2022 ஆகட்டு21ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(21.08.2022) சிங்கள அரசின் நீதி அமைச்சர் விசயதாச ராசபக்ச அவர்களுக்கும் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழும் நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையே தமிழ்மக்களின் சிக்கல்கள் பற்றிப் பேசப்பட்டன.
இப்பேச்சில் இரண்டு செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்பான நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பினர் முன்வைத்தார்கள்.
1.தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனை எதுவும் இன்றி விடுதலை செய்யவேண்டும்.
2.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியும் காவல்துறையின் அச்சுறுத்தலை நிறுத்தவேண்டும்..
இவ்விரு செயற்பாடுகளும் தமிழ் சிங்கள மக்களின் நல்லுறவுக்கான அடையாளமாக பச்சைக்கொடியை சிங்கள அரசு காட்டுமிடத்து தொடர்ந்து தமிழ் சிங்கள மக்களின் சிக்கலைத் தீர்ப்பதற்கான அடுத்த கட்டத்திற்கு முன்நகர்த்தமுடியும்.ஒற்றுமை தமிழர்களுக்கான சமஉரிமை அரசியல் சமாதானம்அனைத்தையும் கட்டியெழுப்ப சிங்கள அரசு முன்வரவேண்டும்.அதன் முதற்கட்ட பேச்சு நடைபெற்றிருக்கிறது.நீதிஅமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்வதற்கு துரிதப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.தமிழர்களின் அரசியல் அதிகாரத்திற்கான பச்சைக்கொடி காட்டுவார்களா?அல்லது கடந்த காலத்தைப்போல கடந்து செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.