2005 இல் தமிழரின் இறைமையை மரபைக் காக்கவேண்டுமென்று கனடாவில் தமிழ்மொழிக்கிழமை தொடங்கப்பெற்றது.
2016 ஆம் ஆண்டு கனடாவில் தை மாதம் தமிழ்மரபுத்திங்களாக கனடா அரசால் ஒப்புதல் வழங்கி சட்டமாக்கப்பெற்றது.
2016 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ்மரபுத் திங்கள் செயற்பாட்டாளர்கள் தமிழர்களின்மரபுகளுக்கு எதிராக தை மாதத்தில் தமிழ் மரபுத்திங்கள் என்ற போர்வையில் தமிழரின் இருப்புக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். சிலவற்றைக் கோடிட்டு காட்டவேண்டிய தேவை எமக்கு வந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு தமிழ்மரபுத் திங்களில் தமிழியல் மாநாடு நடத்தப்பட்டது.இவ்விழாவின் அன்றைய சிறப்பு விருந்தினராக தமிழீழ விடுதலைப்புலிகளின் தடையை இந்தியாவில் தொடர்ந்து நீடிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பாரதீய யெனதாக் கட்சியும் தமிழ்நாட்டு மாநிலப்பொறுப்பாளரும் இன்றைய தமிழ்நாட்டின் மாநில அவையில் பாரதீக யெனதாக் கட்சியின் உறுப்பினரான வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
சிங்கள அரசால் தமிழர்கள் இனப்படுகொலை செய்த காலகட்டத்தில் 1956ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழீழ மக்களுக்காக குரல் கொடுக்க மறுத்த கட்சி பாரதீக யெனதா கட்சியும் தமிழ்நாட்டு மாநில பொறுப்பாளர் வானதி சீனிவாசனுமே.இந்தியா சிங்கள அரசுக்கு போர்க்கருவிகளை வழங்கி துணைநின்று தமிழர்களை அழித்தபோது வாய்மூடு கைகட்டி தமிழின அழிப்புக்கு துணை நின்ற இந்திய தேசியக்கட்சியான பாரதீக யெனதாக் கட்சியும் தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர் வானதி சீனீவாசனுமே.நாம் சைவர்கள்.எம்மை இந்துக்கள் என்று பொய் அடையாளமிடும் பாரதீக யெனதாக் கட்சியும் வானதி சீனிவாசனும் ஈழத்தில் வாழ்ந்த இந்துக்களையும் இந்துக்களின் கோயில்களையும் அழிப்பதற்கு துணை நின்றவர்கள்.ஈழமண்ணில் இந்துக்களையும் இந்துக் கோயில்களையும் அழித்த தமிழின அழிப்பாளர்களுக்கு திருப்பதி செல்லும் போது செங்கம்பள வரவேற்பு வழங்குபவர்கள் பாரதீக யெனதாக் கட்சியும் வானதி சீனிவாசனும்.
இதுமட்டுமல்ல சிங்களப்படைகளால் 1000 தமிழ் நாட்டு மீனவர்கள் கொலைக்கு துணை போனவர்கள்.தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை திருப்பிக்கொடுக்கவேண்டாம் என சிங்கள அரசுக்கு அறிவுரை வழங்கியவர் சுப்பிரமணியசுவாமி. தமிழ் நாட்டில் பல்வேறு தமிழரின் வாழ்வியலுக்கு பங்கம் விளைவித்துக் கொண்டிருப்பவர்கள் பாரதீக யெனதாக் கட்சியும் வானதி சீனிவாசனும்.
தமிழியல் மாநாட்டிற்கு வானதி சீனிவாசன் வருகை தருகிறார் என்ற செய்தி கேள்வியுற்ற மானமும் வீரமும் நிறைந்த கனடா வாழ் 15க்கு மேற்பட்ட பறை இசைக்கலைஞர்கள் வானதி சீனிவாசனுக்கு வரவேற்பு இசை வழங்கமாட்டோம் என தெரிவித்து புறக்கணித்தார்கள்.
கனடாவில் தேசிய அவையில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சென்று கனடா வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் என பாரதீக யெனதாக் கட்சியுடன் எமது தமிழ்த்தேசியத்தை விற்றதன் விளைவு வானதி சீனிவாசனின் வருகை.கனடாவில் தமிழ் மக்களை ஏமாற்ற தமிழ்த்தேசியத்தையும் இலங்கைக்கு சென்றால் சிங்களவனை ஏமாற்றி சிங்கக் கொடியையும் தமிழ்நாட்டிக்குச் சென்றால் இந்துவக்காரரின் இந்துத்துவக்கொடியையும் தூக்கிக்கொண்டு ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசியத்தையும் கனடா வாழ் தமிழர்களையும் கூறுபோட்டு விற்கிறார்கள்.இதுவரை பாரதீக யெனதாக் கட்சியுடன் தேசிய அவையினர் என்ன ஒப்பந்தம் செய்தார்கள் என்பதை இதுவரையும் வெளியிடப்படவில்லை.இவர்கள் தமிழ்திதேசிய அரசியலுக்கு எதிரானவர்கள்.
அறிவகம் மற்றும் கனடாத் தமிழ்க் கல்லூரி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வானதி சீனிவாசன் வரும் செய்தி மறைக்கப்பட்டது. அன்றைய விழாவில் அனைத்து மாணவர்களும் கட்டாயத்தில் பங்கேற்க வைக்கப்பட்டார்கள்.அவ்விழாவிற்கு வராத மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வாய் மூலமாக வழங்கப்பட்டிருந்தது.
2022 இல் தமிழ்மரபுத்திங்கள் செயற்பாட்டாளர்கள் அறிவகம் கனடாதமிழ்க்கல்லூரி தமிழர் தேசிய அவை . இவை அனைவரும் ஒன்றுதான் அமைப்புகளின் பெயர்கள் மட்டும் வேறு. 1997லிருந்து எதுவித தவறுகளோ வரலாற்றுத் திரிபின்றி தமிழ்கற்கை பாடநூலை மாணவர்கள் பயன்படுத்திவந்தார்கள். 2021 ஆம் ஆண்டு அந்த தமிழ்கற்கை பாடநூலை மாற்றி புதிய தமிழ்கற்கை பாடநூலில் தமிழரின் மரபுக்கு எதிராக வரலாற்று திரிபுபட்ட தமிழ் கற்கை பாடநூலை வெளியிட்டிருக்கிறார்கள்.இப்போது புதிய தமிழ்கற்கை பாடநூல் திரும்பப்பெறவேண்டும் என்பதை உலகத்தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
வேற்றினத்தவரை தமிழ்மரபுத்திங்களில் முன்னிலைப்படுத்துவது தமிழ் மரபுக்கு எதிரானது.இது பண்பாட்டு இனப்படுகொலையாகும்.
தமிழ் கற்கை நெறியிலும் தமிழ்மரபுத் திங்களிலும் தமிழ்மொழிப் புறக்கணிப்பு தமிழ் மரபுக்கு எதிரானது.இது ஒரு இனப்படுகொலையின் வடிவமாகும்.
தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களின் செயற்பாடுகள் தமிழரின் மரபுக்கு எதிரானது மட்டும் அல்ல பண்பாட்டு இனப்படுகொலையாகும்.
ஆரம்ப காலங்களில் தமிழ்மரபுத் திங்களில் தமிழரின் மரபை மீறி தமிழரின் இறைமைக்கு அழிவை உருவாக்கும் பணியில் ஈடுபடக்கூடாது என்பதை பலர் தமிழ்மரபுத்திங்கள் ஒழுங்கமைப்பாளருக்கு வெளிப்படுத்தியிருக்கிறோம்.
2022 ஆம் ஆண்டு தமிழ்மரபுத்திங்கள் இரண்டாகப் பிளக்கப்பட்டு இரண்டு அமைப்புகளால் வெளியிட்ட அட்டைப் படங்கள் கண்டு மக்களை வெறுப்படையச் செய்துள்ளார்கள்.தமிழரின் மரபை அழித்துக் கொண்டிருக்கும் 2 அமைப்பின் தமிழ்மரபுத்திங்கள் ஒழுங்கமைப்பாளர்களை இனிவரும் காலங்களில் தமிழ் மரபுத் திங்களுக்கு உரிமை கோர முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.
இரண்டு அமைப்புக்களின் அட்டைப்படங்களோ கொடியையோ ஏற்கமுடியாது என கனடாவாழ் தமிழர்கள் உறுதிமொழி எடுத்துள்ளார்கள்.
தமிழ்மரபுத்திங்கள் தமிழ்த்தேசியக்கொடியின் கீழ் தமிழ் மக்களால் கொண்டாடினால் மட்டுமே தமிழரின் மரபு கனடாவில் பாதுகாக்கப்படும்.தமிழ் மரபுத்திங்களை எந்த அமைப்பும் உரிமை கோருவது கனடா அரச சட்டவிதிகளுக்கு எதிரானது.
மக்களின் வேண்டுகோளுக்கமைய இரண்டு அமைப்பினரையும் பலமுறை தொலைபேசியில் அழைத்தபோதும் தொடர்ந்து எம்மைப் புறக்கணித்து வந்துள்ளார்கள்.
இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது. ஆசிரியரோ எழுத்தாளரோ 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.ஆசிரியரோ எழுத்தாளரோ 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.