தமிழ்த்தேசியக்குரல் இராயப்பு யோசேப்பு இறப்புத் திருவோலை 

தமிழீழம் மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர்  இராயப்பு யோசப் ஆண்டகை தமது 80 அகவையில் 1.4.2021காலை 05.30 மணிக்கு உலகத்தமிழர் உயிர் மூச்சோடு இணைந்துள்ளார்.மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இன்று யாழ் திருச்சிலுவை கன்னியர் மட மருத்துவமனையில்  இறந்துவிட்டார்.

“தமிழ்த்தேசத்தின் கொடியை ஏற்றுவது தவறல்ல. அது விடுதலைப் புலிகளின் கொடி அல்ல தமிழ்மக்களின் கொடி” என வெளிப்படையாக குறிப்பிட்டவர் வணக்கத்துக்குரிய ஆண்டகை இராசப்பு யோசப் அவர்கள்.

“There is nothing wrong in the Tamil nation raising its national flag. The Tamil national flag is not the Tigers’ flag but it is the Tamil people’s flag”

தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன்  பணியாற்றிய தமிழ்த்தேசியக் குரல் ஒய்ந்திருக்கிறது.

ஆயர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் நெடுந்­தீவில் பிறந்தார். நெடுந்­தீவு றோ.க. பாட­சாலை, முருங்கன் மகா வித்­தி­யா­லயம், யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி ஆகி­ய­வற்றில் தனது பாட­சாலைக் கல்­வியைத் தொடர்ந்தார்.

கண்டி தேசிய குரு­மடம், திருச்சி புனித பவுல் குரு­மடம் ஆகி­ய­வற்றில் குருத்­துவக் கல்­வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு முன்னாள் யாழ்.ஆயர் எமி­லி­யா­னுசுபிள்ளை ஆண்­ட­கை­யினால் யாழ். மரி­யன்னை பேரா­ல­யத்தில் குரு­வாகத் திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரால் மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஆய­ராக நிய­மனம் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்­வு­நிலை ஆயர் தோமசு சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை உட்­பட ஈழமண்ணில் ஏனைய ஆயர்கள் புடை­சூழ மரு­த­மடு அன்னை ஆல­யத்தில் ஆய­ராகத் திருப்­பொ­ழிவு செய்­யப்­பட்டார்.

1981 ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை மன்னார் மாவட்ட இரண்டாவது ஆயராக கடமை யாற்றி ஓய்வு பெற்று சுகவீனமுற்று யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இவ்வுலகை விட்டு சென்றிருந்தார்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்று கொண்டு தனது வாழ்நாளை ஈகம் செய்த ஆண்டகை.

2006 ஆம் ஆண்டு யூலை மாதம் 17ஆம் நாள் பேசா­லையில் கடற்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ராக இடம்­பெற்ற தாக்­கு­த­லின்­போது இரண்­டா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் பேசாலை புனித வெற்­றி­நா­யகி அன்னை ஆல­யத்தில் அடைக்­கலம் புகுந்­தி­ருந்­தனர்.

ஆல­யத்தை நோக்கி துப்­பாக்கி வேட்­டுக்­களைத் தீர்த்­துக்­கொண்டு கடற்­ப­டை­யினர் செல்­கின்ற செய்­தியை அறிந்த ஆயர் ஆபத்­தான அந்தச் சூழ்­நி­லையில் அன்­றைய மன்னார் பிர­தேச செய­லாளர் திரு­மதி இசுரான்லி டிமெல் சகிதம் பேசா­லைக்கு சென்று நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்தார். இன்நேர்வு தொடர்பில் வத்­திக்­கா­னுக்கு தக­வல்­களை அனுப்­பினார்.

2007ஆம் ஆண்டு சன­வரி 2ஆம் நாள் இலுப்­பைக்­க­டவை பட­கு­த்துறைப் பகு­தியில் வானூர்திக் குண்­டுத்­தாக்­கு­தலில் இரண்டு குழந்­தைகள் உட்­பட 13 அப்­பாவிப் பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­போது அந்தத் தாக்­குதல் நடந்த சில மணித்­தி­யா­லங்­களில் குரு­மு­தல்வர் விக்ரர் சோசை அடி­க­ளா­ருடன் அந்த இடத்­திற்கு சென்று அம் மக்­களின் துய­ரத்தில் பங்­கு­கொண்­ட­தோடு கொல்­லப்­பட்­ட­வர்கள் கடற்­பு­லிகள் என்ற அரசின் செய்­தியை மறுத்து பொது­மக்­கள்தான் கொல்­லப்­பட்­டனர் என்ற செய்­தியை உல­கத்­திற்குத் தெரி­யப்­ப­டுத்­தினார்.

மன்­னாரில் 2011 சன­வ­ரியில் இடம்­பெற்ற எல்.எல்.ஆர்.சி அமர்வில் ஆயர் ஏனைய குருக்­க­ளோடு இணைந்து மக்­களின் சிக்கல்­களை எழுத்து மூல­மாக அறிக்­கை­யாக முன்­வைத்தார். வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள், தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள், சட்­டத்­திற்குப் புறம்­பான கொலைகள், போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் புனர்­வாழ்வு போன்ற உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பல செயற்பாடுகள் மற்றும் அர­சியல் தீர்வின் தேவை போன்ற விட­யங்­களை அவர் இந்த அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார். வன்­னியில் இருந்த மக்­களில் 146,679 பேருக்கு என்ன நடந்­தது? என்ற கேள்­வியை கேட்டு அர­சாங்­கத்தை ஆட்டம் காணச் செய்தார்.

2012 இல் வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஊடகவியலாளர்   நீங்கள் பயங்கரவாதியாக சிங்கள தரப்பு முத்திரை குத்துவது பற்றிக் கேட்கப்பட்ட போது ‘இங்கு நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழர் என்கின்ற தேசிய இனத்தை அழிக்கும் போது இறைத்தூதராக வத்திக்கானால் இம்மண்ணில் கிறித்தவ மக்களுக்காக நான் இருக்கும் போது கிறித்தவ தேவாலயங்களும் கிறித்தவ மக்களும் சைவ இசுலாமியத் தமிழர்கள் அழிக்கப்படும்பொழுது குரல் கொடுக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது. ஈழத்தமிழர்களின் துயரங்களைப் பற்றி அக்கறையோடு  அவற்றை பற்றி பேச நான் துணிவதாலேயே சர்ச்சைக்குரிய ஆயர் என்று அழைக்கப்படுகிறேன்’ என உறுதியாக யோசெசப் ஆண்டகை பதில் கூறியமை அவரின் மனவலிமைக்கு சான்றாகின்றது’ ‘நான் ஏழைகள் மேல் கரிசனை கொண்டு நீதிக்காகக் குரல் கொடுத்தால் நான் இலங்கைக்கு எதிரானவன், புலிகள் அல்லது பிரிவினைவாதி என்கின்றனர். 

 

ஒரு கொடூ­ர­மான போர்ச் சூழலில் பல்­வேறு நிலை­களில் துன்­பங்­களைச் சுமந்­து­நின்ற மக்­களின் துய­ரங்­களைத் துடைக்க அவர் அரும்­பா­டு­பட்டார்.எம் ஆயர் அவர்கள் மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் அவர்கள் போர்க் காலத்தில் தமிழ் மக்களுக்காக  தனது சேவையை வழங்கிய தேசியக்குரல். தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்த பெருந்தகை.தமிழீழ மக்களுக்கு நடக்கும் மனித உரிமை மீறல்களுக்காகப் போராடியவர். தமிழ்த்தேசியத்தின்பால் உறுதியான பற்று கொண்டவர் 

சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மையபீடத்தில் இருந்து வந்த எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது  தமிழ் மக்களின் விடுதலையை நோக்கி மக்களின் சார்பில் குரல் தந்தவர்  இராயப்பு யோசப் ஆண்டகை. தமிழர்களின் அரசியல் இறைமைக்கான விடுதலைக்கான தமிழ்தேசியக் குரலாக ஒலித்தபோது  அவருக்கெதிராக சிங்கள அரச பயங்கரவாத சட்ட விசாரணைப் பிரிவு ஊடாக பல விசாரணைகளை முடுக்கி விட்டது; அவரை பயங்கரவாதி என்றும் முத்திரை குத்தியபோதும் அவற்றை பொருட்படுத்தாது தொடர்ந்து தமிழீழமக்களின் அரசியல் அதிகாரத்திற்கான பணியை ஆற்றினார்.  

சிறை­களில் வாடும் கைதி­களை அவர் அடிக்­கடி சென்று பார்­வை­யிட்டு அவர்­களின் விடு­த­லைக்­காகக் குரல் கொடுத்தார். அவர்­க­ளோடு தனிப்­பட்ட தொடர்­பா­டல்­களை வைத்­தி­ருந்தார். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் சார்­பாக நின்று அவர்­களைக் கண்­டு­பி­டிக்க அல்­லது அவர்­களின் கதியை வெளிக்­கொ­ணர ஓயாது உழைத்தார்.

யுத்­தத்தால் தமது இல்­லி­டங்­களை இழந்­த­வர்­க­ளுக்கு வீடு­களைக் கட்­டிக்­கொ­டுக்க முயற்­சி­களை மேற்­கொண்டார். முள்­ளிக்­கு­ளத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கும், விடத்­தல்­தீவில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கும் அவர் காணி­களை, வீடு­களை வழங்­கி­யமை இதற்கு உதா­ர­ண­மாகும்.

யுத்­தத்தால் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வாழ்­வோ­தய நிறு­வ­னத்தின் உத­விக்­கரம் பிரிவு மூலம் உத­வி­களைப் புரிந்தார். வவு­னியா பம்­பை­ம­டுவில் அமைந்­துள்ள வரோட் நிறு­வ­னத்தின் ஊடா­கவும் இவர்­களின் புனர்­வாழ்­வுக்­காகப் பாடு­பட்டார்.

போராலும், சுனாமியாலும் பெற்­றோரை இழந்து ஆத­ர­வற்று நின்ற பெண் சிறார்­க­ளுக்கு வவு­னி­யாவில் சலே­சிய அருட்­ச­கோ­த­ரி­களின் பரா­ம­ரிப்பில் இல்­லத்தை ஆரம்­பித்தார். அதேபோல் மன்­னா­ரிலும் ஆண் சிறார்­க­ளுக்­கான ஓர் இல்­லத்தை ஆரம்­பித்தார். இவ்­வாறு இன்னும் பல துயர்­து­டைப்புப் பணி­களை முன்­னெ­டுத்தார்.

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழும் போதும், உயிர்நீத்த பின்னரும் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இருப்பார் என்பது பொதுவான கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு சென்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தில் மக்களுக்காக இடையறாது தனது சேவையை வழங்கியவர். தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர்.மனித உரிமை மீறல்களுக்காக போராடியவர். தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்டவர்

சிங்கள இனவெறியரசு குறிப்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஊடாக பல விசாரணைகளை முடுக்கி விட்டது; அவரை பயங்கரவாதி என்று முத்திரையை குத்தியது. அவற்றை பொருட்படுத்தாது தொடர்ந்தும் தமிழீழ மக்கள் அரசியல் உரிமையைப் பெறுவதற்கான அனைத்து வழி போராட்டப்  பணிகளை ஆற்றினார். 

.‘நான் ஏழைகள் மேல் கரிசனை கொண்டு நீதிக்காகக் குரல் கொடுத்தால் நான் சிங்களவருக்கு எதிரானவன், புலிகள் அல்லது பிரிவினைவாதி என்கின்றனர்.

சிங்கள அரசால் மகிந்த ராசபக்ச வால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (  Lessons Learnt and Reconciliation Commission) முன்னிலையில் ஆண்டகை  வழங்கிய தனது சாட்சியத்திலும் 146, 679 பேருக்கு இறுதிப்போரில் என்ன நடைபெற்றது என்று தெரியவில்லை வெளிப்படையாக பதிவு செய்தவர் ஆண்டகை.

மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை ஆயர் பணியில் 25 ஆண்டுகளை நிறை­வு­செய்து இன்று வெள்­ளி­விழாக் காண்­கிறார்.

இறைமகனாக வாழ்ந்து மக்கள் மனதில் உறையும் ஆண்டகைக்கு தமிழ்த்தேசத்தை நேசிக்கும் 12 கோடி மக்களின் இறுதி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *