பிரம்ரனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மட்டுமே நிறுவப்படவேண்டும்

2021 ஆம் ஆண்டு தை மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்கள மக்களின் வாக்கால் அரசியல் அதிகாரத்தைப் பெற்ற சிங்கள அரசால் உடைத்தெறியப்பட்டது.

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் 3மாதத்திற்குள் மீண்டும் யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிங்க ள அரச ஆட்சிக்கட்டமைப்பின் தடைகளைத் தாண்டி முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கட்டி 2023ஆம் ஆண்டும் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் நிகழ்வு நிறைவேறியிருக்கிறது.

 

கனடா பிரம்ரன் நகரில் தமிழ்மக்களை ஏமாற்றி சிங்கள மக்களின் வெற்றிக்களிப்பின் சின்னமான தாமரை வடிவ தூபியை நிறுவ சிங்கள அரசின் தமிழர்களுக்கு எதிரான துணைப்படையாக சில தமிழர்கள் செயற்படுகிறார்கள்.

 

வலி சுமந்த தமிழ் மக்களால் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிகளை புறந்தள்ளிவிட்டு தாமரை வடிவிலான தூபியை நிறுவுவது தடுக்கப்படும்.

 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்றால் தமிழர்களை முன்னிலைப்பபடுத்துவதை தடுப்பதற்காக இனப்படுகொலைத்தூபி எனப் பெயர் மாற்றி அதையும் எல்லா இனங்களுக்கும் பொதுவான இனப்படுகொலைத்தூபியாக கட்டமைத்த படித்த மேதாவிகள் என பீத்திக்கொள்ளும் தமிழின எதிர்ப்பாளர்களால் தமிழினப்படுகொலையை மூடி மறைக்கும் பாரிய திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு எதிராக தாமரை வடிவிலான நினைவுத்தூபி வைக்கப்பட்டால் சட்டவழியான பல பணிகளை தமிழர்கள் முன்னெடுப்போம்.

 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தமிழின அழிப்பை மட்டுமே வெளிப்படுத்தும் தூபி.ஆகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில்  வைக்கப்பட்டு இன்று உலத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகத்தமிழர்களுக்கு தமிழினப்படுகொலையை நினைவுக்கு கொண்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மட்டுமே பிரம்ரன் மண்ணில் நிறுவவேண்டும்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE