கையெழுத்து வேட்டையை மக்கள் முற்றாகப் புறக்கணியுங்கள். 

கடந்த காலங்களில் மானிப்பாய் கிறித்தவ தேவாலயம் மன்னார் மடுதேவாலயம் என தமிழீழ மண்ணில் தாக்கப்பட்ட தேவாலயங்களுக்கு மல்கம் ரஞ்சித் ஆண்டகை குரல் கொடுக்கவில்லை.அவர் சிங்கள இனவாதத்திற்கு துணைபோயிருப்பது தெரிந்திருக்கிறது.

இன்று கொஞ்சிக் கடை அந்தோனியார் தேவாயலத்தோடு ஏனைய தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய சரியான விசாரணைகள் நடைபெறவில்லையென்ற குற்றச்சாட்டை முன்வைத்து மல்கம் ரஞ்சித் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

 

இந்தப்போர்க்கொடி அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு மல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். இதை நாம் ஆதரிக்காவிட்டாலும் அமைதியாக இருந்தால் எமக்கான இனப்படுகொலை நீதிக்கான சிறுதுளி வாய்ப்பு எமக்குத் கிடைக்கலாம்.

 

உலகஅரங்கில் கிறித்தவ தேவாலய தாக்குதல் பேசுபொருளாக்கப்படவேண்டும்.அதை தமிழர் தரப்பில் செய்யப்பட்டாலும் அதை முறியடித்து சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் புலம்பெயர் கிறித்தவ ஆண்டகைகளும் ஐ.நா செயல்ப்பாட்டாளர்களும் புலம்பெயர் அமைப்புகளுமே.

 

இன்று சிங்கள தரப்பிலிருந்து வத்திக்கானால் நிறுவப்பட்ட சிங்கள ஆண்டகை இதை முன்னெடுக்கும் போது நாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். 

இப்போது மல்கம் ரஞ்சித் அனைத்துலக விசாரணையைக் கோரி வாய்ப்புக் கிடைத்தால் ஏனைய கிறித்தவ தேவாலய தாக்குதலும் உள்வாக்கபடுவதற்கான வாய்ப்பும் திறக்கப்படும்.

இதுவரை ஈழமண்ணில் தமிழ் ஆண்டகைகள் மல்கம் ரஞ்சித்தின் போர்க்கொடிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அதுபோலவே நாமும் அமைதியாக இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு போகும் போது நாமும் போகக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.பொறுத்திருந்து

பார்ப்போம்.

 

 வத்திக்கானால் மல்கம் ரஞ்சித்திற்கு வழங்கப்பட்ட பதவியைப் பறித்து தேவாலய தாக்குதலுக்கான நீதியை முடுவதற்காக சிங்கள அரசோடு ஒட்டிய  ஐநா செயல்பாட்டாளர்களால் பொய் சொல்லி முன்வைக்கப்படும் கையெழுத்து வேட்டையை மக்கள் முற்றாகப் புறக்கணியுங்கள். 

‘External interferences hampering 2019 attack probe?’ – Archdiocesan Committee

http://www.asianews.it/news-en/Card-Ranjith-calls-on-the-ICC-to-investigates-the-Easter-attacks-52336.html

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *