தமிழ்த்தேசிய இசைப்போராளி உயர்திரு வர்ணராமேசுவரன் 2052ஆம் ஆண்டு கன்னித்திங்கள் 10 ஆம் நாள் காரிக்கிழமை(September 25,2021)தமிழ்தேசியப்போராளி மாவீரராக சாவைத் தழுவிக்கொண்டார்.
தமிழீழ மண்ணில் தமிழர்களின் இறைமையைக் காக்க தமிழீழ போராட்டம் அறவழியில் தொடங்கி இளைஞர்கள் கையில் கருவிப்போராட்டமாக மாறியபின்பு தமிழீழ மண்ணின் தமிழ்த்தேசியப் பாடல்களைப் பாடி களத்தில் இசைப்போராளியாக தம்மை முன்னிலைப்படுத்திய கலைஞர் உயர்திரு.வர்ணராமேசுவரன்.விடுதலைப்போரில் இசைப்போராளியாக முன்னிறுத்தி விடுதலைப்போரை வீறுகொள்ள வைத்த பெருமைக்குரியவர் வர்ணராமேசுவரன்.மாவீரர் மாதம் ஒவ்வொரு ஆண்டும் மக்களால் மதிக்கப்படும்பொழுது வர்ணராமேசுவரன் அவர்கள் ஒவ்வொரு தமிழர்களின் உணர்ந்துள்ளார்.அவர் இறந்தாலும் எம்மோடு கடைசித்தமிழன் இருக்கும்வரை எமது உணர்வுகளோடு வாழ்ந்துகொண்டிருப்பார்.