சிங்கள மக்களின் வாக்கால் 2009 தமிழின அழிப்பு முதலாம் நாள் நினைவேந்தல் மே 12 2023

தமிழின அழிப்பு முதலாம் நாள் நினைவேந்தல் மே 12 2023

 சிங்கள மக்களின் வாக்கால் 1948 இலிருந்து சொந்த நாட்டின் தொன்மைக்குடிகள் தமிழர்களை சிங்கள அரசு உலகநாடுகளின் துணையோடு 2009 மே 18 இல் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களை அழித்தபோதும் தமிழர்களின் தனித்தமிழீழக் கொள்கையை அழிக்கமுடியவில்லை.

14ஆவது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2023 ஆம் ஆண்டு முதலாம் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு தமிழின அழிப்பின் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2023 மேமாதம் 12ஆம்நாள் ஆரம்பமானது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  முதலாம் நாள்  வணக்க நிகழ்வு  யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது. 

ஒரு மணித்துளி அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலின்போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மலர் வணக்க மதிப்பளிப்பு செய்யப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும் பங்கேற்றிருந்தார்கள்.இறுதியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE