கடந்த 31 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலில் ராயீவ் காந்தி கொலை என்ற தொட்டிலில் தமிழ்த்தேசியம் என்ற வீரப்புலியை போட்டுப் பந்தாடிய திராவிட இந்திய இந்துத்துவ சிங்கள கூட்டுச் சதியை உடைத்த உயரிய பேராற்றல் நிறைந்த களப்போராளி பேரறிவாளன்.பொய்க்குற்றச்சாட்டால் 31 ஆண்டுகள் திராவிட இந்திய அரச மையங்கள் எழுவர் விடுதலையை அங்கும் இங்குமாகப் பந்தாடியபோதும் அதை சவாலாக எதிர்த்துப் போராடி போட்ட சிறைக்கம்பிகளை உடைத்த பெருந்தமிழர் பேரறிவாளன்.தமிழினம் வீரமும் காதலும் நிறைந்த தனித்துவமான இனம் என்பதை உலகிற்கு ஆணித்தரமாக வெளிப்படுத்திய அறவழிப்போராளி பேரறிவாளன்.
பேரறிவாளனின் விடுதலை பேரறிவாளன் கையால் மட்டுமே சாத்தியமானது.இதை திருட்டுதிராவிடக் கட்சிகள் உரிமை கொண்டாட முடியாது.உரிமை கொண்டாடக்கூடாது.தமிழ்த்தேசிய அரசியலாளர்களின் ஆதரவும் துணையும் பேரறிவாளனுக்கு துணை நின்றது.ஆனால் விடுதலையை தனக்கு சாதகமாக்கிய பெருமை பேரறிவாளனுக்கும் அவரின் சட்டவல்லுனர்களின் கையில் மட்டுமே இருந்தது.அரச அதிகாரிகளின் சட்டத்தை உடைத்து அரசியல் அதிகார மையங்களின் ஆதிக்கத்திற்கு மிகச் சிறந்த முறையில் ஆப்படித்த அறவழிப்போராளி பேரறிவாளன்.தொடர்ந்து அறுவர் விடுதலையையும் தமிழ்நாட்டு தமிழ்த்தேசியம் சாத்தியமாக்கும். அறுவர் விடுதலை பெற உலகில் வாழும் 12 கோடி தமிழர்களும் வாழ்த்துகிறோம்.