பொங்கல் நாளன்று வல்வை அனைத்துலக பட்டத்திருவிழா தமிழினப்படுகொலையாளர் குடும்பத்தின் ஆதரவோடும் சிங்கள இனவெறியரச விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவோடும் நடக்க இருப்பதாக தமிழீழ மண்ணின் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
ஈழமண் சிங்கள இனவாதிகளின் கையில் சிக்கிய காலத்தில் இருந்து இன்றுவரை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ந்தும் மறுத்து வருபவர்கள்.
வல்வை மண்ணின் வீரத்தை உலகப்பந்தில் பறை சாற்றியதோடு 20 உலக வல்லாதிக்க அரச படை வலுவுக்கு ஈடாக தமிழீழ அரச படை சமநிலையை உலகப்பந்தில் நிறுத்தி ஈழத்தமிழர்களின் வீரத்தை உறுதிப்படுத்திய நமது தேசியத்தலைவர் பிறந்தமண்.
ஈழ வரலாற்று வழித்தடத்தில் வல்வெட்டித்துறைக்கு தனித்துவமான பெருமை தமிழர்களிடம் மட்டும் அல்ல உலக அரங்கில் சிறப்பாக இருந்தது.
வல்வை அனைத்துலக பட்டமளிப்பு விழா தமிழினப்படுகொலையாளர்களின் ஆதரவோடு நடப்பது வல்வை மண்ணுக்கும் 12கோடி தமிழர்களுக்கும் இழுக்கு அவமானம்.
இன்று வல்வெட்டித்துறை மண் வீழ்ந்த வீரத்தோடும் மண்டியிட்ட மானத்தோடும் தமிழினப்படுகொலையாளரிடம் சரணடைந்து வல்வை அனைத்துலக பட்டத்திருவிழாவால் அழுக்கும் இழுக்கும் நிறைந்த அடிமைகளின் கூடாரம் வல்வெட்டித்துறை.
இந்த இழுக்கு தமிழ்த்தேசியத்தலைவருக்கும் அவரோடு தமிழீழ விடுதலையில் களமாடி வீரச்சாவைத் தழுவிய மாவீரரை இழிவுபடுத்தும் ஈனர்களின் இழிபணி.
இந்த இழுக்கு தமிழீழ விடுதலையில் களமாடி இன்று உயிரோடு வாழும் விடுதலைப்போராளிகளை இழிவுபடுத்தும் ஈனர்களின் இழிபணி.
வல்வை பட்டத்திருவிழாவில் ஆதரவு கேட்டுச் சென்ற தமிழினத்துரோகிகள் ஏன் இதுவரை காலமும் வல்வை மக்களின் அடிப்படை உரிமையை வழங்கும்படி தமிழினத்தை அழித்தவரிடம் கேட்கவில்லை.
தமிழின அழிப்பாளரிடம் ஏன் இந்த தமிழினத்துரோகிகள்
1.தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
2.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதி
3.காணி அபகரிப்பு
4.சிங்கள குடியேற்றம்
5.சைவர்களின் கோயில் அபகரிப்பு
6.இனப்படுகொலைக்கான நீதி
7.அடிப்படை அரசியல் உரிமை
8.சிங்கள படைகளை வல்வெட்டித்துறையில் இருந்து அகற்றுதல் என ஈழமண்ணில் தமிழர்களின்
பல்வேறு சிக்கலுக்கு தீர்வைக் கேட்காததேன்?
இந்த தமிழினப்படுகொலையாளர்கள் ஏன் வல்வை அனைத்துலக பட்டமளிப்பு விழாவிற்கு ஆதரவு அளிக்கின்றார்?
தமிழினத்துரோகிகள் தமது கட்சியை வல்வெட்டித்துறையில் ஊன்றி வல்வெட்டித்துறை மக்களை கோமணமும் இல்லாமல் விரட்டிவிட்டு சிங்களவர்களை குடியேற்றப் போட்ட சதி வலையில் சிக்கியவர்கள் வல்வெட்டித்துறை தமிழினத்துரோகிகள்.தமிழ்தேசியத்தை அடியோடு அழித்து சிங்கள தேசியத்தை வல்வெட்டித்துறையில் நிலைபெறுவதற்கான சூழ்ச்சி.
வல்வெட்டித்துறையில் சிங்களவர்களின் கட்சிக்கான வாக்கை திருடும் சதியாகவே புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக நம்புகிறோம்.
1956 முதல் 200க்கு மேற்பட்ட இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசின் வழிவந்த இன்றைய இனப்படுகொலையாளர்கள் தமிழர்களைக் கொலை செய்யவில்லை என்று உலகப்பந்தில் போராடி வருகிறார்கள். இனப்படுகொலையாளரிடம் பிச்சையெடுப்பதோடு தமிழினப்படுகொலையாளரோடு கை கோர்க்கும் வல்வைவாழ் தமிழினத்துரோகிகளுக்கு வல்வையிலும் வல்வையை அண்டிய ஊர்களிலும் தமிழினப்படுகொலையாளர்கள் நடத்திய தமிழினப்படுகொலையை நினைவுபடுத்தும் பொறுப்பு தமிழ்த்தேசிய உணர்வாளருக்கான மிகப்பெரிய பொறுப்பாகும்.
1.1984 செப்டம்பர் 16 ஆம் நாள் 16 சிங்கள அரசின் கீழ் திக்கம் ஊரில் வாழும் 16 தமிழர்களை சிங்கள காவல்துறை சுட்டுக் கொன்றது.காவல்துறையில் இருந்தவர்கள் அனைவரும் சிங்களவர்கள்.
பருத்தித்துறை காட்லிக்கல்லூரி நூலகமும் அறிவியல் மாணவர்கள் பயன்படுத்தும் விஞ்ஞான ஆய்வுக்கூட்டம் முற்றாக எரியூட்டப்பட்டது.கல்லூரி தமிழர்களின் கல்லூரி.எரித்தவர்கள் சிங்கள காவல்துறையினர்.
2.1985 ஆம் ஆண்டு மே 10 ஆம்நாள் வல்வெட்டித்துறையில் 70 இளம் தமிழர்களை சிங்கள அரசபடையினர் கொலை செய்தார்கள்.இந்த 70 தமிழர்களும் சிங்கள அரசின் குடிமக்கள் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவர்கள்.
1987 மே 29 ஆம் நாள் இரவு 11:30 மணிக்கு அல்வாய் முத்துமாரி அம்மன் கோயிலில் தஞ்சமடைந்த பலநூறு தமிழர்கள் பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து வீசப்பட்ட குண்டுத் தாக்குதலில் பலியானவர்கள்.அல்வாய் முத்துமாரி அம்மன் கோயிலில் தஞ்சமடைந்த10,000 தமிழர்களும் அல்வாய் இன்பருட்டி திக்கம் வதிரி நெல்லியடி தம்பசிட்டி புலோலி போன்ற அயல் ஊர்களைச் சார்ந்தவர்கள்.
1990 ஆம் ஆண்டு ஆகட்டு 29 ஆம் நாள் காலை 9.30 மணியளவில் நெல்லியடிச் சந்தையில் வானூர்திகள் குண்டுத்தாக்குதல் சிங்கள அரச வானூர்திப்படையால் தாக்கி அழிக்கப்பட்டது.இதில் 40 தமிழர்கள் சிங்களப்படையால் கொல்லப்பட்டார்கள். பலர் காயமடைந்தவர்கள்.
2006 ஆம் ஆண்டு மே 4 ஆம் நாள் நெல்லியடியில் சிங்களப்படையால் 7 இளம் தமிழர்கள் கொலைசெய்யப்பட்டார்கள்.
இப்படிப் பல இலட்சம் தமிழர்களை கொன்றதோடு பல ஆயிரம் தமிழர்களை முதலைகளுக்கு இரையாக்கிய தமிழின அழைப்பாளர்களோடு கை கோர்த்திருக்கும் வல்வெட்டித்துறை வாழ் தமிழினத்துரோகிகள்.
இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது. ஆசிரியரோ எழுத்தாளரோ 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.ஆசிரியரோ எழுத்தாளரோ 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.