எமக்குக் கிடைத்த இசைக்கொடையாளர் கமலக்கண்ணன்

இசைக்கலைஞர் கமலக்கண்ணன் 2052 நளித்திங்கள் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை( 28.11.2021) சாவைத் தழுவிக் கொண்டார்.
கமலக்கண்ணன் இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்.எங்களின் உயிருக்கு நிகரான மறைந்த திருச்சி லோகநாதனின் மகன் கமலக்கண்ணன்.இவர் பல ஆண்டுகளாக கனடாமண்ணில் வாழ்ந்து வந்தார்.ஈழத்தமிழர்களின் மிக நெருக்கமாக பழகிய இசைக்கலைஞர். ஈழத்து இசைக்கலைஞர்களோடு இணைந்து பல நிகழ்வுகளில் பங்கேற்க கலைஞர்.
தமிழ்நாட்டில் இசைத்துறையில் திருச்சி லோகநாதன் முதன்மையான தமிழர்.அவரின் வாரிசுகள் தமிழ் நாட்டில் இன்றும் கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கிறார்கள்.
கனடாவிலும் கமலக்கண்ணன் ஈழத்தமிழர்களால் உயரிய கலைஞராகப் போற்றப்படுகிறார்.
கமலக்கண்ணன் உலகத்தமிழர்களால் என்றும் போற்றுதலுக்குரியவர்.கமலக்கண்ணன் எங்கள் ஒவ்வொருவருடைய மூச்சோடு கலந்துவிட்டார்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE