சிங்கள மக்களின் வாக்கில் கைதியாகவும், கனடாவின் அரசியல் உரிமையால் உயரியவாழ்வைத் தொட்ட ஈழத்துப் பெருந்தமிழர்

உயர்திரு ரோய் சுபேந்திரன் ரட்ணவேல் தமிழீழ மண்ணில் கொழும்பில் பிறந்த தமிழர்.இவருடைய வாழ்விடமாக ஈழமண்ணில் வடமாநிலம் வடமராட்சி வலையத்தில் பெரும்புகழ்பெற்ற நகரான பருத்தித்துறையில் வாழ்ந்தார்.
பருத்தித்துறை நகர் வீரமும் தன்மானமும் கடல்வளமும் வணிகவளமும் நிறைந்த மண். தாய்மண்ணையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் தமிழர்களின் வாழ்விடமாகும்.
தமிழர்களின் சுவைமிகுந்த உணவால் உலகத்தமிழர்களின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கும் நகர் பருத்திநகர்.பண்டைய காலத்தில் பெரும்புகழ்பெற்ற துறைமுகத்தைக் கொண்ட நகரம் பருத்தித்துறை.
1969 ஆம் ஆண்டு பிறந்த ரோய் ரட்ணவேல் மழலைகக்கல்வியை தும்பளை சைவப்பபிரகாசப் பள்ளியில் பயின்றார்.பின்பு ஆங்கிலேயர் காலத்தில் கிறித்தவ சபையால் 1838 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காட்லிக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.
1987 ஆம் ஆண்டு சிங்கள மக்களின் வாக்கால் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வடமராட்சித் தாக்குதல் மூலம் பருத்தித்துறையில் வாழ்ந்த 15-40 அகவைற்கும் உட்பட்ட எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாத 2500 க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் இளையவர்கள் சிங்கள அரசபடையினரால் கைது செய்தார்கள்.
கைது செய்யப்பட்ட 2500 தமிழர்களின் பெயர்களுக்குப் பதிலாக ஒவ்வொரு தமிழர்களுக்கும் ஒவ்வொரு எண் வழங்கப்பட்டது.அந்த எண்ணை வைத்துத் தான் ஒவ்வொரு தமிழர்களையும் அடையாளப்படுத்தினார்கள்.அவ்வாறு ரோய் ரட்ணவேல் அவர்களை அடையாளப்படுத்த வழங்கப்படுத்தப்பட்ட எண் #1056.
சிங்கள அரசபடையினர் கைதான தமிழர்களின்பெயரை தவிர்த்துவிட்டு எண்ணை அடையாளப்படுத்தியதே தமிழன் என்ற அடையாளத்தை இல்லாமல் ஆக்கியது.
கைதான 2500 பருத்தித்துறை இளைஞர்கள் சிங்கள அரசபடையின் கடுஞ்சித்திரவதைக்குட்பட்டார்கள்.
கைதி #1056 எண்ணை சிங்கள மக்களின் வாக்குககளைப்பெற்று அரசியல் அதிகாரத்தைப் பெற்ற சிங்கள அரசின் கீழ் செயற்படும் சிங்களப்படை 17அகவையுடைய காட்லிக் கல்லூரி மாணவனாக இருந்த ரோய் ரட்ணவேல் அவர்களை கைது செய்தது.
1056 எண்ணைத் தாங்கிய ரோய் அவர்களும் ஏனைய 2500 தமிழ் இளைஞர்களும் பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து காலிச்சிறைச்சாலைக்கு கடல் வழியாக கப்பலில் கொண்டு செல்லப்பட்டார்கள்.
சிங்களப்படையினரிடம் கைதான தமிழர்கள் மிகமோசமான சித்திரவதைகளைப் கப்பலில் சிங்களப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
கப்பலில் பயணிக்கும் போது கைதான தமிழர் ஒருவர் வலி வந்து அல்லல்படும் போது வாயால் நுரையை கக்கின்றார். ஆனால் சிங்களப்படை வீரர் வலி வந்த தமிழரை காலணி அணிந்த காலால் நசுக்கி கொன்றுவிட்டு கடலில் தள்ளியதை பார்த்து பயந்து அதிர்ந்துவிட்டேன் என ரோய் சொல்கின்றார்.
கைதி #1056 காலிச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.சிங்கள அமைச்சர் லலித் அத்துலக் முதலி அவர்களின் மனைவி சிறைச்சாலைக்கு வருவதாக சொல்லப்பபட்டது. லலித் அத்துலக் முதலி அவர்களின் மனைவி சிறைச்சாலைக்கு வருகிறார்.கப்பலில் வந்த தமிழர்களைப் பார்க்கிறார்.ஆங்கிலமும் சிங்களமும் பேசக்கூடியவர்களை அழைக்கப்படுகிறார்.அழைப்பைக்கேட்ட கைதி #1056 லலித் அத்துலக் முதலியின் மனைவியோடு பேசுகிறார்.
அப்போது கைதி#1056 தனது உண்மைநிலையைச் சொல்லி சிங்கள அரசபடைத் தளபதி பெணாண்டோ அவர்களின் குடும்பநண்பர் என்பதை வெளிப்படுத்தினார்.
பெணாண்டோ அவர்கள் மூலமாக விடுதலை செய்யப்படுகிறார்.
சிங்கள அமைச்சர் லலித் அத்துலக் முதலி அவர்களின் தலைமையில் 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது.
ரோய் ரட்ணவேலோடு கைதான 2500 தமிழர்கள் பற்றி விபரம் சிங்கள மக்களின் வாக்கால் ஆட்சியில் ஏறிய சிங்கள ஆட்சியாளர்களால் குடும்பத்தினருக்கோ உறவினர்களுக்கோ அறிவிக்கப்படவில்லை.
ரோய் ரட்ணவேல் விடுதலையாகிய பின்தான் குடும்பத்தினருக்குத் தெரியவருகிறது.
ரோய் அவர்களின் தந்தையார் சிங்கள ஆட்சியில் தமிழ் இளம்தலைமுறையினருக்கு எதிர்காலம் இல்லை என உணர்ந்தபின் ரோய் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு எடுக்கின்றார்.கனடாவிற்கு அனுப்பினால் தான் ரோயின் அறிவு ஆற்றல் ஆளுமை வெளிப்படும் புகழ் பெறும் என்ற தீர்கதரிசனமாக உணர்ந்த தந்தையார் கனடாவுக்கு அனுப்புவதாக முடிவெடுத்தார்.
ரோயின் தந்தையார் கனடாத்தூதுவராலயத்திற்கு தனது மகனுக்கு சிங்கள ஆட்சியில் எதிர்காலம் இல்லையென்பதையும் கைதான செய்தியையும் கடிதமூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
கனடாத்தூதுவராலயம் ரோயை நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள்.ரோய் நேர்காணலை சந்திக்கிறார். நேர்காணலில் சித்திரவதைக்குட்பட்ட அடையாளங்களை காட்டியவுடன் கனடாவுக்கு செல்வதற்கான நுழைவுக்கு ஒப்புதல் சான்று வழங்கப்பட்டது.
ரோய் சுபேந்திரன் ரட்ணவேல் எதிர்கால வாழ்வை மேம்படுத்த கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்.ரோய் அவர்கள் கனடாவிற்கு ஏதிலியாக வரவில்லை.கனடாவுக்கான நுழைவுச்சான்றோடு கனடாவுக்கு வந்த ஈழத்தமிழர்.
இன்று கனடா மண்ணின் அரசியல் உரிமையால் ரோயைப் போல பல இலட்சம் தமிழர்கள் சிங்கள மக்களின் வாக்கால் பிறந்த மண்ணில் அரசியல் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.கனடாவில் புலம்பெயர்ந்த நாம் தமிழீழ மக்களின் உரிமைக்காக தம் உயிர்களை எமக்காக ஈகம் செய்த 50000 அதிகமான மாவீரர்களின் உயிர்க்கொடையில் கிடைத்த வாழ்வு.
இந்த உயிர்கொடையில் எமக்குக் கிடைத்த உயரிய வாழ்வின் வெளிப்பாடாக தமிழீழ மண்ணில் இன்றும் அரசியல் உரிமைக்காக அறவழியில் போராடும் எம் உறவுகளுக்கு நாம் கனடா அரசோடு பேசி எமது மக்களுக்கான அரசியல் உரிமையைப் பெறுவதற்காக எமது குரல்களை எழுப்பவேண்டும்.
எம்மை வீழ்த்தியவர்களின் வரலாற்றைப்படித்து எமது மக்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுத்து நாம் எப்படி கனடாவில் அரசியல் உரிமை பெற்று வாழ்கிறோமோ அப்படி எமது மக்களை ஈழமண்ணில் வாழவைத்து வரலாற்றை கனடா மண்ணில் படைக்கவேண்டும்.
எமது மக்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுத்து அவர்களின் வாழ்வை நாம் உயர்த்தினோமேயானால் நாம் உலகத்தமிழர்களின் மனதில் வரலாறாகுவோம்.
சிங்கள மக்களின் கடும் சித்திரவதைக்குட்பட்டவர்கள் ரோய் ரட்ணவேல் அவர்களைப் உங்கள் வாழ்வை நூலாகப் பதிவு செய்தால் தமிழீழ மக்களின் அரசியல் உரிமை அரசியலுக்குப் சிறப்பாக அமையும்.
Like

Comment
Share
error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE