பணவேட்டைக்காக சிக்கிய யி.யு.போப்

இந்துத்துவ சூத்திர அடிமைகள்  நிதி திரட்டும் வேட்டையில்

கனடாவில் ஈழத்திலிருந்து வந்த சைவத்தமிழர்களை இந்துக்களாக தங்களின் அறியாமையால்  அடையாளப்படுத்தும் சூத்திரர்களால் நிதி திரட்டும் வேட்டை. இன்று தமிழர் என்ற இன அடையாளத்தை சிதைத்து இந்துக்களாகவும் சூத்திரர்களாகவும் ஈழத்தமிழரின் தன்மானத்தையும் வீரவரலாற்றையும் உணராமல் கனடாவில் வாழ்கிறார்கள்.இந்த இடத்தில் ஈழத்தமிழரின் அடையாளத்தை இழிவுபடுத்துவதோடு யி.யு.போப்பின் தமிழிற்கு ஆற்றிய பணிகளையும் அவமதிக்கும்பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்ததாகப் பொய்யுரைப்போரின் அடிமைகளாக இந்துத்துவ சூத்திரர்கள்.

ஈழத்தமிழர்கள் தமிழீழமண்ணின் தொன்மைக்குடி.ஈழத்தமிழர்கள் தமது அரசியல் அதிகாரத்தை இழந்து இன்றோடு கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆகிறது.இந்த 200ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் அரசியல் அதிகாரத்திற்கான அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்கள்.இன்றும் அவ்வரசியல் தொடர்கிறது.

யார் இந்த ஈழத்தமிழர்? 

ஈழத்தமிழர்கள் இராவணப்பாட்டனின் வழி வந்தவர்கள்.சேரசோழபாண்டிய வரலாற்று வழிவந்தவர்கள்.எல்லாளன் பண்டாரவன்னியன் சங்கிலிய அரசன் வழிவந்த வீரமும் தன்மானமும் நிறைந்த போராட்ட வீரம் நிறைந்த சைவத்தமிழர்கள்.1948 இலிருந்து 1983வரை சிங்களமக்களிடமும் சிங்கள மக்களின் வாக்கால் அரசியல் அதிகார வலிமை பெற்ற சிங்கள அரசால் அழித்துக்கொண்டிருப்பவர்கள்.1983 ஆம் ஆண்டு முதல் 2009 வரை 20நாடுகளோடு ஒற்றை இனமான தமிழினமாக போரிட்டு தனித்தமிழீழக் குடியரசை நிறுவிய தேசியத்தலைவரின் இரத்த உறவுகள்.2009இல் உலகப்பந்தில் 20நாடுகளால் அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டம் மண்டியிடாமல் மௌனிக்கப்பட்டு அறவழியில் அறிவாயுதப்போராக உலகப்பந்தில் உருண்டு விளையாடுபவர்கள் ஈழத்தமிழர்கள்.வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.

கடந்த 50ஆண்டாக கனடாவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களில் 10விழுக்காட்டினர் மட்டுமே ஈழத்தமிழர்களாக வாழ்கிறார்கள்.

கனடாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 90விழுக்காட்டினர் தம்முடைய இனமொழி சமய வரலாற்றைத்தெரியாதவர்களாகவும் பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்ததாகச் சொல்லும் பொய்யர்களிடம் ஏமாந்து இந்துத்துவ சூத்திரராக வாழ்கிறார்கள்.இவ்வாழ்வு ஈழமண்ணுக்கும் ஈழத்தமிழன் என்ற வீரவரலாற்று அடையாளத்திற்கு அவமரியாதையாகும்.

இவ்அவமரியாதையை தூக்கிச் சுமப்பபவர்களில் முனைவர்கள் பேராசிரியர்கள் தமிழ் ஆசிரியர்கள் வணிகர்கள் மருத்துவர்கள் என பல்துறை சார்ந்தோர்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்ததாகப் பொய்யுரைப்போர்களை ஆதரிப்பவர்கள்.இந்துத்துவ சூத்திரர்களாக பிரம்மாவின் நெற்றியில் பிறந்ததாகப் பொய்யுரைப்போரின் காலில் விழுந்து கும்பிடும் முனைவர்கள் பேராசிரியர்கள் தமிழ் ஆசிரியர்கள் கல்விமான்கள் வணிகமுதல்வர்கள் பேராசிரியர்கள் முனைவர்கள் மருத்துவர்கள் பெண்ணியம் பேசும் சூரிகள் எனப்பபலரும் உள்ளடக்கம்.இவர்கள் அனைவரும் தன்தாய்மொழியில் கையொப்பமிடமறுக்கும் தமிழின எதிர்ப்பாளர்கள்.

