பல நூறு ஆண்டுகளாக ஈழமண்ணில் திருப்பி அடிக்காமல் சிங்களவனிடம் அடிவாங்கியவன் ஈழத்தமிழன்.யாழ்ப்பாண அரசு 1621 ஆம ஆண்டு போர்த்துக்கேயரால் சிங்களவனின் துணையோடு வீழ்த்தப்பட்டது.இதுவே ஈழத்தமிழரின் அரசு முதலாவதாக அரசியல் அதிகாரம் இழந்த நிலை.நாம் 1621 இலிருந்து இன்று வரை அந்நியரின் பிடியில் அரசியல் அதிகாரம் இழந்து சிக்கியவர்கள்.
1621 இலிருந்து பல இலட்சம் உயிர்களை உடைமைகளை நிலங்களை பண்பாட்டு விழுமியங்களை வேளாண்மையை மீன்பிடிக்கும் வளங்களை இழந்தான்.ஈழத்தின் தன்மையும் வரலாற்றையும் மொழியையும் அந்நியர்கள் அழிவோடு சிங்களவன் மிக வீச்சாக சிங்கள நாடாகத் துடித்துக்கொண்டிருக்கிறான்.
கடந்த 362 ஆண்டுகளாக சிங்களவன் அடித்தபோது அடியை வாங்கிக்கொண்டு சிங்களவனுடன் ஒன்றாக வாழத் துடித்தவன் ஈழத்தமிழன்.அடிக்க அடிக்க அடிவாங்கும் முட்டாள் அடிக்க அடிக்க திருப்பி அடிக்கத்தெரியாத முட்டாள் என்ற பழமையை ஈழத்தமிழன் கடந்த 362 ஆண்டுகளாக அடிவாங்கியவன்.
1983 ஆம் ஆண்டு ஒற்றைத் தமிழனாக தமிழீழமண்ணில் தமிழனை அடித்த சிங்களப்படையைக் குண்டுவைத்து அழித்து அடிவாங்கிய ஈழத்தமிழனுக்கு துணிவு என்ற பாலையூட்டிய தலைவன் நமது தேசியத்தலைவன்.
தேசியத்தலைவர் மட்டுமே தமிழீழக்குடியரசை நோக்கிய அரசியல் அதிகாரத்திற்கான போரை ஈழமண்ணில் சமரசமின்றி 2009 வரை தமது வாழ்வை எமக்காக ஈகம் செய்த தலைவன்.
ஈழவிடுதலைக்காக போராட புறப்பட்ட அமைப்புகள் தமிழீழ அரசியல் கட்சிகள் இந்திய ஒன்றிய தமிழ்நாடு மாநில மற்றும் சிங்கள அரசின் அடிமைகளாக மட்டும் அல்ல தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிராக செயல்பட்டார்கள்.இவை அனைத்தையும் தாண்டி தமிழீழக் குடியரசை நிறுவி உலகநாடுகளிடம் ஈழத்தமிழர்களையும் தமிழீழ மண்ணையும் அடகு வைக்காமல் தமிழீழ மக்களின் வளத்தில் உண்மையாக உழைத்த தலைவன்.
1983 ஆம் ஆண்டு கந்தர்மடத்தில் வீடுகளை கடைகளை எரித்தும் பல தமிழர்களைச் சுட்டதாலே தான் திருநெல்வேலித் தாக்குதலில் 13 சிங்களப்படைகளை குண்டுவைத்துத் தாக்கியழிக்கப்பட்டார்கள்.
மண்டியிடாத தலைவன் பின்னால் பலகோடித்தமிழர்கள் அணிதிரண்டார்கள்.ஈழத்தமிழனின் வளத்தை மட்டுமே நம்பி தமிழீழக்குடியரசைக்கட்டிய தலைவன்.
உலகத்தில் எந்த நாட்டின் உதவியின்றி கட்டியெழுப்பிய தமிழீழக்குடியரசின் கட்டமைப்பு 20 உலகவல்லாதிக்க நாடுகளின் படைகளின் வலிமைக்கு தமிழீழப்படை வலிமையை சமநிலைப்படுத்திய தலைவன்.
சிங்கள அரசையும் தமிழீழ அரசையும் ஒரேமேசையில் இருத்தி உலகத்தமிழனுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த எங்கள் தலைவன்.
திம்புமுதல் 2009 வரை தமிழரின் அரசியல் அதிகாரத்திற்காக தமிழீழ மக்களுக்காக நின்று களமாடிய உயரிய தலைவன்.உலகநாடுகளிடம் மண்டியிடாத ஒற்றைத் தலைவன் நமது தேசியத்தலைவன்.
வீரம் செறிந்த தேசியத்தலைவரின் மண்ணின் தமிழின அழிப்பாளர்கள் விருந்தினராக அழைத்ததைத் தடுத்து மண்டியிடாத தேசியத்தலைவனுக்காக இரவுபகலாக உழைத்த அத்தனை உயர்ந்த உயரிய உள்ளங்களுக்கு நன்றி.
தேசியத்தலைவனின் உயரிய உன்னதமான தமிழீழக்குடியரசை கட்டியெழுப்பி தமிழீழ மக்கள் அனைத்து உரிமைகளும் பெற்று சிறப்பாக வாழும்வரை எமது அறவழிப்போர் தொடரும்.