2021 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் காரிக்கிழமை (November 21,2021)சாணக்கியன் சுமந்திரன் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.இச்சந்திப்பு கனடா இசுக்காபுரோ நகராட்சியில் அமைந்துள்ள யே.யே. விருந்தினர் மண்டபத்தில் வெகு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது. உலகவரலாற்றில் முதல்முறையாக கனடாவில் சுமந்திரன் சந்தித்த மக்கள் சந்திப்பு இதுவாகும்.இதுவரை சுமந்திரன் பலதடவை வந்தபோதும் கனடாவாழ் மக்களை ஏமாற்றிவிட்டுப் போய்விடுவார்.புலிகளால் தொடங்கப்பட்ட கூட்டமைப்பினரும் கனடாத்தமிழரஂ பேரவையும் தான் சுமந்திரனை ஒழிச்சுவைப்பவர்கள்.
இவர்கள் அனைவரும் இனப்படுகொலையை ஏற்காதவர்கள். தமிழீழத்தைக் கைவிட்டவர்கள்.
இக்கூட்டத்தை நடத்திய தமிழ்தேசியக் கூட்டமைப்பினரும் தமிழர் பேரவையும் சிங்கள அரசின் எடுப்பார் கைப்பிள்ளைகள்.
2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு தமிழினத்தூரோகி சம்பந்தன் முதல் ஒப்புதல் அளித்த துரோகி.
தமிழினத்துரோகி சம்பந்தன் திமுக கருணாநிதி இந்திய ஒன்றியம் உள்ளிட்ட போர்க்கருவி வழங்கிய அனைத்து நாடுகளையும் காப்பாற்ற 400 ஆண்டுகால தமிழீழ இறைமைக்கான போரை அவமானப்படுத்தி உலகப்புகழ் தமிழர்களையும் அவர்களின் விடுதலைப்போராட்டத்தையும் இழிவுபடுத்தி வலம் வந்த சுமந்திரனை கனடாவாழ் மக்கள் விரட்டியடித்தார்கள்.
சுமந்திரன் பல ஆண்டுகளாக நமது இறைமைக்கான விடுதலைப்போரையும் தேசியத்தலைவரையும் மாவீரர்களையும் மாவீரர் குடும்பங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் வசைபாடியும் இழிவுபடுத்தியும் வந்த தமிழினத்துரோகி.
சிங்கள அரசின் கைம்பிள்ளைகளாக கனடா வருகையின் வெளிப்பாடு. கனடாவாழ் தமிழர்களால் வலிமையாக முன்னெடுக்கும் செயல்பாடுகளுக்கு தடைகளைப்போட கனடா வெளிவிவகார அமைச்சை சந்திக்க சிங்கள அரசின் கைக்கூலியாக கனடா வந்துள்ளார்கள்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பு.சுமந்திரன் விடுதலைப்புலிகளின் கட்சியில் தேர்தலில் நின்றபோது மக்கள் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகவே சுமந்திரனையும் சாணக்கியனையும் மக்கள் தெரிவு செய்தார்கள்.
இனப்படுகொலையை ஏற்காத எவரும் தமிழ்த்யேசியக்கூட்டமைப்பில் இருப்பதற்கு அருகதை அற்றவர்கள்.ஆகவே சுமந்திரன் தமிழ்மக்கள் சார்பாக அரசியலில் பணியாற்ற முடியாது.
தமிழின அழிப்பின் முதன்மைக்குற்றவாளியும் தமிழினத்துரோகியுமா
ன சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ்மக்களின் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பின் பெயரில் சுமந்திரனோ சாணக்கியன் போட்டியிடக்கூடாது.தமிழரசுக்கட்சியின் பெயரில் போட்டியில் வெல்லுங்கள்.
கனடாவாழ் தமிழ் மக்கள் சுமந்திரனை விரட்டியடிப்பதற்கு பலவழிகளில் ஒற்றுமை நிறைந்த அறவழியில் போராடிய அனைத்து தமிழ் உறவுகளுக்கும் பலகோடி தமிழர்களின் பலகோடி வாழ்த்துக்களும் நன்றிகளும்.
2011 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலையையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் உலகநாடுகளில் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி வந்த சுமந்திரனை விரட்டியடித்த கனடாவாழ் மக்கள்.
தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆப்பு வைப்பதே தமிழ்மக்களின் உயரிய பணியாகும். அதுவே தமிழீழ மக்களின் இறைமையைப் பாதுகாக்கும்.