யார் இந்த சூத்திரர்கள்? 

வீரமும் பல்துறை ஆளுமையும் நிறைந்த அடையாளத்தோடு ஈழத்தமிழர்கள் கனடாவுக்கு இடம்பெயர்ந்த பின் தம்மை இந்துத்துவ சூத்திரராக பிரம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்ததாக பெரும் பொய்யுரைப்போரின் அடிமைகளாக  அறியாமையால் தம்மை மாற்றிக்கொண்டார்கள்.

பிரம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்ததாகப் பொய்யுரைப்போர்  உயிர்மெய்நேய அறிவோ படிப்பறிவோ பண்பாட்டறிவோ மனிதப்பண்போ இல்லாமல் அடுத்தவனின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதற்காக பொய் சொல்லியும் கடவுளின் பேரால் தமிழர்களை தமிழர்களின் வரலாற்றைத் திரிவுபடுத்தியும் ஒழுக்கம் நிறைந்த தமிழ்ப்பெண்கள் திருமணம் செய்யும்போது  காலம்காலமாக வேசிப்பட்டம் கொடுத்து தமிழரின் பணத்தில் வாழ்பவர்கள். பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் நீண்டநெடிய வரலாற்றுப் பெருமை நிறைந்த தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்று நம்பிக்கைத்துரோகிகள்.இந்த  இந்துத்துவ சூத்திர அடிமைகளுக்கு யி.யு.போப் அவர்களுக்கு சிலை வைப்பற்கு எந்தத் தகுதியும் கிடையாது. 

கனடா வாழ் தமிழ்மக்களிடம் மட்டடக்களப்பு பாற்பண்ணை நிறுவதற்காக திரட்டப்பட்ட நிதி எங்கே?என்ற உண்மையயை மூடிமறைத்தவர்கள் யி.யு.போப் அவர்களுக்கு சிலை வைக்கும் தகுதி கிடையாது.

த.தே.கூட்டமைப்பைக் காட்டி 10கோடி கனடாவெள்ளியைத் திரட்டி அதன் கணக்குகளை தமிழ் மக்கள் முன் ஒப்படைக்காதவர்கள் யி.யு.போப் அவர்களுக்கு சிலை வைக்கும் தகுதி கிடையாது.

யி.யு.போப் அவர்கள் கல்வியாளர்.கனடாவில் பிறந்தவர்.கிறித்தவ மதத்தைப் பரப்ப தமிழ் நாட்டிற்கு சென்றவர். கிறித்தவ மதத்தினூடாக தமிழை படித்து தமிழில் உள்ள நூல்களை தன் தாய்மொழி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

யி.யு.போப் தன்னுடைய மொழிக்கு சமயத்திற்கு உண்மையாகவும் அத்தோடு இன்னொரு மொழியான தமிழின் பெருமை ஆளுமை அறிந்து அதற்கும் உண்மையாக உழைத்த பேரறிஞர் யி.யு.போப்.

ஈழத்தமிழர்களின் அரசியல் அதிகாரத்திற்காக குரல் கொடுக்காமல் இனப்படுகொலையின் நீதிக்காக குரல்கொடுக்காமல் தமது அடையாளத்தை இந்துத்துவ சூத்திரராக மாற்றியவர்கள் கனடாவில் யி.யு.போப் அவர்களுக்கு சிலை வைப்பது என்பது யி.யு.போப் அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பெரும்பணியை அவமதிப்பதாகும்.

கனடாவில் தமது அடையாளத்தை இழந்து இந்துவாகவும் சூத்திரராகவும் சிங்கள இந்திய திராவிட அடிமைகளாக வாழும் இந்துத்துவ சூத்திரர்கள் யி.யு.போப் அவர்களுக்கு சிலை நிறுவும் தகுதி அற்றவர்கள்.இவர்கள் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த இந்துத்துவ சூத்திரர்களிடம் இருந்து பெரும்தொகை பணத்தை திரட்டுவதற்காக மட்டுமே இச்சிலையை வைக்க முனைகிறார்கள்.

இந்த இந்துத்துவ சூத்திரர்கள் தமிழில் கையொப்பமிடுவதை அவமானமாகக் கருதி ஆங்கில மொழியில் கையொப்பமிடும் வேற்றின அடிமைகள்.இந்த வேற்றின அடிமைகள் யி.யு.போப் அவர்களுக்கு சிலை வைக்கும் தகுதி அற்றவர்களே.

தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே தமிழைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே. இப்பணவேட்டையில் இருந்து தமிழர்கள் தப்பித்துகொள்வதே சிறப்பாகும்.

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE