“அழியாத தமிழே” பாடல் வெளியீடு

தமிழின் வரலாற்றை முழங்கிய பாடல். இசையில் தமிழனின் வரலாற்றுப் பெருமை கொண்ட இசைக்கருவிகள் கொண்டு இப்பாடல் உயர்வான எழுச்சியுடன் வடிவமைக்கப்பட்ட பாடல். பறை இசைக்கலைஞர்கள் தமது வாழ்வை தமது பண்பாட்டு  இசைக்கருவிகளோடு இணைத்துக் கொண்ட இசை வள்ளல்கள்.

“அழியாத தமிழே” பாடலுக்கு இசை வழங்கிய இசை அமைப்பாளர்  பி.எசு.விமல். எள்ளளவும் தமிழின் வலிமையையும் வீரியத்தையும் குறையவிடாமல் நேர்த்தியாக இசைவழங்கிய இசைத்தென்றல் விமல்.

இப்பாடலுக்கு வரியை எழுதிய பாடல் ஆசிரியர் ஏ.யே.ரி.தர்சன். தர்சனின் வரிகள் இசைக்கேற்ப வரிகள் கோர்வையாக்கி பாடலை மெருகூட்டியது. இப்பாடலில் யெயன் றெயிசு இருவரின் குரல் தமிழின் முழக்கத்தின் செறிவூட்டும் வலிமையையும் குன்றவிடாத உன்னதமான குரலால் ஒலிமாலையாக்கியவர்கள். பாடல் வரிகள் இசை பாடகர் குரல் ஒருங்கே ஒன்றுக்கொன்று இசைவாக இணைந்ததால் பாடல் மேலும் சிறப்பாக அமைந்திருக்கிறது.இப்பாடலை வி.எசு.யெயன் பி.எல் றெயிசு  இருவரும் பாடியுள்ளார்கள்.

இப்பாடலுக்கான ஒலிக்கலவை செய்தவர் எம்.பகி.இப்பாடல் தயாரிப்பை சுவிஸ் றகு சிறப்பாக செய்துள்ளார்.அகம் கலியுகத்தில் ஒலிப்பதிவு ஒளிப்பதிவு செய்யப்பட்டது. வெளியீடு நாம்படைப்பகம்.

“அழியாத தமிழே” பாடல் தயாரிப்பில் கைகோர்த்த றகு,விமல்,தர்சன் யெயன் றெயிசு பகி இசைக்கருவி கலைஞர்கள் அனைவரின் கூட்டுமுயற்சியே இப்பாடல் வெற்றிக்குத் துணை.

“அழியாத தமிழே” என்ற பாடல் தயாரிப்பில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.

இப்பாடல் தயாரிப்பில் பங்கேற்ற உயர்ந்த  கலையுள்ளங்கள் அனைவரையும் உலகில் வாழும் 12கோடி தமிழர்கள் சார்பாக  பறை ஊடக குழுமம்  வாழ்த்துவதோடு நன்றியுணர்வையும்  தெரிவித்துக் கொள்கிறோம்..

தமிழ் வாழ்க! தமிழன் வாழ்க!

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE