உலகநாடுகளில் வாழும் தமிழர்கள் உலகநாடுகளின் நாடாளுமன்றங்களில் தமிழீழ பிரகடனத்தை நிறைவேற்றுவதற்கான முன்னேடுப்புகளை இன்று இளையதலைமுறையினர் முன்னெடுக்கிறார்கள்.1976 ஆம் ஆண்டு தமிழீழ மண்ணில் தமிழீழத்தலைவர்கள் அனைவரும் இணைந்து சிங்கள அரசின் எதிர்ப்புகள் எதுவும் இன்றி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு 1977 ஆம் ஆண்டு சிங்கள அரச யாப்பின் கீழ் நடந்த தேர்தலில் தமிழீழ பிரகடனத்தை முன்வைத்து தமிழ்த்தலைவர்கள் வாக்குக்கேட்டார்கள்.தமிழீழத் தலைவர்களின் தமிழீழக்கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்று தமிழீழம் அமைவேண்டும் என உலகத்திற்கு வெளிக்காட்டியுள்ளார்கள்.
46 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் இறைமையை பாதுகாக்க மறுத்த சிங்கள மக்களுக்கு தன்னாட்சி கொண்ட தமிழீழம் மட்டுமே ஒற்றறைத்தீர்வு என்பதை தமிழீழ மக்கள் தெளிவாக்கியுள்ளளார்கள்.
46 ஆண்டுகளுக்குப்பின்பும் தமிழீழ மக்களின் இறைமையைக் காக்க மறுத்த சிங்கள மக்கள் பெருந்தொகையில் 2009ஆம் ஆண்டு 20க்கு மேற்பட்ட உலநாடுகளின் பெரும்பலத்தைக் கொண்டு அழித்தார்கள்.20நாடுகளின் படைவலிமைக்கு இணையாகதேசியத்தலைவர் கட்டியெழுப்பிய தமிழீழப்படையை வலிமையாக்கி தமிழ் சிங்கள மக்களை ஈழமண்ணில் வாழவிடாமல் தமிழீழ மக்களின் வலிமையான படையை சிங்கள மக்கள் அழித்தார்கள்.
சிங்களமக்களால் அழிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் உலகநாடுகளிடம் உதவிபெறாமல் தமிழ் சிங்கள மக்களின் வாழ்வுக்காக போராடியதை உணராத தமிழ் சிங்கள மக்கள் 2022 ஆம் ஆண்டு சோத்துக்காக தெருவில் போராடும் மோட்டுக் கூட்டங்கள்.
தமிழீழ மண்ணை உயிராக எண்ணி தமது விருப்பு வெறுப்புகளை மறந்து நாட்டுக்காக போராடி 60000 மாவீரர் தமிழீழ மண்ணில் விதைக்கப்பட்டுள்ளார்கள். பல இலட்சம் அப்பாவித் தமிழர்களை சிங்கள அரசு பலியாக்கியிருக்கிறது.2009 ஆம் ஆண்டுக்கு முன் ஈழமண் வல்லரசு மண்ணாக இருந்தபோது அயல்நாடுகள் தமிழீழ மண்ணில் கால் வைக்கமுடியவில்லை.தமிழ் சிங்கள மக்கள் ஈழமண்ணில் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழீழம் பிறந்தால் மட்டுமே சாத்தியமாகும்.கடந்த 75ஆண்டுகளாக தொடர்ந்து தமிழர்களை அழித்த சிங்கள மக்களோடு ஒருநாட்டிற்குள் வாழமுடியாது.தமிழர்களும் சிங்களர்களும் ஒருநாட்டிற்குள் வாழ்வது இரண்டு இனங்களும் அழிவுப்பாதையை நோக்கிய ஆட்சியாவே அமையும்.
ஆகவே உலகத்தமிழர்கள் தமிழீழ அரசை உலகநாடுகளின் அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றங்களில் தமிழீழப் பிரகடனத்தைச் செய்து ததமிழீழத்தை நிறுவும் பணி தொடர்கிறது.