ஐந்தாவது நாளாக ஐ.நா நோக்கி 

05/09/2021 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை Vantoux நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Les Étangs, Brouck, Hombourg-Haut, Grundviller, Sarralbe, Sarre- Union, Eschwiller, Hirschland, Bourscheid, Phalsbourg, ஆகிய நகரசபை முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது….

இனவெறி சிங்கள அரசை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் ஐந்தாவது நாளாக ஐ.நா நோக்கி தொடர்ந்து பணிக்கும் நீதிக்கான பயணம்தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும், அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம்.

அனைத்து நகரசபைகளும் ஆர்வத்துடன் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளை கேட்டறிந்தனர். எமது நீதிக்கான பயணத்திற்கு தங்களுடைய வாழ்த்துகளையும் விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஊட்டினார்கள். தமிழ் மக்களுக்கு எப்போதும் தங்கள் ஆதரவு இருக்கும் என்ற உறுதியையும் வழங்கினார்கள். மற்றும் சில நகரசபைகள் குளிர்பாணங்கள் சிற்றுண்டிகள் வழங்கி மிகவும் அன்போடு வரவேற்று அரவணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களுடைய நீதிக்காக சில நகரசபைகள் தங்களால் இயன்ற அளவு பணிகளை தமிழ் பண்பாட்டு வலையத்துடன் இணைந்து செயற்படுத்த தங்கள் விருப்பத்தையும் ஆர்வத்தையும் தெரிவித்திருந்தனர்.
இன்றைய நீதிக்கான பயணத்தில் Sarre-Union நகரில் பிரெஞ்சு ஊடகத்தினரும் கலந்து கொண்டு நீதிக்கான பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஐந்தாவது நாள் நீதிக்கான பயணம் Phalsbourg நகரசபையுடன் நிறைவு பெற்றது.
error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE