சிங்கள நாடாக 1972 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கா பிரகடனப்படுத்தினார்.
1933 ஆம் ஆண்டு முதல் 1972 ஆண்டுவரை தமிழீழ மக்கள் சிங்கள மக்களின் உடன்பிறப்புக்களாக இணைந்து வாழ பல்வேறு வழிகளில் துடித்தார்கள்.தமிழர்கள் சிங்களவர்களிடம் தொடர்ந்து தமிழர்கள் அடிவாங்கியபோதும் திருப்பி ஒரு சிங்கள உடன்பிறப்புக்களை 1983 ஆம் ஆண்டு வரைதமிழர்கள் திருப்பி அடிக்கவில்லை.
தமிழர்களை உயிரோடு எரித்தார்கள்.தமிழர்களை வெட்டினார்கள்.தமிழர்களை சுட்டார்கள்.தமிழர்களை ஊரைவிட்டு விரட்டினார்கள்.தமிழர்களை நாட்டைவிட்டு விரட்டினார்கள்.வீடுகளை எரித்தார்கள்.கடைகளை எரித்தார்கள்.காணிகளை விட்டுவிரட்டினார்கள்.வீடுகளை சேதப்படுத்தினார்கள்.வீடுகளை விட்டு விரட்டினார்கள். தமிழ்ப்பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்தார்கள்.தமிழ்ப்பெண்களை வன்புணர்வு செய்து வெட்டிக்கொன்றார்கள்.தமிழர்களை முதலைக்கு இரையாக்கியவர்கள் ராசபக்ச குடும்பத்தினர்..
1976 ஆம் ஆண்டு சிங்கள மக்களால் தமிழர்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதைப் பொறுக்கமுடியாமல் தமிழீழ மண்ணில் வாழும் தமிழர் தலைமைகள் இணைந்து தமிழீழக் கோரிக்கையை முன்னிறுத்தி தமிழர்களின் இறைமையைப் பாதுகாக்கும ஒற்றை தீர்வு தன்னாட்சி கொண்ட “தமிழீழ அரசு” நிறுவவேண்டும் என தமிழர்களுக்கான தமிழீழ நாட்டை வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்யப்பட்டது.
1977 இல் தேர்தலில்தமிழீழ தனியரசுக்கு வாக்களித்து தமிழீழ அரசை நிறுவப்பட்டது.1972 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கா சிங்கள நாடு சிறீலங்கா என பிரகடனப்படுத்தி தமிழர்களை அழிப்பதற்காக முழுவீச்சாக முன்னேறினார்கள்.
1983 ஆம் ஆண்டு சிங்களப்படையினர் தமிழர்களை சுட்டுக்கொலை செய்தும் தமிழர்களின் வீடுகளை கடைகளை கந்தர்மடத்தில் எரித்தார்கள்.அதன் விளைவாக முதன்முதலில் தேசியத்தலைவரால் திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 50 ஆண்டாக(1933-1983) சிங்களவர்களிடம் அரச ஆயுதங்களால் அடிவாங்கி வந்த தமிழர்கள் அதே அரச ஆயுதத்தால் அடித்த சிங்களவர்களை திருநெல்வேலியில் திருப்பி அடித்தார்கள்.
சிங்களவர்கள் தமிழர்களிடம் வெல்லமுடியாமல் திண்டாட உலகநாடுகளிடம் நீண்டநெடிய வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழர்களை “பயங்கரவாதிகள்” என்ற பொய் முத்திரையை ஒட்டி உலகநாடுகளின் உதவியோடு தமிழீழ விடுதலைப்போரோடு சிங்கள அரசு முகம் கொடுத்து வந்தது.
சிங்கள அரசின் பொய்யை நம்பி உலகநாடுகள் தமிழீழ மண்ணின் வளங்களைச் சுருட்ட சிங்கள அரசுக்கு பல உதவிகளை கடன் அடிப்படையில் உதவியது.
தமிழர்களை அழிப்பதற்கு நச்சுக்குண்டுகள் கொடுத்த நாடுகள் எங்கே இப்போது? குண்டுவீச்சு வானூர்திகள் கொடுத்த நாடுகள் எங்கே இப்போது? ஏவுகணைகளை அள்ளி வழங்கிய நாடுகள் எங்கே இப்போது?தமிழீழப்போரில் சிங்கள அரசை தமிழின அழிப்பில் இருந்து தப்ப வைத்த ஐக்கிய நாடுகள் சபை எங்கேஇப்போது?சிங்கள அரசை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றிய ஐரோப்பிய ஒன்றியம் எங்கே இப்போது?
சிங்கள நாடு என்று கூச்சலிட்ட புத்தபிக்குமார் எங்கே இப்போது?ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசிய புத்தபிக்குமார் எங்கே இப்போது?
தமிழீழப் போருக்கு தமிழீழ மக்கள் பல்வகைப் பங்களிப்போடு உலகநாடுகளின் உதவிகள் பெறாமல் (1983_2009) 26 ஆண்டுக் காலப்பகுதிக்குள் தமிழர்கள் தமிழீழ அரசை தேசியத்தலைவரின் தலைமையில் நிறுவினார்கள்.
(1933-2002) 68 ஆண்டுகளாக சிங்களவர் தமிழர்களை அழித்துக்கொண்டிருந்தார்கள்.தமிழீழ மக்கள் தமிழீழ அழிவையும் ஏற்றுக்கொண்டு 26 ஆண்டுக்குள் தமிழீழ மண்ணை முப்படைப் வலிமையோடு கட்டியெழுப்பி சிங்கள அரசோடு தமிழீழ அரசு அமைதிப்பேச்சில் ஒரே மேசையில் இருந்து பேசும் வலிமையை தலைவர் பெற்றுக்கொண்டார்.
2022 ஆம் ஆண்டு சிங்கள மக்களும் சிங்கள அரசு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்கள்.
அனைத்துக்கட்சி கூட்டம் நாட்டுமுதல்வர் கோட்டாவால் கூட்டப்பட்டது.ஆனால் தேசிய உணர்வாக களத்தில் உள்ள கட்சிகளை அழைக்காதது தமிழர்களுக்கு மீண்டும் சிங்கள அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். புலம்பெயர் தமிழர்களின் பணத்தை சிங்கள அரசு சுருட்டுவதற்காக போலியாகப் போடப்படும் நாடகமே அனைத்துக் கட்சிக்கூட்டம்.
தமிழர்களுக்கான தமிழீழ மண்ணை சிங்கள நாடாளுமன்றம் ஒருமனதாக அங்கீகரிக்கவேண்டும்.தமிழர்கள் இறைமைகள் பாதுகாக்கக்கூடிய அரசியல் அதிகாரம் என்பது தமிழர்கள் தமிழர்களை ஆளவேண்டும்.சிங்களவர்கள் தமிழர்களை ஆளத் தகுதி அற்றவர்கள்.
தமிழருக்கான தமிழீழக்கோரிக்கையை சிங்கள நாடாளுமன்றம் ஒருமனதாக அங்கீகரிக்கவேண்டும்.50 000மாவீரர்களின் ஈகம் பல இலட்சம் தமிழர்களின் உயிர்,தமிழர்களின் இறைமை பண்பாடு மொழி வணிகம் பொருளாதாரம் என்பவற்றின் அழிவுக்கான ஈடாக தமிழீழம் மட்டுமே தீர்வாகும்.
தமிழீழத்திற்கு குறைவான எந்தத் தீர்வையும் புலம்பெயர்ந்த மக்கள் ஏற்கமுடியாது.ஏற்கக்கூடாது.ஏற்கமாட்டோம்
தமிழீழ அரசு மட்டுமே தமிழரின் இறைமைக்கு பாதுகாப்பானது.