சிறை செதுக்கிய சாட்டை துரைமுருகன் விடுதலை மட்டற்ற மகிழ்வில்!

 

தமிழக இளையதலைமுறையினரை அரசியலுக்கு வரவிடாமல் சினிமா மது மயக்கத்தில் முழ்கடித்தவர்கள் திராவிட திருவாளர்கள். ஈழத்தமிழின அழிப்பைக்கூட தமிழக மக்கள் சரியான அரசியல் புரிதல் இல்லாமல் இருத்தியவர்கள் திராவிடத்திருவாளர்கள்..இனப்படுகொலைக்கு துணைபோன திராவிடத்ததிருடர்களை தோலுரித்துக் காட்டத்தொடங்கியவர் தமிழ்த்தேசியப்போராளி செந்தமிழன் சீமான்.தமிழ்த்தேசிய அரசியலை தமிழக மண்ணில் விதைத்த செந்தமிழன் சீமானை பல திராவிட திருவாளர்கள் இழிவுபடுத்தியபோதும் அதையும் தாண்டி இன்று 30 இலக்கம் தமிழ்த்தேசியப்போராளிகளோடு செந்தமிழன் சீமான் தமிழக மண்ணில் களமாடிக்கொண்டிருக்கிறார்.

சாட்டை துரைமுருகன் மிக வீச்சுக்கொண்ட தமிழ்த்தேசியப்போராளி.களத்தில் தமிழ்த்தேசிய பேச்சாளராகவும் சாட்டை வலையொளியூடாக உண்மைகளை மக்களுக்கு வழங்கி வந்த முதன்மை தமிழ்த்தேசிய ஊடகப்போராளி.எந்தவித அச்சம் இன்றி தமிழக மாணவர்களின் பாலியல் வன்கொடுமையை ஊடகம் மூலம் வெளிப்படுத்தியவர் சாட்டை துரைமுருகன்.திராவிட கட்சிகளையும் அதிலும் திமுகவின் இழிவான அரசியலின் பல உண்மைகளை சாட்டை மூலம் வெளிக்கொணர்ந்தவர் சாட்டை துரைமுருகன்.

அறிவாற்றல் இல்லாதவர்களும் கொள்கை  பிடிப்பாளனின் உணர்வுகளை அறியாத திராவிடத் திருவாளர்களும் சாட்டை துறைமுருகன் மீது பொய்வழக்குககளைப்போட்டு  60நாட்கள் சிறைப்படுத்தினார்கள். போராளியை சிறை செதுக்கும் என்பது கல்வியறிவில்லா திராவிட திருடர்களுக்குத்தெரியாது.ஏற்கனவே கருணாநிதியால்செந்தமிழன் சீமான் சிறையில் செதுக்கப்பட்டபோராளி.இப்போது கருணாநிதியின் மகனால் சாட்டை துரைமுருகன்  சிறையில் செதுக்கப்பட்ட இன்னொரு போராளி.

தமிழக மண்ணில் தமிழ்த்தேசியஅரசியலை அறிவாயுதமேந்திய ஊடகப் போராளி துரைமுருகனின் விடுதலை உலகத்தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.சாட்டை துறைமுருகனின் விடுதலைக்கு உழைத்த வழக்குரைஞர்கள் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட்ட அனைவருக்கும் உலகத்தமிழினம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

சாட்டை மீண்டும் அறிவாயுத வீச்சோடு தமிழ்த்தேசியக்களக்தை வலிமையாக்கும்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE