பிரான்சில் பொண்டி நகரில் நடந்த மாநகரசபைத் தேர்தலும் 2தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.

 

பிரான்சின் 93 பிராந்தியத்தில் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் பொண்டி (Bondy) நகர மாநகரமுதல்வருக்கான தேர்தல் 2022 சனவரி 30 ஆம் நாள் நடைபெற்றிருந்தது இத்தேர்தலில் 61;04 விழுக்காடு வாக்குகளை பெற்று திரு. stephan HERVE தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றார்கள். 

 

முதற்தடவையாக இப்பிரதேசத்தில் இவரின் அணியில் இரண்டு தமிழர்கள் போட்டியிட்டிருந்தனர் . இதில் 

 பொண்டித் தமிழ் சோலையின் பழைய மாணவி .செல்வி பிறேமினி பிரபாகரன் அவர்களும் (இவர் தாதியராக பணியாற்றிவருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது ) , தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரும். பொண்டித் தமிழ்ச் சோலையின் நிர்வாகியுமான திரு. பாலசிங்கம் பிரபாகரன் அவர்களும் திரு. stephan HERVE அவர்களின் அணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளர். 

 

நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு பெரும் ஆதிக்கத்தை செலுத்தியது. புலம்பெயர் தேசத்து அரசியலில் தமிழ் மக்களும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

 

பொண்டி முதல்வர் திரு. stephan HERVE அவர்கள் கடந்தகாலம் முதல் அங்கு வாழும் தமிழ் மக்களுடன்  நல்லதோர் சகோதரத்துவத்தை பேணிவந்தவர், தான் முதல்வராக பதவி வகித்தகாலத்தில் தமிழ்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர் தனது மாநகரத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து தமிழ் மக்களுக்கு சிங்களதேசத்தால் இழைக்கப்பட்டது தமிழினப்படுகொலை என்பதையும், சிறீலங்காவின் ஆட்சிப்பீடத்தில் உள்ள கொலைக்குற்றவாளிகளை சர்வதேசக்கூண்டில் ஏற்ற வேண்டும், தமிழீழ மக்களின் தேசியம் அங்கீகரிக்கப்பட்டு தனித்தமிழீழம் அமைவதே தீர்வாகும் என்று தீர்மானத்தை சென்ற ஆண்டு நிறைவேற்றியிருந்தனர். மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல், தமிழ்த்தேசியத் தலைவரின் அகவைநாள். மற்றும் தேசிய மாவீரர்நாள், இப்பகுதியில் நடைபெற்ற தேசத்தின்குரல் நினைவேந்தல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தவர். தமிழீழ மக்களின் மனங்களில் அரசியலுக்கு அப்பால் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம் என்ற நம்பிக்கையைத்தந்த பல அரசியல் வாதிகளில் இவரும் ஒருவராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

திரு. stephan HERVE அவர்கள் பிரஞ்சு தேசத்தின் தமிழ் மக்களின் நீதிக்காக தன்னால் இயன்ற அனைத்து பங்களிப்பையும் செய்துதருவதாக உறுதியளித்துள்ளார்.

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE