தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியப் போராளிகள் மிகப் பெரும் துணிச்சலான வலிமையோடு !

 

நகர்புற உள்ளூராட்சி தேர்தல் 2022 ஆம் ஆண்டு 19ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் நாம் தமிழர் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் அனைவரும் பலகோடி ரூபா மதிப்பும் அரசியல் ஆளுமை நிறைந்தவர்களாக களம் கண்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் தனித்து தமிழ்த்தேசிய அரசியலை முன்வைத்து ஆரிய திராவிட தமிழின அழிப்பாளர்களை எதிர்த்து நாம் தமிழர் போராளிகள் மிக சிறப்பாக களமாடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேசியக் கொள்கையோடு முதன்முதலில் உள்ளூராட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு 7 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
முதன்முதலில் எந்தவித பின்புலம் இன்றி தமிழ்த்தேசியக் கொள்கையை ஏற்று 7இடங்களில் தமிழ்தேசியம் வெற்றி பெற்றிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தேசிய மாநில ஊள்ளூராட்சி படிநிலைகளில் தமிழ்த்தேசிய அரசியல் சிறப்பாக வலிமையோடு வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஊள்ளூராட்சி தேர்தலில் மிகவும் வயதில் குறைந்தவர்களாகவும் எந்தவித அரசியல் பின்புலமும் இன்றி துணிச்சலோடு களம் கண்ட தமிழ்த்தேசியப்போராளிகள் நாம் தமிழர்கட்சி போராளிகள்.

70ஆண்டு அரசியல் பின்புலம் கொண்ட திராவிட தேசியக் கட்சிகளோடு ஒற்றைக்கு ஒற்றையாக தனித்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டுக் களமாடியவர்கள் நாம் தமிழர் கட்சி போராளிகள்.

நாம் தமிழர் கட்சியின் மிக இளம் வேட்பாளர்களை கடத்துவதும் போட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக விலகச் செய்வதும் பல இலட்சம் ரூபாவுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விலை பேசியும் திராவிட தேசியக் கட்சிகள் ஊள்ளூராட்சியில் பல அடாவடித்தனங்களையும் அத்துமீறல்களையும் சனநாயக அரசியலுக்கு எதிராக ஊள்ளூராட்சி தேர்தலில் செயற்பட்டார்கள்.

நாம் தமிழர் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களைக் கண்டு ஏனைய கட்சிகள் அச்சமடைந்திருப்பதே நாம் தமிழர் போராளிகளுக்கு தமிழ்த்தேசிய அரசியலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

தமிழ்நாட்டு வளத்தை பாதுகாப்பதற்காக தமிழரின் இறைமையைப் பாதுகாப்பதற்காக மக்கள் தேவையை வளமாக்கப் போராடுபவர்கள் நாம் தமிழர் கட்சியும் அதன் ஒருங்கமைப்பாளர் செந்தமிழன் சீமானுமே.

2010 ஆம் ஆண்டு தமிழின அழிவில் இருந்து பிறந்த தமிழ்த் தேசிய அரசியலை செந்தமிழன் சீமான் ஒற்றைத் தமிழனாக முன்னெடுத்தார்.

12 ஆண்டுகளுக்குள் செந்தமிழன் சீமான் தமிழ்த்தேசிய அரசியல் விதைகளை விதைத்துபல இலக்கம் தமிழ்த்தேசியப் போராளிகளை தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் களமாடிக் கொண்டிருக்கிறார்..

நாம் தமிழர் கட்சி தொடங்கிய பின் 2016,2019,2021 2022 என பல தேர்தலில் களமாடியவர்கள். இன்று வலிமை நிறைந்த தமிழ்த்தேசியப் போராளிகளாக பல இடையூறுகளையும் உடைத்துக் கொண்டு உலகப்பந்தில் உயர்ந்து திற்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் 72ஆண்டுகளாக தமிழை அழித்து தமிழர்களின் வாக்கைப் பெற்று திராவிட அரசியலை தமிழ்நாட்டில் விதைத்து தமிழ்நாட்டு வளங்களை பணமாக்கி பணநாயகத் தேர்தலால் தமிழ்த்தேசிய அரசியலை அழிப்பதற்கு திராவிட தேசியக் கட்சிகள் தன்மானங்களை இழந்து தமிழ்நாட்டின் நம்பிக்கைத் துரோகிகளாக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அழிக்கும் இழிவான பணியை முன்னெடுத்து வருகிறார்கள்.

ஈழமண்ணில் 2500 ஆண்டுகளாக சிங்கள இனம் தமிழினத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள்.தேசியத் தலைவரின் தலைமையை ஏற்று தமிழீழ மக்களின் முழுமையான பங்களிப்போடு 1983 இலிருந்து 2009வரையுள்ள 26 ஆண்டுகளில் தமிழீழக் குடியரசை நிறுவியதோடு 20 வல்லரசு நாடுகளின் படைகளுக்கு சமமான வலிமையை கட்டியெழுப்பியவர் தமிழீழ தேசியத்தலைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளுமே.

தமிழீழ மண்ணில் தமிழ்த் தேசியத் தலைவரின் மிகப்பெரிய கட்டமைப்பை கட்டியெழுப்பிய தமிழீழ அரசின் வலிமையை உடைத்து தமிழ்த்தேசியத்திற்கு ஆப்படித்தவர்கள் திராவிட ஆரியக் கட்சிகளுமே.

நாம் தமிழர் கட்சித் போராளிகள் இவற்றை நினைவில் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு மண்ணையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் திராவிட ஆரிய போலிகளிடமிருந்து நாம் தமிழர் போராளிகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி தமிழ் நாட்டு மண்ணை தமிழர் ஆளுமை செலுத்தக்கூடிய அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டும்.அதற்கு உலகத் தமிழர்கள் அனைவரும் துணை நிற்ப்பார்கள்.

2009 இல் நாம் தமிழர் இயக்கமாக ஒற்றைத் தமிழனாக தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ்த்தேசிய அரசியலைப் பேசி 2021 ஆம் ஆண்டுத் தேர்தலி்ல் அறிவுக்கருவிப் போராளிகளாக 30,00,000 தமிழர்கள் இன்று களத்தில் சீமானோடு களமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி என்பது தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் அடுத்த தலைமுறைக்கான கட்சி.
வாக்குக்கு பணம் கொடுக்காமல்
வாக்குக்கு பரிசுப் பொருட்கள் கொடுக்காமல்
கள்ள வாக்குகள் போடாமல் சனநாயக அடிப்படையில் தமிழ்த்தேசிய தூய வாக்கைப் பெற்ற ஒற்றைக் கட்சி நாம் தமிழர்கள் கட்சி.

72 ஆண்டுகளாக திராவிட சாக்கடையில் இருந்த அடிமைத்தனத்தில் சுவை கண்டவர்களுக்கு தமிழ்த்தேசிய அரசியலை புரிந்து கொள்ளும் பக்குவம் இழந்த நிலையில் தமிழ்த்தேசிய அரசியலை ஊட்டவேண்டிய பொறுப்பு நாம் தமிழர் கட்சிக்குரியதாகும்.

தமிழ்நாட்டு அறிவுக்கருவிப் போராளிகளின் அரசியல் ஆளுமை நாளுக்கு நாள் போலித்திராவிடத்தை கொஞ்சம்கொஞ்சமாக விரட்டிக்கொண்டிருக்கிறது.

தமிழ்த்தேசிய அரசியல் தமிழ்நாட்டில் ஆளுமை கொண்டு அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்வது என்பது பல தடைகளை உடைத்தெறிந்து தான் உறுதியாக வெல்லமுடியும்.
தமிழ்த் தேசிய அரசியல் தனித்துக் களமாடுதல்
திராவிட ஆரிய சூழ்ச்சிகளை களவுகளை உடைத்தெறியவேண்டும்.
இன்றைய களம் வெற்றி பெறுவதற்காக களமாடுதல் மட்டுமே.
அரசியல் அதிகாரத்தை அடையும்வரை களமாடுதல்.
தமிழ்த் தேசிய அரசியல் அதிகாரத்தை பிடிப்பதில் ஒற்றைக் குறிக்கோளோடு நாம் அனைவரும் களமாடுவோம்.

Powered by BetterDocs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *