பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான தமிழர்கள் அரசியல் கட்சிகளின் தலையீடின்றி நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என கடந்த ஆண்டு மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10பேரும்  சிறையில் இருந்துவிடுதலை ii

கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ததற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்து
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றம் பிணை வழங்கியதையடுத்து  10 பேருக்கும் சிறைச்சாலையில் அன்டிசன் பரிசோதனைகள் பரிட்சிக்கப்பட்டு பகல் 1 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கில் ஆசிராகிய சிரேட்ட சட்டத்தரணி ரம்சீன் உட்பட சட்டததரணி குலாம் விண்ணப்பித்த பிணை மனுவின் அடிப்படையில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 2022 சனவரி 26  ஆம் நாள் மட்டக்களப்பில் தேசியத்தலைவரின் படத்தை முகநூலில் பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையும் விடுதலையானார்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE