” தாயவள் நாள் இரவுப்பொழுது 2023 “

2054 விடைத்திங்கள் 2ஆம் நாள்(14.05.2023) தாய்மைக்கு சிறப்பு நாளாக உலக மக்கள் தத்தமது தாயைக் கொண்டாடி வருகிறார்கள்.தாயவள்  நாளை சிறப்பித்து கனடாவைத் தளமாகக் கொண்டு தமிழ்தேசிய ஊடகப்பணியில் சிறப்பாக  செயற்படும் தளிர் ஊடகத்தின் ஆதரவில் 2054 விடைத்திங்கள் 2ஆம் நாள் (14-05-2023) மாலை 5.00 மணிக்கு கனடா,ஒன்ராரியோ ,இசுக்காபுரோ நகராட்சிக்குள் அமைந்திருக்கும் குயின் பலசு பண்பாட்டு மண்டபத்தில்

 ( The Queen Palace Banquet Hall)  இல் சிறப்பாக நடைபெற்றது..இச்சிறப்பு நிகழ்வை அறிவுப்பெருந்தகை உயர்திருமதி.விமலா பாலசுந்தரம்  அவர்களின் நெறியாள்கையில்  “அன்னைக்கு ஒரு தாலாட்டு” நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு சிறுவர்களை ஒழுங்கமைத்தவர் உயர்திருமதி.கமலவதனா ஆசிரியர்.இந்நிகழ்வில் பங்கேற்ற பிள்ளைகளை நிகழ்வில் பங்கேற்க பெற்றோர்கள் பெருந்துணையாக இருந்தார்கள்.

இந்நிகழ்வை தளிர் ஊடக அறிவிப்பாளர்கள் நிகழ்வினைத் ஒருங்கிணைந்து தொகுத்து வழங்கினார்கள்.

பேராசிரியர் உயர்திரு பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.தளிர் ஊடக நிறுவனர் முதல்வர் ஊடகவியலாளர் எழுத்தாளர் பாடலாசிரியர் எனப் பன்முக திறன் நிறைந்த உயர்திரு. சிவமோகன் சிறப்புரை ஆற்றியிருந்தார்.தளிர் ஊடக உறுப்பினர் வரவேற்புரை வழங்கியிருந்தார். இளையவர்களின் ஆடல் நிகழ்வுகளும் திரையிசைப்பாடல்களையும் வழங்கி தாயவள் நாளுக்கு சிறப்புச் சேர்த்திருந்தார்கள்.

பிள்ளைகள் தமது தாயுள்ளங்களுக்கு பூக்களை வழங்கி தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டார்கள்.

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE