.நாவிற்குள் என்யியோ என்ற அமைப்பினூடாக பல ஆயிரம் வெள்ளிகளை பெற்றுக்கொண்டு சிங்கள அரசுக்குச் சார்பாக ஐநாவிற்குள் பணியாற்றியிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.தமிழினஅழிப்பில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழருக்கான நீதிக்கான பணி எதுவும் முன்னெடுக்கப்படாமல் இருந்தது இன்றைய அறிக்கையின் வெளிப்பாடு.தமிழருடைய இனவழிப்பை எந்தளவுக்கு ஐநாவிற்குள் முடக்கமுடியுமோ அந்தளவுக்கு பல தடைகளை உருவாக்கி அந்தளவுக்கு இழிவுபடுத்திய தமிழர் அமைப்புகளின் சீர்கேடுகளால்  இன்றைய ஐ.நா அறிக்கை சிங்கள அரசுக்கான வெற்றியாகும்.

சிங்கள அரசின் வெற்றிக்கு உழைத்தவர்கள் புலம்பெயர்  தமிழ் அமைப்புகள். சிங்கள அரசின் கோடிக்குள் படுத்திருக்கும் அமைப்புகளும் இந்திய பாரதீகயெனதா கட்சியுடன் கள்ள உறவு வைத்திருக்கும் கனடா அமைப்புகளுக்கும் பங்கு உண்டு.சிங்கள அரசுக்கு எதிராக   இந்தியா  யப்பான் பங்களாதேசு சீனா கியூபா லிபியா இந்தோனிசியா  நேபாளம் பாக்கித்தான் பிலிப்பீன்சு ரசியா போன்ற நாடுகள் எதிராக வாக்களிக்கவில்லை. இவ்வாக்களிப்பானது தமது பூலோக அரசியலுக்கானது.ஆனால் தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை மூலம் நீதி கிடைக்காது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. காரணம் 1948 ஆண்டு முதல் இன்றுவரை தமிழர் தரப்பின் அரசியல் தொடர்ந்தும் வெறுமையாக இருப்பதாலே இந்தநிலை.

இனத்துரோகிகள் சிங்கள அரச எடுப்பார் கைப்பிள்ளைகள் சிங்கள இந்திய கோடிக்குள் படுத்துறங்கும் புலம்பெயர் அமைப்புகள் என பல்வேறு பட்டவர்களை சிங்கள அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளார்கள். விலைபோன ஐ.நா செயற்பாட்டாளர்களை மக்கள் இனம் காண வேண்டும்.

ஈழமண்ணிலும் புலம்பெயர் மண்ணிலும் மக்கள் அதிகளவில் தாமாகவே ஐ..நா அரசியலை புரிந்து கொள்ளும் அறிவை பெற்றுக்கொண்டுள்ளனர். ஐ.நா செயற்பாட்டாளர்களின் அடிப்படைஅரசியல் அறிவு அற்றவர்கள் என்ற செய்திமக்களிடம் வேர் ஊன்றியிருப்பது மகிழ்ச்சி தருவதாகும்.

ஐநாவில் வெட்டிப்புடுங்குகிறோம் என கொக்கரிக்கும் தமிழர்களை மக்கள் இனம்கண்டு செயற்படுங்கள். மக்களிடம் இருக்கும் அடிப்படை அரசியல் அறிவு ஐ..நா செயல்பாட்டாளருக்கு மிகமிகச் சூழியமாகும். கனடா அமைப்புகளும் தமிழ்த்தேசியம் என்ற போர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.ஏமாறாதீர்கள்.

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *