தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சிங்கள பயங்கரவாத அரசின் யாப்பின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சிங்கள நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கான உள்ளக சிக்கல்களை பேசுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
சிங்கள அரசின் தேர்தலில் போட்டியிடும் எந்தக்கட்சியாலும் தமிழர்களின் உரிமைச்சிக்கலைத் தீர்க்கமுடியாது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தெளிவாகவே உள்ளக சிக்கலைத் தீர்ப்பதற்காக மட்டுமே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.இதன் தெளிவை மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் காணொளிப்பதிவூடாக வெளிப்படுத்தியுள்ளார்.
இனச்சிக்கலுக்கான பேச்சுக்களையோ வெளிநாடுகளுடனான தமிழர் தரப்பாகப் பேசுவதற்கோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு அருகதை கிடையாது.
மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.காரணம் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக சிங்கள நாடாளுமன்றத்தில் இயக்குவதற்காக மட்டுமே மக்கள் வாக்களித்து தெரிவு செய்யப்பட்டார்கள்.
இந்த அரசியல் தெளிவு தமிழின அழிப்புக்கு 2009 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கிய தமிழினத்துரோகி சம்மந்தனுக்குப் புரிவதற்கு வாய்ப்பு இல்லை.காரணம் துரோகி சம்பந்தனுக்கு தேசியத்தலைவர் வழங்கிய மன்னிப்பு தமிழின நலன்சார்ந்த மன்னிப்பு.ஆனால் தமிழினத்துரோகி சம்பந்தன் தனக்கு வழங்கிய மன்னிப்பை மறந்து நன்றி கெட்டு தன்னை வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய தமிழினத்திற்கு வழங்கிய பரிசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.
இதே வழித்தடத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் தமிழின அழிப்பை மூடி மறைப்பதும் ஈழமண்ணின் தமிழர்கள் தொன்மைக்குடிகள் என்பதை அழித்து “சிறுபான்மையினர்” என்பதைத் திணித்து தமிழர்களின் இருப்பை அழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்துரோகி சுமந்திரனை “கள்ளன்” என்ற உயரிய பட்டத்தை பல நாடுகளில் வாழும் தமிழர்களால் வழங்கி மதிப்பளித்திருக்கிறார்கள்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம்நாள் சனிக்கிழமை மாலை கனடா இசுக்காபுரோ நகரில் அமைந்துள்ள யே.யே விருந்தினர் மண்டபத்தில் கலந்து கொண்ட சுமந்திரனை கனடா வாழ் தமிழர்களால் விரட்டியடிக்கப்பட்டார்.
இந்தக் கள்ளன் கனடாவுக்கு வந்து கனடாவாழ் தமிழர்களின் தமிழினஅரசியல் செயற்பாட்டில் புகுந்து விளையாட வந்துள்ளார்.அதுவும் ஒரு முதன்மைக்காரணம்.
தமிழீழ மக்களின் இனச்சிக்கலைத் தீர்க்கும் அதிகாரம் மக்களிடமே உண்டு.சிங்கள அரச தேர்தலில் பங்கேற்கும் எந்தக்கட்சியாலும் தமிழர்களின் தன்னாட்சி கொண்ட அதிகாரத்தை பெற்றுத்தர முடியாது.