தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்று அறிவிப்புகளுக்கு நன்றி கூறுவதோ வாழ்த்து தெரிவிப்பதோ முட்டாள்தனமானது.

தமிழீழ மக்களின் 400 ஆண்டுகால அரசியல் அதிகாரத்திற்கான போர் 2009 வரை உலக வல்லாதிக்க அரசுகளின் வலிமைக்கு ஈடாக வலிமைப்படுத்தப்பட்டிருந்தது.தமிழீழ தனியரசை நிறுவி தமிழீழ மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேசியத் தலைவரின் ஆளுமையோடு தமிழர்கள் தமிழர்களை ஆண்ட வரலாறு உண்டு.

குறிப்பாக ஈழத்தமிழர்களின் ஈகம், உழைப்பு, பங்களிப்பு, விடாமுயற்சி, அனைத்தையும் ஒன்றுதிரட்டி எந்த நாடுகளின் துணையின்றி தமிழீழ மக்களின் துணையோடும் உலகத்தமிழர்களின் பக்க துணையோடும் உலக வல்லரசுகளின் அரசாட்சிக்கு மேலாக நாட்டுமக்களுக்கான அரசியல் உரிமையோடு கட்டியெழுந்து ஆளுமை நிறைந்த அரசாக தமிழீழ மக்களால் ஏற்றுக்கொண்ட அரசே தன்னாட்சி நிறைந்த தமிழீழக்குடியரசு.

2009 இல் தமிழீழ அழிப்பை முடிவுக்கு கொண்டுவர உலகவல்லாதிக்க நாடுகளின் படைவலு தொழில்நுட்பவலுவையும் பயன்டுத்தியே ஒட்டுமொத்த தமிழீழ மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.இதில் அரசுகளின் தரப்பில் காங்கிரசும் காங்கிரசு கூட்டணி திமுக,பாரதீக யெனதா,அதிமுக தமிழ்நாட்டு அரசியலில் தமிழ்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் துணையோடு தமிழீழ மக்கள் அழிக்கப்பட்டடார்கள்.உலகத்தமிழர்களுக்கு அரசு என்பது தமிழ்நாடு அரசுமட்டுமே.தமிழீழ இனவழிப்புக்கு 100விழுக்காடு துணை நின்ற கட்சி கருணாநிதி தலைமையில் ஆட்சி செய்த திமுக.

உலக வல்லாதிக்க அரசுகளைவிட பல்மடங்கு வலிமை கொண்ட அரசு தமிழீழக்குடியரசு. பல்மடங்கு வலிமை கொண்ட தமிழீழக்குடியரசை அழித்த கட்சி,உலகநாடுகளிடம் ஈழத்தமிழர்களை அரசியல் பிச்சையெடுக்க வைத்த கட்சி திராவிட முன்னேற்றக்கழகம்.

இதை ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் ஒவ்வொருநொடிப்பொழுதும் தமக்குள் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.2021 ஆம் ஆண்டு போலித்தமிழ்த்தேசியவாளர்களாலும் வாக்குக்கு பணத்தைக் கொடுத்து மீண்டும் தமிழீழமக்களை அழித்தவர்களை தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர வைத்திருகக்கிறார்கள்.அது அவர்களின் அரசியல் பட்டறிவின் பலவீனம்.கடந்த பத்தாண்டுகளாக அரசியல் விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஊட்டிவருபவர்கள் செந்தமிழன் சீமானும் நாம் தமிழர் கட்சியுமே.

தமிழ்நாட்டு முதலமைச்சர் பல வெற்றறிக்கைகளை தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் போர்வையில் தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்திய சொல்லிய அனைத்தும் செயற்படுத்தப்படவில்லை. 

தமிழ்நாட்டு குடிமகனுக்கு 2இலக்கம் ரூபாக்கு கடனாளியாக்கியவர்கள் இந்த திராவிடக் கட்சிகள்.இவர்கள் பல ஆண்டாக வலிசுமக்கின்ற ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிளுக்கு வாக்களித்த மக்கள் தமது அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும்.திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் முதலமைச்சர் முதலில் செய்யவேண்டிய பணிகள்

1.எழுவர் விடுதலை

2.விடுதலைப்புலிகளின் தடையை மாநில நடுவண் அரசிடமிருந்து நீக்குகுதல்

3.உலநாடுகளிடம் விடுதலைப்புலிகளின் தடையை நீக்குதல்

4.விடுதலைப்புலிகள் விடுதலைப்போராளிகள் என்பதை ஒப்புதல் வழங்கவேண்டும்.

5.ஐநாவில் இனப்படுகொலைக்கு ஆதரவாக தமிழ்நாடும் இந்தியஒன்றிய அரசும் இணையவேண்டும்.

6.சிங்கள அரசை அனைத்துலக நீதிமன்றத்தில் பாரப்படுத்தல்

7.உலகத்தமிழரிடம் தமிழீழ அரசுக்கான வாக்கெடுப்பை ஐநாசபை நடத்துவதற்கு தமிழ்நாட்டு முதல்வர் அதற்கான பணியைச் செய்யவேண்டும்.

 

இவை அனைத்தையும் செய்தால் மட்டுமே தமிழ்நாட்டு முதல்வரை வாழ்த்தலாம்.நன்றி கூறலாம்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE