தமிழ்த்தேசியப் போராளி சீமானின் ஒற்றைக்குரலுக்கு கனடாவில் அணிதிரண்ட தமிழர்களால் தமிழ்த்தேசியத்திற்கு மிகப்பெரிய வெற்றி!

கடந்த காலங்களில் தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் இருந்தபோது தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களை முன்நிறுத்தியும் பரப்புரைகள் எமது தமிழீழ விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டது.இதில் செந்தமிழன் சீமானையும் விடுதலைப்புலிகள் பல்வேறு நாடுகளில் பரப்புரைக்கு  பயன்படுத்தியுள்ளார்கள்.குறிப்பாக 2007,2008 காலப்பகுதிகளில் கனடாமண்ணில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரைகள் வலையொளிகளில் இப்போதும் இருக்கின்றன.

கனடாவில் வாழும் மக்களிடத்தில் தாம் தமிழ்த்தேசிய அரசியலை செய்கிறோம் என்று போலி முகத்தோடு தமிழ்நாட்டில்இந்துத்துவவாளர்களோடுகனடாவாழ் மக்கள் சார்ப்பாக கள்ளமாக தமிழ்த்தேசியத்தை விற்றவர்கள் தேசிய அவை.தேசிய அவை வானதி சீனிவாசனை கனடாவுக்கு அழைத்தவர்கள்.இந்துத்துவ சங்கிகள் தான் இந்தியாவில் விடுதலைப்புலிகளின் தடையை நீடித்தவர்கள்.இந்துத்துவ சங்கிகளுக்கும் தேசிய அவைக்குள் தமிழரை அழிப்பதில் கள்ளத்தொடர்பு.தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யவேண்டுமென்பதில் தேசிய அவைக்கும் இந்துத்துவவாளருக்கும் காசி அண்ணனுக்கும் சில முன்னாள் போராளிகளுக்கும் ஒரே விருப்பம்தான்.

2009க்குப்பின் தமிழ்நாட்டில் செந்தமிழன் சீமான் முன்னெடுத்த அரசியலை கனடாவில் இழிவுபடுத்திய பலர் அன்றைய இன்றைய போலித்தமிழ்த்தேசியவாளர்கள்.

தேசியஅவையோ கனடா தமிழ்த்தேசியக்குத்தகையர்களோ இந்தியாவுக்குச் சென்றால் நாம் தமிழர் கட்சியினையோ செந்தமிழன் சீமானையோ போய் சந்திப்பதில்லை.

யார் இந்த போலித்தமிழ்த்தேசியவாளர்கள்? தலைவர் இருக்கும் போதே தலைவரை ஏமாற்றிய கூட்டம்.இந்தக் கூட்டம் தலைவரை விடுதலைப்புலிகளைச் சாட்டிப் பொய்சொல்லி பணம் திரட்டியபோது பணம் வழங்கிய மக்களையும் களத்தில் போராடி உயிரை ஈகம் செய்த மாவீரர்களையும் மாவீரர் குடும்ப உறவுகளையும்  சேர்த்து 12 கோடி தமிழர்களையும் ஏமாற்றிய போலி தமிழ்த்தேசியவாளர்கள்.

2009 இல் தலைவரின்றி தவிர்த்த மக்களை கைவிட்டுவிட்டு ஒடிஒளித்தவர்கள்.இன்று தமிழ்த்தேசியத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

செந்தமிழன் சீமான் தலைவரின் படத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.புலிக்கொடியை வைத்து அரசியல் செய்யக்கூடாது.புலம்பெயர்மக்களிடம் பணம் திரட்டக்கூடாது என பலவழிகளில் கனடாமண்ணில் சீமானுக்கு எதிராகப் பேசுபவர்கள் கூட இன்று தமிழ்த்தேசியப்போராளி சீமானின் குரலால் மட்டுமே கனடாவில் மக்களை திரட்டமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

செந்தமிழன் சீமானின் மாண்புதான் எம்மையெல்லாம் தமிழ்த்தேசியப்பரப்பில் இணைத்திருக்கிறது.எப்படி தேசியத்தலைவரை களத்தில் வெற்றிகள் குவிக்கப்படும்போது உலகத்தமிழர்கள் தலைவரின் கையை இறுகப்பற்றினார்களோ அதேபோலத்தான் செந்தமிழன் சீமானின் தமிழ்த்தேசிய அரசியலுக்கு நாம் துணையாக நிற்கவேண்டும்.நிற்போம்.

கனடாவில் இன்றைய ஊர்திப்பேரணி போலித்தமிழ்த்தேசியவாளர்களின் முகத்திரையைகிழித்திருக்கிறது.. .

 

தமிழ்த்தேசியப்போராளி செந்தமிழன் சீமானின் ஒற்றைக்குரலால் மட்டுமே கனடாவாழ் மக்களைத் திரட்டமுடியும் என்பதை இவ்வூர்திப்பேரணி பறை சாற்றுகிறது.கனடாவாழ் தமிழர்கள் எப்போதும் செந்தமிழன் சீமானோடு கைகோர்த்து பயணிக்கிறார்கள் என்ற வலிமையான செய்தி உலகத்தமிழர்களுக்கு காட்டிநிற்கிறது.

இவ்வூர்திப் போராட்டம் போலித்தமிழ்த்தேசியவாளர்களை கனடாவாழ்தமிழர்கள் தூக்கியெறிந்துவிட்டார்கள் என்பதையும் உறுதிபட உலகத்தமிழர்களுக்கு சொல்லிநிற்கிறது.

தமிழ்தேசியப்போராளி செந்தமிழன்சீமானும் நாம்தமிழர் கட்சியையும் கனடாவாழ் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய களப்போராளிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்தும் கனடாவாழ் மக்கள் நாம் தமிழர் கட்சியை வலிமையாக்கும் பணியில் தொடர்ந்து பயணிப்பார்கள் என்பது உண்மை உறுதி

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE