சைவநெறி சிவநெறியைப் பின்பற்றிய தமிழர்கள் ஈழத்தமிழர்கள்.ஈழமண்ணில் பல ஆயிரம் கோயில்களில் தமிழ்மக்களுக்கு விளங்காத மொழியில் வழிபாட்டிற்கு பல ஆயிரம் கோடி பணத்தை அள்ளிக்கொடுத்து தமிழ்மொழியை பண்பாட்டில் இருந்து விரட்டியடிப்பதற்கு துணை நிற்பவர்கள் ஈழத்தமிழர்கள்.இதற்கு மூல காரணியாக திகழ்ந்தவர் சாதியவெறியும் வடமொழிமோகமும் பிராமண பற்றும் கொண்ட ஆறுமுகநாவலர்.அன்றிலிருந்து இன்றுவரை வடமொழிமந்திர ஒலியும் பிராமண வாடையும் இல்லாத தமிழ்க்கடவுள் அன்னக்கொடை கந்தன் செல்வச் சந்நிதியான்.செல்வச்சந்நிதியான் தமிழ்மொழியையும் சைவத்தையும் பின்பற்றி தமிழர்களின் பண்பாட்டைக் காப்பவன் செல்வச் சந்நிதியான்.சைவக்கோயில்களை இந்துக்கோயில் என அழைக்கவிடாமல் இன்றுவரை சைவநெறியைக் காப்பாற்றி வருபவன் செல்வச்சந்நிதியான்.தமிழரால் மட்டுமே முருகனுக்குரிய பூசை நடைபெறும் ஒற்றைக்கோயில் செல்வச்சந்நிதியான்.வடமொழி மந்திர ஒலியைப் புறக்கணித்து தமிழிசை ஒலியோடு அருள் தருபவன் செல்வச்சந்நிதியான்.பிராமணவாடை இல்லாமல் தமிழ் பூசாரியின் பூசையால் தமிழர்களுக்கு அருள் வழங்கும் செல்வச்சந்நிதியான். சைவத்தையும் தமிழையும் போற்றும் செல்வச்சந்நிதியானின் கொடியேற்றத் திருவிழா 2053 மடங்கல் 12 ஆம் நாள் காரிக்கிழமை (27.08.2022) ஆண்டுவிழா தொடங்கியுள்ளது.