இந்திய காவல்துறை பொறுப்பதிகாரியாகவும் சிறந்த பேச்சாளராகவும் உலகப்பந்தில் பொதுப்பணியாற்றிய மதிப்புக்கும் போற்றுதலுக்குமுரிய இ.கா.பொ முனைவர் கலியமூர்த்தி அவர்கள் கல்வியிலும் அறிவிலும் தன்னுடைய ஆற்றலையும் ஆளுமையையும் வளமாக்கிக் கொள்பவர்.அவரை கனடாவாழ் தமிழர்கள் உலகம் தழுவிய தமிழர்களை உள்ளடக்கிய 12கோடி தமிழர்கள் சார்பாக பல்லாண்டு பல்வள நிறைவோடு வாழ வாழ்த்துகிறோம்
2052 நளித்திங்கள் 15ஆம் நாள் திங்கட்கிழமை(29.11.2021) தரணி போற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் “பெண் கவிகள் பேசும் பெண்ணுரிமை” என்னும் தலைப்பில் இ.கா.பொ கலியமூர்த்தி அவர்கள் மூன்று ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த முனைவர் பட்டப் படிப்பினை நிறைவு செய்துள்ளார்.
எழுத்துத் தேர்வுகளில் முதல்தரநிலையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஐயா கலியுகமூர்த்தி அவர்கள் 300 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை கையளித்து 2021 நவம்பர் 29 ஆம் நாள் திங்கட்கிழமை நேர்முகத்தேர்விலும் பங்கேற்று முனைவர் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.
ஐயா கலியமூர்த்தி அவர்கள் தமது 67 ஆவது அகவையில் முனைவர்பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இந்திய காவல்துறைப் பொறுப்பதிகாரிப் பணி நிறைவேற்றியதன் பின் தமிழில் முனைவர் பட்டத்திற்கு படித்து முதல்தர நிலையில் தேர்வு பெற்றவர். மேடைப்பேச்சில் சிறந்த பேச்சாளராகவும் இளையதலைமுறையினருக்கான வழிகாட்டியாகவும் சிறந்த குமூகப்பணியாளராகவும் தமிழ்மக்களிடையே புகழ்பூத்த பெருந்தலைவர் முனைவர் கலியமூர்த்தி அவர்கள்.
அவருடைய பேரப் பிள்ளைகள் அனைவருமே மருத்துவ மேற்படிப்பு முடித்துவிட்டு மருத்தவர்களாக பணியாற்றுகிறார்கள்.
ஐயாவின் தந்தையார் மருத்துவராகவேண்டும் என விரும்பியதாகவும் ஏழ்மையின் காரணமாக நிறைவேற்றமுடியவில்லை.,அது ஏழ்மையின் காரணமாக நிறைவேற வில்லையே என்று வருந்திய தந்தையின் கனவும், DR. A.KALIYAMURTHY MA “Ph.D.” என்று எழுத விருப்பப்பட்ட ஐயாவின் கனவும் இன்று ஒருசேர நிறைவேறியுள்ளது. “கடின உழைப்பு என்றுமே வீண் போவதில்லை”
“படிப்பதற்கு வயது தடையில்லை”.