பிரான்சு _இவ்றி சூர் சென் நகரில்(Ivry -Sur-Seine) தமிழினப்படுகொலைத்தீர்மானம் நிறைவேற்றம்

2018 ஆண்டு பிரான்சு நாட்டில் அரசியல் செயற்பாடு சார்ந்த அமைப்பாக தமிழ்ப் பண்பாடு வலையம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தமிழினப்படுகொலைக்கான நீதி வேண்டியும் தமிழீழ மக்களுக்கான நிரந்தரமானதும் தமிழீழ மக்களின் இறைமையை பாதுகாக்க கூடிய தீர்வாக தமிழீழக்குடியரசே உறுதியானதும் நிரந்தர தீர்வாக இருக்கும் என்பதில் நம்பிக்கையோடு செயல்படுகிறார்கள்.

இவர்களுடைய இப்பணி பிரான்சு நாட்டு அரச மட்டத்தில் தமிழீழ மக்களின் தீர்வை முன்னிலைப்படுத்தி அதற்கான ஆதரவை திரட்டி வருகிறார்கள்.அந்தவகையில் 2052 ஆம் ஆண்டு மீனம் 27 ஆம் நாள்  (April8,2021)(Ivry-Sur-Seine,France) பிரான்சு நாட்டில் உள்ள இவ்றி-சூர்-சென் என்ற நகரசபையில் ஈழத்தமிழர்களின் இறைமையைப் பாதுகாக்கத் கூடிய தமிழினப் படுகொலையைக் செய்த சிங்கள இனவெறியரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் மற்றும் தமிழீழ மக்களுக்கான ஒரே தீர்வு தமிழீழக்குடியரசு என்ற வேண்டுகையை ஒருமித்த ஆதரவோடு இவ்றி_சூர்-சென் நகரசபை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்றி-சூர்-சென் நகராட்சி மக்களுக்கும் நகராட்சி உறுப்பினர்களுக்கும் உலகில் வாழும் 12கோடி தமிழர்கள் சார்பாக பறை ஊடகக் குழுமம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *