தேசிய மலர் கார்த்திகைப்பூவை இறைவழிப்பாட்டிற்காக புரிந்துரை வழங்கிய பூக்கடை நிறுவன நிறுவனர் தொழிலதிபர் தமிழ்த்தேசிய உயிர்மெய்நேயர் கார்த்திக் நந்தகுமார் அவர்களின்  பூக்கடை திறப்புவிழா

தமிழ்மொழி சைவநெறி தமிழின வரலாறு தமிழீழ உரிமைப்போராட்ட ஆளுமைகள் நிறைந்த தொழில் நிறுவனம் பூக்கடை நிறுவனம்.

பூக்கடை நிறுவன நிறுவனர் தொழிலதிபர் தமிழ்த்தேசிய உயிர்மெய்நேயர் கார்த்திக் நந்தகுமார் அவர்களின் இரண்டாவது பூக்கடை நிறுவனத் திறப்புவிழா கனடா நாடு ஒன்ராரியோ மாநிலம் அயெக்சு நகரில் 2053 ஆம் ஆண்டு மேழத்திங்கள் 27ஆம்நாள் ஞாயிற்றுக்கிழமை(May 8,2022) நடுப்பகல் 12மணிக்கு  மிகச் சிறப்பாக திறந்துவைக்கப்பெற்றிருக்கிறது.

பூக்கடையை திறந்து வைப்பதற்காக அதிஉயர் சிறப்புவிருந்தினராக கார்த்திக் நந்தகுமாரின் பெற்றேர் நந்தகுமார் மகாலிங்கம் நந்தகுமார் தனஇலட்சுமி இணையர் பங்கேற்றுள்ளார்கள்.பூக்கடை திறப்புவிழாவில் சிறப்பு அழைப்பாபாளர்களாக தமிழின அழிப்பு கல்வியூட்டல் சட்டவரைபு 104மனுவை ஒன்ராரியோ மாநில அவையில் நிறைவேற்றிய பெருந்தமிழர் விசய் தணிகாசலம் மற்றும் சஞ்சீபன் செல்வேந்திரன்  பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள். நண்பர்கள் உறவினர்கள் ஊடக நண்பர்கள் வேற்றின சக நண்பர்கள் புடைசூழ திறப்பு விழா சிறப்புப் பெற்றது.

சிறப்புச்செய்தி:

தமிழ்த்தேசிய  உணர்வோடு திறப்புவிழா சிறப்பாக அமைந்தது.வடமொழி மந்திரம் பிராமணர் தவிர்த்திருந்தது தமிழினத்திற்குரிய முதன்மைச் செயலாகும்.கார்த்திக் நந்தகுமாரின் தந்தை நந்தகுமார் மகாலிங்கம் அவர்கள் சைவக்குருக்களாக தலைமையேற்று திறப்புவிழாவில் சைவவழிபாட்டு முறையில் செய்து சிறப்பித்திருந்தார்.

பூக்கடை நிறுவன நிறுவனர் தொழிலதிபர் தமிழ்த்தேசிய உயிர்மெய்நேயர் கார்த்திக் நந்தகுமார் அவர்கள் தன்னத்திலும் பொதுநலத்திலும் நீண்ட நெடிய வரலாற்று ஆளுமைகளோடு எம்மோடு வாழ்கிறார்.எடுத்துக்காட்டாக கார்த்திகைப்பூ என்பது தமிழ்த்தேசியப்பூ அதை நாம் மாவீரருக்கு நவம்பர் மாதத்தில் மாவீரரின் பெருமையைப் போற்றி வழிபடும் பூவாக தேசியத்தலைவரால் அறிவிக்கப்பட்டது.

ஆனால்  கார்த்திகைப்பூவின் தொன்மை புரியாத சைவர்களை இந்துக்கள் என்று தமிழர்களை மடைமாற்றும் கோயில்களும் கோயில் நிர்வாகங்களும் கார்த்திகைப்பூவை இறைவழிபாட்டில் பயன்படுத்த மறுத்துவிட்டார்கள்.தமிழ்தேசிய மலர் தமிழரின்தொன்மை மலர் கார்த்திகைப்பூவை இறைவழிப்பாட்டில் பயன்படுத்துவதற்கான தெளிவான புரிதலை இளம் தலைமுறை தமிழ்த்தேசிய உயிர்மெய்நேயர் கார்த்திக் நந்தகுமார் 2021ஆம் ஆண்டு மாவீரர் நினைவு மாதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

நீண்டநெடிய வரலாற்று பெருமைகளை தமிழன் என்ற திமிரோடு வாழ்வியலாக வாழ இன்றிலிருந்து உறுதியெடுப்போம்.தமிழன் என்ற திமிரோடு வாழ எமக்கு தடைபோடும் திராவிட சிங்கள ஆரிய இந்துத்துவ இந்திய போலிகளை உலகப் பந்தில் இருந்து விரட்டியடிப்போம்.அணிஅணியாக அணிதிரள்வோம்.

என்னாடுடடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE