போலிகளை நம்பும் தமிழ்  ஊடகங்கள்

தமிழின அழிப்பில் இருந்து தப்புவதற்காக ஈழத்தமிழர்களை சூழ்ச்சி வலையில் வீழ்த்துகின்ற உயரிய பணியை சிங்கள இனவெறியரசு தமிழீழ மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களுக்குள்  சிங்களதேசியத்தின் ஊதுகுழல்கள் தமிழ்தேசியப் போர்வையோடு களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் இன்று போலித்தமிழ்த்தேசியம் பேசுவார்கள்.

யார் இந்த போலித் தேசியவாதிகள்?

2009முன் வன்னியில் விடுதலையில் பங்கேற்றவர்கள்.ஐ.நா செயற்ப்பாட்டாளர்கள்.புலம்பெயர் நாடுகளில் தமிழீழ அரசால் உருவாக்கப்பட்ட அமைப்புகள். இவர்களில் ஒரிருவர் இனஉணர்வாளர்களோடு இணைந்து கொண்டு உணர்வாளர்களை தவறாக வழிநடத்தி தமிழின அழிப்பின் நீதிக்கான செயல்பாடுகளை மழுங்கடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்தேசியத்திற்கான அறவழிப் செயற்பாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் உணர்வுபூர்வமாக இணையும்போது அவர்களை தவறான அறிவுரைகளைக் திணித்து தமிழின அழிப்புக்கான கதவுகளை மூடும் பணி தொடர்கிறது.

2019 ஆம் ஆண்டுவரை ஐ.நாவிற்குள் தமிழீழ அழிவை மூடிமறைப்பதற்கான அனைத்து தரவுகளும் ஐநாவிற்குள் ஐ.நா செயற்பாட்டாளர்களால் விடுதலைப்புலிகளின் போராட்டமும் தமிழ்மக்களுக்கு நடந்த இனப்படுகொலை அல்ல என்பதை உறுதிப்படுத்தக்கூடிய தரவுகள் வழங்கப்பட்டு தமிழரின் நீதிக்கான கதவை தமிழ் ஐ.நா செயற்பாட்டாளர்களால் முற்றாக மூடப்பட்டு விட்டது.இதற்கு தலைமை தாங்கிய கட்சி த.தே.கூ.அத்தோடு பல அமைப்புகள் தமிழருக்கு எதிரான செயல்ப்பாட்டைச் செய்துகொண்டு வெளிப்பார்வைக்கு தமிழ்த்தேசியத்திற்கான உழைப்பாளிகள் எனக் காட்டிக்கொண்டு சிங்கள அரசிடமும் ஐ.நாவிற்குள் செல்லும் தமிழரிடமும் வணிக நிறுவனங்களிடமும் ஐ.நா என்யீஒ மூலமாகவும் நிதியைக் திரட்டிக் கொண்டு தமிழின அழிப்பை மூடி செயற்ற நிலைக்குள் ஐ.நாவிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

2009 தமிழினப் படுகொலையை நடத்தி முடிப்பதற்கு சிங்கள இந்திய அரசுக்கு த.தே.கூ துணையாக இருந்தது . 2009 தமிழினஅழிவை நிறுத்து என்று சொல்லக்கூடிய உயரிய இடத்தில் த.தே.கூ இருந்தது.அதிலும் தலைவராக இருந்த சம்பந்தர் இருந்தார்.ஆனால் சம்பந்தரின் ஒப்புதலின் பேரில் தமிழீழ மக்களின் உயிர் உடைமைகள்  20நாடுகளின் வல்லமைகொண்ட தமிழரின் படைச்சமநிலை தமிழீழ கட்டுமானம் அனைத்தையும் அழிக்க அனுமதி கொடுத்த பெருமகன் திருகோணமலையில் பிறந்த சம்பந்தன் அவர்கள்.  தமிழீழ மக்களின் வாக்கில் பதவியில் இருந்த சம்பந்தன் வாக்களித்த தமிழினத்தை அழித்த பெருமகன்.

சிங்கள அரசால் கனடாவிலும் லண்டனிலும் களமிறக்கப்பட்டவர்கள் செயலி இணைவில் தமிழ்த்தேசிய எண்ணங்களைப் சொல்லி நெருங்கிய நட்பைப் பேணி மக்களிடையே உள்ள இன உணர்வாளர்களோடு நெருங்கிப் பழகி தமிழின அழிப்பிற்கான நீதி இல்லாமல் செய்கின்ற பணிகளை இப்போது கனடா இங்கிலாந்து நாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. உணர்வுபூர்வமாக முன்னெடுக்கும் இப்போராட்டத்தை முடிவில் சீரழிக்கின்ற பணிகளை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

கடந்த சில மாதங்களாக பரவலாக நடைபெறுகின்ற அறவழியில் நடைபெறும் தமிழின அழிப்பு நீதியின் பெயரால் நடத்தப்பட்ட எழுச்சிகள் தோல்விகளை சந்தித்த போதும் அவை வெற்றியளித்துள்ளதாக தமிழ்மக்களிடைய தமிழ் தேசியத்தில் 2009 க்கு முன் இருந்தவர்களாலும் ஏனையவர்களாலும் தமிழ்மக்களிடையே போலிகளை நம்பும் ஊடகங்களுடாக திணிக்கப்படுவதை அறிவும் ஆற்றலும் நிறைந்த மக்கள் மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.

ஊடகங்கள் தமிழரின் அறவழிப் செயல்பாடுகளில் போலி ஒழுங்கமைப்பாளர்கள் சொல்லும் பொய்களை நியாயப்படுத்தி தமிழ் ஊடகங்கள் விளக்கு பிடிப்பது மிக இழிவாகும்.

குறிப்பாக கனடா இலண்டன் நாடுகளில் தமிழர்களை தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.தமிழ்தேசிய எதிர்ப்பாளர்கள் கனடா அரசுக்கும் தமிழ்மக்களுக்குமான உறவை சிதைத்து தமிழின அழிப்புக்கான நீதி கோரும்  பணிகளை கனடாவில் இல்லாமல் ஆக்குவதற்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதை மக்கள் உன்னிப்பாக அவதானித்து ஒதுங்கி வருகிறார்கள்.

2009 க்குப் முன் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசியத்தை கூறுபோட்டு விற்று பிழைப்பு நடத்தியவர்கள் இன்று செயலிவழி இணைவில் தமிழ்த்தேசியப்போர்வையோடு தமிழ்த்தேசிய உணர்வாளர்களை விழுங்கி சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலை சரிவர வழிநடத்துவதை அரசியல் ஞானிகள் புரிதலோடு உணர்ந்து ஒதுங்கிக்கொண்டுள்ளார்கள்.இதுவே சிங்கள அரசின் விருப்பமாகும்.இன உணர்வாளர்களால் முன்னெடுக்கும் அறவழிச்செயற்பாட்டிற்குள் சிங்கள தேசியவாதிகள் பூந்து விளையாடுவதை இன உணர்வாளர்களும் போலியை நம்பும் ஊடகங்களும் உணராதவரை கனடாவாழ் மக்கள் இணையமுடியாது.

சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலில் பலிக்காடாவாகும் தமிழ்தேசிய உணர்வாளர்கள் புரிந்து கொண்டு ஆக்கபூர்வமான அரசியல் பணியை முன்னெடுப்பது சாலச்சிறந்ததாகும்.

தமிழ் ஊடக நண்பர்களே விழித்துக் கொள்ளுங்கள்.தமிழ்த்தேசியத்திற்கு எதிராக உங்களை அறியாமலே நீங்கள் துணை நிற்பதும் அரசியல் ஆளுமையை பெற்றுக்கொண்டு உங்கள் ஊடகப் பணியைத் தொடருங்கள். தமிழ்த் தேசிய வெற்றிக்கு உழையுங்கள்.தமிழ்த்தேசிய அழிவுக்கு துணை போகாதீர்கள்.நீங்கள் செய்யும் இனவிடுதலைக்கான பணி 12கோடி தமிழர்களை உள்ளடக்கிய உயரிய பணி.இதை ஒரிருவரால் சுக்குநூறாக்க நாம் அனுமதிக்கமுடியாது.

தமிழரின் தாகம் தமிழீழக்குடியரசு

நாம் தமிழ்த்தேசிய இறைமையைபாதுகாப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *