ஊத்தைத் தமிழர்களின் இன்றைய பணி தமிழ்தேசியத்தை இழிவுபடுத்துவதே

 ஈழத்தமிழினம் கடந்த 400 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் இழந்தவர்கள்.இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு பலவழிகளிலும் ஈழத்தமிழினம் போராடி வந்திருக்கிறோம்.தேசியத்தலைவர் வழிநடத்தலில் 1970 ஆம் ஆண்டு முதல் 2009வரை நடந்த ஈழத்தமிழரின் இறைமைக்கான போர் வலிமை கொண்ட காலம்.தேசியத்தலைவரின் தலைமையில் உலக நாடுகளின் வல்லாதிக்க வலிமைக்கு தமிழீழ விடுதலையின் இறைமைக்கான படையை சமநிலைப்படுத்தியவர் தேசியத்தலைவர்.

இதற்கு கொடுத்த விலைமதிக்கமுடியாத வலிமை நிறைந்த சொத்துக்கள்:

1.50 ஆயிரம் மாவீரர்களின் அளப்பரிய உயரிய உயிர் ஈகம்

2.உடலில் காயவலியோடு போரில் தங்களை அர்பணித்துவிட்டு இன்று வலி சுமக்கும் பல ஆயிரம் மாமனிதர்கள் எங்களோடு வாழ்கிறார்கள்.

3.முள்ளிவாய்க்காலில் 160000 காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ஈகிகளும் அவர்தம் உறவுகளும் தொடர்ந்து வலி சுமக்கும் இனப்பற்றாளர்களும் 

4.ஈழத்தின் விடுதலைக்காக புலம்பெயர்ந்த மக்கள் காவலராக நின்று பல்துறைப்பங்களிப்பால் கட்டியணைத்து வலிமையாக்கி தேசியத்தலைவருக்கு துணை நின்ற மொழி இனப்பற்றாளர்கள்.

ஒவ்வொரு தனிமனிதனையும் இணைத்து தமிழீழக்குடியரசை நிறுவியவர் தேசியத்தலைவர்.

தேசியத்துக்கு  நிற்பதாக மக்களை ஏமாற்றிய போலிமுகங்களை 2009க்குப்பின் மக்கள் முன் வெளிச்சத்திற்கு வந்தது.விடுதலைப்புலிகளுக்கு பணம் சேகரிக்கச் சொல்லி கனடாவில் உள்ளவர்களுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்கவில்லை.

கனடாவில் விடுதலைபோராட்டத்தையும் வன்னித்தலைமையும் வைத்து கனடாவில் வாழும் தமிழர்களிடம் ஊத்தைத் தமிழர்கள் அச்சுறுத்தி பல இலட்சம் கோடிகளை திரட்டினார்கள்.கனடாவில் விடுதலைப்புலிகளின் பேரில் பணம் திரட்டியதை கனடாவாழ் மக்கள் வன்னித்தலைமைக்குதெரிவித்தபோது விடுதலைப்புலிகள் அதை மறுத்திருந்தார்கள்.விடுதலைப்புலிகளுக்கு தெரியாமல் கனடா சட்டவிதிமுறைக்கு எதிராக கனடாவில் தமிழ் மக்களை அச்சுறுத்தி பலகோடிகளைத் திரட்டினார்கள்.

விடுதலைப்புலிகளைத் சொல்லி மக்களை அச்சுறுத்தி  பணம் திரட்டிய எவருக்கும் அரசியல் அறிவோ ஆளுமையோ இல்லை.இவர்களின் ஒரே மனநிலை விடுதலைப்புலிகளைத் சொல்லி பணம் திரட்டுவது மட்டுமே.விடுதலைப்புலிகள் கருவிகளை 2009இல் மௌனிக்க முன் கனடாவில் பணம் திரட்டிய ஊத்தைத் தமிழர்கள் கனடா அரசுடாக  ஈழத்தமிழர்கள் சார்ந்த நல்லிணக்க அரசியல் உறவு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.காரணம் விடுதலைப்புலிகளுக்கும் கனடாவில் பணம் திரட்டியவர்களுக்கும் எந்த அரசியல்தொடர்போ போராட்டம் சார்ந்து இருக்கவில்லை.

2009க்கு முன் விடுதலைப்புலிகளைச் சொல்லி மக்களிடம் பொய்சொல்லி பணம் திரட்டியவர்கள் நான்கு சுவருக்குள் இருந்து தண்ணியடித்தார்கள்.

2009க்குப் பின் இப்போது அச்சுறுத்தி பணம் வாங்கியவர்களின் பணத்தில் மதுவை வாங்கி அதில் தேசியத்தின் சின்னத்தைப்  பொறித்து தமிழீழ மக்களையும் மக்களின் போராட்டத்தையும் இழிவுபடுத்துகிறார்கள்.இவர்களின் பணி தொடர்ந்து தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்த இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.காரணம் வெளிப்படையாக தண்ணியடித்தால் பணம் திரட்டமுடியாது.இன்று  மக்களிடம் பொய் சொல்லி பணம் திரட்டியவர்களே இன்று விடுதலைப்புலிகளை இழிபடுத்தி திரட்டிய பணத்தை மக்கள் கேட்காமல் செய்யவே இந்த நாடகம்.

விடுதலைப்புலிகளைத் சொல்லி பணம் திரட்டியவர்கள்  தொடர்ந்தும் போராளிகளை  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் உறவுகளை இழிவுபடுத்தி வருகிறார்கள். 2009 இல் இருந்து பலகோடி பணத்தை மூடிமறைப்பதற்காக எமது விடுதலையைக் அவமதித்து இழிவுபடுத்தி வருகிறார்கள்.தமிழீழ விடுதலையை இழிவுபடுத்திவிட்டு மன்னிப்பு கேட்பது மிக இழிவாகும். காணொளியில் சொல்கிறார்,மாவீரர் மீதும் விடுதலை மீதும் அளப்பரிய பற்றுதலால்இது நடந்தது என்பது மிகக் கீழ்த்தரமானது.இவ்வளவு காலமும் பணத்திற்காகவே தமிழ்த்தேசியத்தை கையிலெடுத்தார்கள்.

இவரைப்போல இன்னும் பல இழிவுபடுத்தல்கள் போலித்தமிழ்த்தேசியவாதிகளால் முன்வைக்க இருக்கிறார்கள்.திரட்டிய பணத்தை காப்பாற்றவும் மக்களை தமிழ்த்தேசியத்தில் இருந்து விரட்டவும் பல்வேறு வழிகளில் பலரைக் கையாண்டு தமிழ்த்தேசியத்தை அழிக்கும் பணியில் பல போலித்தமிழ்த்தேசியவாளர்கள் கனடாவில் களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் கனடாவாழ் மக்களை அச்சுறுத்தி பணம் திரட்டியவர்களும் அவர்களின் பின்னால் நின்ற சில போலி சுயநலவாதிகளுமே.மக்களே நீங்கள் மக்களோடு மக்களுக்காக நில்லுங்கள்.போலிகளை இனம் கண்டு ஒதுக்குங்கள்.

அமைப்புகள் மக்களை ஏமாற்ற தம்மை தமிழ்த்தேசியவாதிகளாக முதலைக்கண்ணீர் விடுவதுடன் பல ஏமாற்று அறிக்கைகளை வெளியிட்டு தொடர்ந்தும் ஏமாற்றும் பணியில் இறங்கியுள்ளார்கள்.

மக்கள் விழிப்போடு இருங்கள்.அரசியலை கற்றுக் கொள்ளுங்கள்.அரசியல் செய்யுங்கள்.

தடைகளை உடைத்து தமிழ்த்தேசியத்தை மக்களாக கட்டியெழுப்புவோம்.

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE